- Joined
- Nov 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் 1
"சர்க் ......சர்க்..... சர்க்..... ஹ்ஹ்ஹ்ஹ .......ஹ்ஹ்ஹ்அஅஅஅ "பெண்ணவளின் மூச்சு வாங்கும் சத்தம் .
நடு இரவு மணி , பன்னிரண்டு..... அந்த அடர்ந்த காட்டினுள் மூச்சிரைக்க தன் பத்து வயது மகனை இழுத்து கொண்டு, உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருந்தாள் பெண்ணவள். முகம் முழுக்க வேர்வை, கண்ணிலோ உயிர் பயம்....
அவளின் அழகிய முகத்தில் ஆங்காங்கே வீக்கமும், ரத்த காயமும் காணப்பட்டது.அவளின் மென்மையான கன்னத்தில் ஐ விரலின் அச்சுக்கள் அடித்தவனின் மிருக தனத்தை வெளிக்காட்டியது .உதட்டை கிழித்து கொண்டு வந்த ரத்தமும் உறைந்து போய் இருக்க ,உடலை மறைத்த புடவை கூட கிழிந்து அவளின் அங்கங்களை காட்டுவதை கூட அறியாமல் வெறும் காலில் குத்திய முள்ளினால் வரும் ரத்தத்தோடு ஓடி கொண்டிருந்தாள்.
அந்த காட்டினை போர்த்தி இருக்கும் இருட்டும், அப்போ அப்போ கேட்கும் விலங்குகளின் சத்தமும்,பயத்தை தந்தும்...நிலாத்தரும் சிறு வெளிச்சத்தில் மூச்சிரைக்க ஓடினாள்.
"ஸ்ஸ்ஸ் ....ஸ்ஸ்ஸ் "என்ற பாம்பின் சத்தம் , ஆந்தையின் அலறல்....அவைகளோடு போட்டியாக மூங்கில் மரங்கள் காற்றில் "டக் ....டக் "முறியும் சத்தம் ....
" அம்மா என்னால இதுக்கு மேல ஓட முடியாதும்மா......எதுக்குமா என்ன இப்டி இழுத்துட்டு போறீங்க ...எனக்கு பயமா இருக்கு " தூக்கம் கலைந்ததில் நடப்பது என்னவென்று புரியாமல் இருட்டை கண்ட பயத்தில் மூச்சு வாங்கி கொண்டு மகன் கேட்க, பயத்தில் வரும் அழுகையை மகனிடம் காட்ட விரும்பாத தாய்
" கண்ணா ப்ளீஸ் இன்னும் கொஞ்ச தூரம் தான்....அம்மா உன் கூட இருக்கேன்ல ... பயப்டாம தைரியமா அம்மா கூட வந்திரு " என்றவள் மகனை அழைக்க அவனோ நகராதவன் " அம்மா அப்பா எங்க?.... அவரும் நம்ப கூட தானே வந்தாரு!... எதுக்கு நம்ப மட்டும் போகணும்?.. " என்றதில் பொறுமையை இழந்த தாய்
" என்கிட்ட கேள்வி கேட்காம வா.... அவர் நம்ப அப்பா இல்ல,அது அப்பா மாதிரி இருக்குற ஒரு சாத்தான் ....அந்த சாத்தான் கிட்ட மாட்டுனா அது நம்பள கொன்னுரும் கண்ணா ...அம்மாக்கு ஏதாச்சும் ஆனாலும் நீ உன் அப்பாகிட்ட மட்டும் போயிறாத ..... " என பேசிகொண்டிருக்கும் போதே பின்னால் ஏதோ ஒன்று ஓடி வரும் காலடி சத்தம். மகனுக்கும் தாய்க்கும் அந்த சத்தம் கேட்டு பயம் ."எதுவும் பேசாம அம்மா கூடயே வா கண்ணா "என்ற தாயின் முகத்தில் தெரியும் பயத்தை கண்ட பத்து வயது மகன் சாத்தான் பயத்தில் மறு கேள்வி கேட்காமல் அம்மாவின் ஊடே சென்றான்.
இந்த அடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் அதுவும் நடு இரவில் இல்லை என தெரிந்தும் ஒரு குருட்டு நம்பிக்கையில் ஓடியவள் எதிர்பாராத ஒரு மரவீட்டை அடைந்தாள் .

