- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் 2
இன்று தாத்தாவிடம் பேசி தனக்கான பங்கை வாங்க வேண்டும் என்ற முனைப்போடு அலுவலகத்திற்கு கோட் ஷீட் என சகிதமும் கிளம்பி போனவனை அப்படியே போக விட்டிருக்குலாம் அவள். நேற்று தனக்காக வந்த சந்தோஷத்தில் அவன் குணம் மறந்து கையை பிடித்து விட்டாள் கீதாஞ்சலி.
அவள் விரல் நேரடியாக அவன் கையை கூட தீண்டிடவில்லை. கை சட்டையை தான் பிடித்து நிறுத்திருந்தாள் நன்றியை சொல்ல. ஆனால் தொடாததை தொட்டது போல் முக சுழிப்போடு அவளை பார்த்தவன் கீதா சொல்ல வருவதைக் கூட காதில் வாங்காது கன்னத்தில் அறைந்திட அதிர்ந்து போய் நின்றாள் சிறு பெண்.
“ ப்ளடி ஸ்லட் *&#### . உன்கிட்ட எத்தனை முறை சொல்லிருக்கேன் என் பக்கத்துல கூட வாராதன்னு. எவ்ளோ தைரியம் என் கையை பிடிக்க “ மீண்டும் ஒரு அறையைக் கொடுத்து அவள் மீதான ஆத்திரத்தை தீர்க்க முயன்றான் அமுதன்.
“ இனி இந்த மாதிரி பண்ணுவ “ தலை முடியை பற்றி இழுக்க கண்ணீரும் கதறலுமாய் அவன் முன் வெளிறி போய் நின்றவள் வேகமாய் தலையை ஆட்டினாள் வர மாட்டேன் என்று.
“ நான் உங்களுக்கு நன்றி சொ “
“ பேசாதடி” நரம்புகள் புடைக்க கத்திட நடுங்கி போனாள் பயத்தில்.
அவளை தொட்ட கையை அருவருப்பாய் கை குட்டையில் துடைத்துக் கொண்டவன் “ இங்க பாரு. அந்த கிழவங்கிட்ட என்னத்த காட்டி மயக்கினியோ.. அது என் பிரச்சனை இல்லை. அவர் இடம் கொடுக்குற திமிருல என் பக்கம் வந்த கொன்னு போட்டிருவேன் ஜாக்கிரதை. செத்தாலும் சாவேன்னே தவிர உன்னை மாதிரி ஒரு ஆசிங்கத்து கூட சகிச்சுக் கிட்ட வாழ நான் ஒன்னும் காவியன் இல்லை. எல்லாம் கொஞ்ச நாள் தான். நான் சொல்லும் போது டிவோர்ஸ்ல கையெழுத்து போட்டு தப்பிச்சு ஓடிரு. இல்லை முடியாதுனு முரண்டு பிடிக்கிறதா இருந்தா உன்னை கொன்னு உன் இடத்துல இன்னொருத்தியை கொண்டு வந்து நிறுத்துவேன் “ அழுத்தமாய் அவள் கண்களை பார்த்து சொல்ல மிரண்டு விழித்தாள் கீதாஞ்சலி.
பின்னந்தலையை தட்டி அவள் முன் குஷனை இழுத்து போட்டு அமர்ந்த அமுதன் “ நான் இதெல்லாம் செய்ய மாட்டேன்னு நினைக்காத. சொன்ன எல்லாத்தையும் சொன்ன மாதிரியே செஞ்சு முடிப்பேன். உன் பிணம் கூட யாரு கையிலும் கிடைக்காது. விவரமா கொடுக்குற பணத்தை வாங்கிட்டு பிழைக்கிற வழியை பாரு” காலால் வழியில் இருப்பவளை தள்ளிவிட்டு வெளியேறி அவன் சென்று விட உறைந்து போய் அதே இடத்தில் சிலையாகி போனாள் கீதாஞ்சலி.
அவளா கேட்டாள் இந்த வாழ்க்கையை? அவளா ஆசைப்பட்டாள் அவனை திருமணம் செய்து கொள்ள? ஏதோ கடவுள் போல் ராஜமாணிக்கம் வாழ்க்கையில் வந்தார். என் வீட்டு மருமகளா வா என யாருமற்றவளை நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்தார். கனவிலும் இப்படி ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது இல்லையே.
நினைத்து பார்க்காத வாழ்க்கை கிடைத்த சந்தோஷம் கூட முழுதாக அனுபவிக்க விடாமல் மொத்த வெறுப்பையும் கொட்டிவிட்டு போய் விட , உடைந்து ஒடுங்கி போனாள் கீதாஞ்சலி. விவரமற்றவள் தான் அதற்காக மற்றவர்கள் தன்னை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறியாத அளவிற்கு முட்டாள் இல்லை.
அவள் ஒரு இடத்திற்குள் நுழையும் வரை தமிழில் பேசும் குடும்பம் , அவள் நுழைந்து விட்டால் ஆங்கிலம் இல்லையேல் இந்திக்கு மாறி நக்கல் சிரிப்புகளை சிரிப்பர்.
பல நேரங்களில் கடந்து விடுவாள். சில நேரங்களில் தனியே அமர்ந்து ஆதங்கத்தை தீர்த்து கொள்வாள். மனம் விட்டு ராஜகுமாரி பாட்டியிடம் சொல்லவும் அவளுக்கு பயம். என்னதான் இருந்தாலும் அவர்கள் ஒரே குடும்பம் தான் வேறு என்று உணருபவளுக்கு தனிமை மட்டுமே.
வாழ்க்கை போகும் போக்கில் மாறலாம் என நம்பியவளுக்கு கிடைத்த பரிசுகள் ஏராளம். வீட்டின் மூத்த மருமகள் ஹேமலதா சொந்த மருமகள் என்றும் பாராமல் புதிய விதிமுறைகளை அவளுக்கென வகுத்து அடுக்கிருந்தார். ‘ கிட்சனுள் வர கூடாது. மறந்தும் சாமி அறைக்குள் நீ செல்லவே கூடாது. அப்புறம் என் பிள்ளையை கட்டிக்கிட்டேன்னு அத்தைன்னு சொல்லிக்கிட்டு வந்த கன்னம் பழுத்திரும். இந்த எந்த பொருளையும் தொட்டுராத. எல்லாம் விலை உயர்ந்த பொருள். உன்னை மாதிரி ஒரு குப்பை இல்லை. முக்கியமா நான் சொன்ன எதையும் நீ மாமா கிட்ட சொல்லிக்க கூடாது. புரிஞ்சதா’ அதட்டி அவளை அறையிலே அடைத்து விட்டனர்.
மாணிக்கமும் குமாரியும் பேசும் போது கொஞ்ச நேரத்திற்கு கவலை மறந்திருப்பாள்.
ஒரு நாள் இரவு மாணிக்கம் மட்டும் இரவு குளிரை பொருட்படுத்தாமல் கார்டனில் அமர்ந்திருப்பதை கவனித்தாள் கீதா. யாரும் அங்கு இல்லை. இரவு காவலாளிகள் மட்டும் கேட்டில் அமர்ந்து அவர்கள் வேலையை பார்க்க அறைக்குள் அமுதனும் இல்லாத நிம்மதியில் கீழே சென்றவள்
“ தாத்தா!! தூங்கலையா? “ மெல்லிய அவள் குரலில் மது குடித்தவர் புன்னகையாய் ஏறிட்டார் அவளை.
“ என்னை கேட்குறது இருக்கட்டும் நீ தூங்காம என்ன பண்ணுற?”
“ தூக்கம் வரல அதான் “ இயல்பாய் சொல்லிட அவர் முகம் தான் மாறியது.
“ உன் நிம்மதியான வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்ல “ உடைந்து சொல்ல பதறி போனாள் கீதா.
“ என்ன தாத்தா இப்படி பேசுறீங்க? அதெல்லாம் இல்லை. தூக்கம் வரல அவ்ளோ தான். நீங்க உள்ள வாங்க “ அக்கறையாய் அவள் சொல்ல பாவமாக தான் தோன்றியது அந்த பெண்ணை பார்க்க.
அவரும் அறியாமல் இல்லை வீட்டார்கள் கீதாவை நடத்தும் விதம். தவறு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு. கொடுத்த வாக்கை காப்பாத்த முடியவில்லையே என்ற வலி.
நகராமல் அமர்ந்திருந்தவர் “ வந்து இங்க உக்காரு கீதா “ முன் இருக்கையை கண் காட்ட அமைதியாய் வந்து அமர்ந்து கொண்டவளுக்கு எப்போதும் மாணிக்கத்திடம் மட்டும் தயக்கம் இருந்ததில்லை.