அதன் தோற்றமும் , அதை சுற்றி உள்ள அமைதியுமே பெண்ணவளுக்கு மரணபயத்தை தந்தது.இவளின் இந்த நடுங்கும் பயத்தை மரத்தில் இருந்த ஆந்தை தனது உருண்ட விழிகளை உருட்டி பார்த்து கொண்டிருந்தது .
அமைதியில் ஆபத்து இருக்கும் என தெரிந்தும் வேறு வழியின்றி உதவி கேட்கலாம் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டை நோக்கி நடந்தாள் தன் மகனை இறுக்கி பிடித்தபடி ....அவள் அறியவில்லை அது வெறும் வீடல்ல இவளுக்கான சமாதி என்று.
" அம்மா எனக்கு பயமா இருக்கு " என்ற சிறுவன் அம்மாவின் காலை கட்டி கொள்ள " பயப்படாதடா.... அம்மா உன் கூடவே தான் இருக்கேன் " அவனின் தலை வருடி சமாதானம் செய்தவளின் கண்கள் வீட்டை சுற்றி அலைப்பாய்ந்தது.
" யாராச்சும் இருக்கீங்களா " திக்கி திணறி கேட்டவளுக்கு யாரும் பதில் கூறவில்லை. அய்யோ நாமளே வந்து, இந்த நரக வாசலில் மாட்டிக்கொண்டோமோ என நினைத்து முடிக்கும் முன்னே துரத்தி வந்த காலடி சத்தம் வீட்டிற்கு வெளியே கேட்டது. தெரிந்து விட்டது இனி இந்த அரக்கன் கையில் தான் மரணம் என்று.
தன் உயிரை குடுத்தாவது மகன் உயிரை காப்பாற்ற எண்ணியவள் மகனை தூக்கி கொண்டு சத்தமின்றி வீட்டின் கும்மிராட்டான ஒரு இடத்தில் அவனை ஒளியவைத்து விட்டு " இங்க பாரு கண்ணா.... அம்மாக்கு என்ன ஆனாலும் நீ கத்த கூடாது.... அமைதியா கண்ணையும் காதையும் மூடிக்கோ.... எக்காரணம் கொண்டு இந்த இடத்தை விட்டு மட்டும் அம்மா சொல்ற வரை போகக் கூடாது " என்றவள் " அம்மா எனக்கு பயமா இருக்குமா " மகன் கதற சமாதானம் செய்து கடைசியாக மகனை இறுக்கி அணைத்து அவனின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை குடுத்தவள் ,மகனை மறைவாக அமரவைத்து வேறு இடத்தில் ஒளிந்து கொண்டாள் .
வீட்டின் வெளியே கேட்ட காலடி சத்தம் இப்போது வீட்டின்னுள் கேட்டது. பெண்ணவள் பயத்தில் வரும் அழுகையை வெளிய கேட்க கூடாது என வாயில் முந்தானையை வைத்து மூடி கொள்ள கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் தாரைத்தாரையாய் கொட்டியது.
" கவி டார்லிங்..... என்ன?மாமா கூட கண்ணாமூச்சியா? " பற்கள் தெரிய சிரித்து கொண்டே சொன்னவனின் கண்ணிலோ கொலை வெறி....கையில் மின்னிய கத்தியை வீட்டின் சுவற்றில் உரசிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்தான்.
ஆம். உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருக்கிறாளே பெண்ணவள். அவளின் பெயர் கவியரசி.
கவி அவனின் குரலை கேட்டு வரும் பயத்தில் நடுங்கி கொண்டு மறைந்திருந்தாள்.
வந்தவனோ இருட்டில் தடுமாற அவன் கையில் இருந்து விழுந்த கத்தியின் சத்தத்தில் கவியின் உடல் ஒரு கணம் நடுங்கி நின்றது.
" பொண்டாட்டி...... எவ்ளோ தூரம் உன் புருஷன கஷ்டப்படுத்துற பாரு.... நீயா என் முன்னால வந்திரு.... இல்ல " மென்மையாக ஆரம்பித்தவனின் குரல் வெறியில் முடிந்தது.
"ஆஆஆஆ.....****** யாருகிட்டடி உன் வேலைய காட்டுற " சைக்கோவை போல வெறி பிடித்து கத்தியவன் அந்த மரவீட்டின் மின் விளக்கிற்கான சொடுக்கியைப் போட , இந்த அரக்கனிடம் அப்பட்டமாக மாட்டிக்கொண்டாள் கவி.
கவி இதை துளியும் எதிர்பார்க்கவில்லை. அரண்டு போய் எதிரில் முகத்தில் சிரிப்பு குறையாமல் நிற்கும் கணவனை பார்த்தாள்.
பயத்தில் எச்சில் கூட முழுங்க முடியவில்லை அவளாள். மறைந்து இருக்கும் மனைவியை கண்டவன் " அப்பாடா.... ஒரு வழியா மாமா உன்ன கண்டு புடிச்சிட்டேன்... வா வா " அவளின் அருகில் போனவன் மனைவி என்று என்ன?.. ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அவளின் கூந்தலை கொத்தாக பற்றி தூக்க வலியில் துடித்து போனாள் கவி.
" ஸ்ஸஆஆ.... பிரபா வலிக்குது.... வலியையும் தாண்டி கெஞ்ச ஆரம்பித்தாள்.....பிரபா ப்ளீஸ் உன்ன கெஞ்சி கேக்குறேன்.... என்ன விட்ரு... இனி உன் கண் முன்னாடி கூட வர மாட்டேன்.... எங்கையாச்சும் போய் நான் இருந்துக்குறேன்.... தயவு செய்து கேக்குறேன் பிரபா " கை கூப்பி கெஞ்சியவள் அவனின் காலை பிடிக்க போக அவளின் கண்ணீரும் கெஞ்சலும் அவனை துளி கூட அசைக்கவில்லை.
வெறுபிடித்து இருந்தவன் பற்றி இருந்த கூந்தலை இன்னும் இறுக்கமாக பற்ற வலியில் துடித்து கொண்டிருந்தாள் கவி. அவளின் கதறலை பார்க்க பார்க்க அவனுக்குள் சொல்ல முடியாத ஆனந்தம்.
" நீ இப்டி என்கிட்ட கெஞ்சி கதறுறத பார்க்கும் போது சந்தோசமா இருக்கு கவி..... உன்ன இப்டியே கெஞ்ச சொல்லி என் மனசு கேட்குது....ஆனா என் மூளை உன்ன இப்போவே வெட்டி கொல்ல சொல்லுது.... " மொத்த அரக்கனின் உருவமாய் முன் நின்று பேசியவனின் வார்த்தையில் நடுங்கி போனாள் கவி....
" பிரபா ஏன்டா இப்டி பேசுற.... நா உனக்கு எந்த துரோகமும் பண்ணுல " அழுது கொண்டே சொன்னவளின் கன்னத்திலே பளாரென ஒரு அறை விட ,உதட்டில் உறைந்த ரத்தம் மீண்டும் வழிய தொடங்கியது கவிக்கு .
கவியின் வார்த்தையில் வெறியாகி போனவன் " த்தூ..... யாருகிட்டடி உன் நடிப்ப காட்டுற.... உன் நடிப்புக்கு எவன் வேணா ஏமாந்து போகலாம்.... இந்த பிரபா ஏமாற மாட்டான்... எவன் கூடவே சேர்ந்து சுத்தி பிள்ளை பெத்து எனக்கு துரோகம் பண்ணிட்டு பண்ணவே இல்லனு பச்சையா பொய் பேசுற " என்றவனின் இறுதி வார்த்தையில் பெண்ணவளுக்கு கோவம் ஆத்திரம்.
எந்த உத்தமிக்கு தான் கர்ப்பை கலங்க படுத்தினால் கோவம் வராது. உத்தமி கவிக்கு பிரபாவின் வார்த்தைகள் சுருக்கென ஏற எதிரில் நிற்பவன் அரக்கன் என்றும் பாராமல் தன் ஆதங்கத்தை கொட்டினாள்.
" அடச்சீ..... நீயெல்லாம் ஒரு ஆம்பளையா...த்தூவ்..... உன்ன போய் நா காதலிச்சு கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு இது தேவை தான்டா .... அது நமக்கு பொறந்த கொழந்த பிரபா .... என் கர்ப்ப கலங்க படுத்துறேன்னு உன் ஆண்மையை மட்டம் தட்டிக்காத " கவியின் திமிரான பேச்சில் ஆண்மை வெறி பிடித்தவன்
" எவ்ளோ தைரியம் என்கிட்ட குரல் உசத்தி பேச..... உன்ன எப்டி அடக்கணும்னு எனக்கு தெரியும் டி.... எங்க என் நண்பனுக்கும் உனக்கும் பிறந்த என் அருமை மகன்... என்றவன் ராகுல் கண்ணா.... ராகுல் கண்ணா...