காலியான கண்ணாடி குவளையில் மதுவை ஊற்றியவர் “ எனக்கு எதும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்க கீதா. எல்லாம் எனக்கும் தெரியும். என் மகன் மருமகள்கள் எப்படி உன்னை ட்ரீட் பண்ணுறாங்கனு. நான் பெத்த பிள்ளைங்க என் குணத்துல ஒரு சதவீதம் கூட இல்லையேனு நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு” நீண்ட மூச்சை இழுத்து விட சங்கடமாய் உணர்ந்தவள்
“ எல்லாம் மாறும் தாத்தா. நீங்க அதை பற்றி கவலைபடாதீங்க. குடிசை வீட்டுல வாழ வேண்டியவளை இப்படி உச்சியில கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க. என்னாலையே இத ஏற்க முடியாத போது மற்றவங்க எப்படி தாத்தா. எல்லாத்துக்கும் கொஞ்சம் காலம் எடுக்கும். நீங்க என்னை பற்றி யோசிக்கிறத விடுங்க “
“ எப்படிம்மா விட சொல்லுற? உன்னை ராணி மாதிரி என் வீட்டுல பார்த்துப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கேன். ஆனா இங்க உன்னை நடத்துறத பார்த்தா கண்டிப்பா வாசகி வருத்தப்படுவா. அவ வாழும் போதும் நான் ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கல. செத்த பிறகும் கொடுத்த வாக்க காப்பத்துல” பெரியவர் கண் கலங்கிட
“ தாத்தா தயவு செஞ்சு அழாதிங்க. மனுஷங்க நாம நினைச்சது நடந்துருச்சுனா அப்புறம் விதி எதுக்கு?” அவரை தேற்ற சொல்லியவளை கண்ணாடியை கழட்டி வலி நிறைந்த பார்வை பார்த்தவர்
“விதி இல்லை கீதா. காதலா குடும்பமான்னு இக்கட்டுல குடும்பத்தை தேர்ந்தெடுத்த என் சுயநலம். வாசகி உன் அம்மாவை வயித்துல சுமந்திருக்கானு தெரியாம நான் பண்ண முட்டாள்தனம். அதே தப்ப திரும்ப செய்யக் கூடாதுனு தான் என் பேத்தி உனக்கான அங்கீகாரம் கொடுக்க நினைச்சேன். என்ன செய்ய என் குடும்ப ரத்தம் தானே. நீ உன் பாட்டி மாதிரி “ கலங்கிய கண்ணை துடைத்து விட்டு கீதாவின் தலையை கலைத்து விட்டார் மாணிக்கம்.
“ ஆமா எல்லாரும் அப்படி தான் தாத்தா சொல்லுவாங்க “
“ உன் பாட்டி மாதிரியே ரொம்ப அழுத்தம் தான் உனக்கும். இவ்ளோ நடந்தும் எதையும் என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டு இருக்க “ முறைப்பாய் கேட்க திருட்டு முழி முழித்து இன்னும் சில கதைகளை பேசி பெரியவரை அறைக்கு அனுப்பிய பின்பே தனக்கான அறைக்குள் நுழைந்தாள் கீதாஞ்சலி.
பெட்ஷீட்டை தரையில் விரித்து தலையணை கூட இல்லாமல் கையை வைத்து படுத்துக் கொண்டவள் எப்படி உறங்கி போனாளோ. முகத்தில் பொலிச்சென தண்ணீர் பட்ட வேகத்தில் அடித்து பிடித்து எழுந்த கீதா முன்பு அஷ்டகோணலாய் முகம் வைத்து அமர்ந்திருந்தான் அமுதன்.
மேல் மூச்சு வாங்கிட வாரி சுருட்டி அமர்ந்தவள் முன்பு ஒரு பேப்பரை நீட்டிய அமுதன் “ இதான் டிவோர்ஸ் பேப்பர். இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையா போறேன். நல்ல படியா முடிச்சிட்டு வரும் போது இதுல உன் கையெழுத்து இருக்கனும் . புரிஞ்சதா ?”
கண்களை உருட்டி பல்லைக் கடிக்க எச்சிலை விழுங்கி உம் கொட்டினாள் பாவை. ஆனாலும் திருப்தி கிடைக்கவில்லை அவனிற்கு. அவள் அருகே நெருங்கிட தரையில் கை ஊன்றி பின்னே சாய்ந்தவளின் விரல் மீது பூட்ஸ் காலை வைத்து நசுக்கினான் வேண்டுமென்றே.
‘ ஆஆ அம்மா.. வலிக்குதுங்க .. கை கை “ வலி தாங்க முடியாமல் துடித்து கத்த
“ கையெழுத்து போடாம ஏதாச்சும் பண்ணா இந்த வலி தான் உன் வாழ்க்கை முழுக்க இருக்கும். நியாபகம் வச்சிட்டு அதுல கையெழுத்து போட்டு வை “ அவள் மீதான வெறுப்பை உமிழ்ந்து விட்டு செல்ல, நசுக்கப்பட்ட தன் விரலை வருடி தேம்பி அழுதாள் கீதா.
இப்படி ஒரு உறவா? தாத்தா என்ன கேட்டாலும் பேசிககுலாம் என்ற முடிவுக்கு வந்த கீதா அவன் சொல்லிய இடத்தில் வேக வேகமாய் கையெழுத்திட்டு மாலை அவன் வருகைக்காக காத்திருந்தாள்.
நீங்களும் வேண்டாம் இந்த இடமும் வேண்டாம் என்று முகத்திற்கு நேராக சொல்லிவிட்டு தன் சொந்த ஊருக்கே சென்று விடும் முடிவில் வழி பார்த்து காத்திருந்தவள் காதை வந்தடைந்தது அதிர்ச்சி செய்தி.
“அமுதன் வந்த கார் விபத்திற்கு உள்ளாகி வெடித்து கருகி விட்டது. காரை ஓட்டியவன் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகி விட , அமுதன் மட்டும் தூக்கி எறியப் பட்டதில் உயிர் போகும் நிலையில் மருத்துவமனையில் கிடக்கிறான்” மாணிக்கம் தகவல் கொடுத்தவர் அவளையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி அங்கு.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.