எங்க இருக்கீங்க? அப்பா முன்னால வாங்க " திடீரென பையன் புறம் பிரபா திரும்பியதில் பதட்டமானவள் என்ன செய்வது என புரியாமல் பார்வையை அலையவிட அவள் கண்ணில் சீக்கியது பிரபா தவறவிட்ட கத்தி.
மகனின் உயிரை காப்பாத்த எதையும் யோசிக்காதவள் கீழே கடந்த கத்தியை எடுத்து குத்த போக அதை கவனித்தவன் தன்னை நோக்கி வந்த கவியின் கையை வளைத்து அவளின் வயித்துலே கத்தியை பாவம் பார்க்காமல் சிரித்து கொண்டே சொருகினான் பிரபா.
வலியில் " அம்மாஆஆஆஆஆஆ " அலறி கத்தியவளின் கத்தலில் காட்டில் உறங்கி கொண்டிருந்த பறவைகளும் பயந்து பறக்க இதையெல்லாம் படிகட்டின் கீழ் பகுதியில் மறைந்து இருந்த ராகுல் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். அவன் காதில் கவி சொல்லிய வார்த்தைகள் மட்டுமே திரும்ப திரும்ப கேட்டது.
காதலித்து ஆசை ஆசையாக கல்யாணம் செய்து கொண்ட கணவனாலே குத்து வாங்கி குருதி வழிய சாய்ந்து போனாள் கவி. கத்தி முன்னாள் சென்று பின்னால் வரை ஆழமாக சொருகி இருந்தது.
அவளின் சூடான ரத்தம் தன் கையை நினைத்தும் கூட வெறி அடங்கவில்லை அரக்கனுக்கு.
அந்த ரண வலியிலும் " தயவு செய்து குழந்தையை மட்டும் எதும் பண்ணிராதீங்க.... உங்கள கெஞ்சி கேக்குறேன்... நம்ப காதல் மேல சத்தியமா அது நம்ப குழந்தை தாங்க " பேச முடியாமல் திணறி சொல்ல ..
அன்போடு அவளின் தலையை தனது ரத்தம் படிந்த கைகளால் வருடியவன்,"கவலை படாத பொண்டாட்டி உன்ன,என்ன ஏமாத்திட்டு என் நண்பன் கூட சுத்துனியே ராகேஷ், அப்றம் உங்க புள்ளை மூன்று பேரையும் ஒன்னா தான் அடக்கம் பண்ணுவேன்.... நிஜத்துல தான்,உன்ன அவன் கூட வச்சி பார்க்கும் போது எனக்கு கோவம் தலைக்கு ஏறுதுடி..... அதான் மரணத்துலயாவது உங்கள ஒன்னா சேர்த்து வைக்கிறேன் " என்றவன் மனைவியின் தலையை வருடியப்படி சிரித்து கொண்டே கத்தியை இன்னொரு முறை எடுத்து கவியின் வயிற்றில் இறக்க " ஹாஆஆ " பெரும் சத்தத்தோடு மேலே இழுத்தவளின் மூச்சு திரும்ப இறங்கவில்லை.
கவியின் திறந்த கண்களையே பார்த்து கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அவனின் சிரிப்பை இழந்து கதறினான். " ஐ லவ் யூ கவி " என்ற பிரபா அவளின் கண்களை மூடி கவியின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு அவளின் சடலத்தை ஏற்கனவே செத்து கிடக்கும் ராகேஷ் சடலம் அருகில் போட்டு விட்டு மகனை தேட ஆரம்பித்து விட்டான் .
இவை அனைத்தையும் மரத்தில் இருந்த ஆந்தை அமைதியாக தனது பெரு விழியால் பார்த்து கொண்டு தான் இருந்தது.
********** ********* *********
" நா வெளிநாட்டுக்கே போறேன் பாலா.... இங்க இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் மனைவி நியாபகம் தான் அதிகமா வருது..... என்னால அவளை மறந்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்க துளியும் விருப்பம் இல்ல.... நா அவளோட நினைப்பிலே வாழ்ந்துருவேன் பாலா " காட்டை ஒட்டிய ரோட்டில் தன் நண்பன் பாலாவுடன் பேசிக்கொண்டே காரை ஓட்டினார் முருகானந்தம்.
நண்பனிடம் பேசிக்கொண்டு போனவரின் காரின் முன்னே சேறு சகதியோடு ஒரு உருவம் வந்து நிற்க அரண்டு போன முருகானந்தம் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்த மயிரழையில் இருவரும் உயிர் தப்பினர்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.