அத்தியாயம் 1

Joined
Aug 20, 2025
Messages
4
நெஞ்சின் சுவாசம் நீயடி

அழகான காலை நேரத்தில் சூரியனார் அவர்கள் வேலையைத் தொடங்க இங்கே மிதுன் அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தான் .

டேய் மிதுன் என்னடா இன்னைக்கு நேரம் காலமா கிளம்பி இருக்க என அவனுடைய அம்மா பர்வதம் கேட்டு கொண்டு இருந்தார் ...

அம்மா இன்னைக்கு ஆபிஸுக்கு சீக்கரம் வர சொன்னாங்கமா, அதனால் தான் சீக்கிரம் கிளம்பி இருக்கேன் ...

சரி இருடா டிபன் ரெடியாயிடிச்சு சாப்பிட்டு போவே ..

இல்லை மா ! இப்பவே லேட் இதுக்கு மேல லேட்டா போனா அந்த எம் டி என்ன ஒரு வழி செய்துடுவான் .

ஒரு க்ளாஸ் பாலாவது குடிச்சுட்டு போடா, என தன் தாயின் பாசத்தால் அவன் தன் தாயின் கையில் இருந்த பால் டம்ளரை வாங்கி குடித்து விட்டு திரும்பவும் அவர் கையில் கொடுத்து விட்டு அவசரமாக தன் டூவிலரை எடுத்து ஸ்டார்ட் செய்து கிளம்பினான் .

கிளம்பியவன் ஒரு இடத்தில் நின்று தன் கை கடிகாரத்தை பார்த்தான் . இப்பவே இவ்வளவு டைம் ஆச்சு இவளை இன்னும் காணலையே என பதற்றத்துடன் நின்று இருந்தான் .

ஆபிஸில் அவசர மீட்டிங் என்று எம் டி போன் செய்து அனைத்து ஸ்டாப்களையும் வரவழைத்து இருந்தார் .. அதனால் தான் இந்த அவசரம் ..

மிதுனும் தன் தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தான் . அந்த சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் ...

அவள் அப்பொழுது தான் மெதுவாக அன்ன நடை பயின்று நடந்து வந்து கொண்டிருந்தாள் மிருதுளா ...

மாநிறம் , ஆனால் கலையான முகம் , இவளைப் பார்த்தால் ஆண்கள் கண் கொட்டாமல் பார்ப்பார்கள் .

மான் போல் துள்ளி நடந்து வந்து கொண்டிருக்கும் அவளைப் பார்த்து கொண்டு நின்றிருந்தான் மிதுன் ...

டேய் மிதுன் எப்படா வந்த சீக்கிரமே வந்துட்ட போல இருக்கு . ஏண்டா நீ ! ஒன்பது மணிக்கு தாண்டா வர சொன்னாங்க . நீ ஏன்டா எட்டு மணிக்கே வந்து என்னையும் சேர்த்து உயிர வாங்குற ...

உன்னை அப்படி எல்லாம் உயிரை வாங்க முடியாது மிருது ...

ஏண்டா அப்படி சொல்ற ..

ஆமா உன்னோட உயிரை என்கிட்ட தானே இருக்கு ... அப்புறம் எப்படி உன்னுடைய உயிர் எடுக்க முடியும் ...

காலங்காத்தாலே வாதிக்காதடா..

மிருது அப்படியெல்லாம் சொல்லாதடி எப்பவுமே நீ எனக்கு வேணும் டி.

என்ன இன்னைக்கு ஐயாவுக்கு காலையிலேயே லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சு போல இருக்கு ...

நான் அமைதியாக தான் நின்னுட்டு இருந்தேன். நீ வந்த உடனே எனக்கு இப்படி எல்லாம் பேசணும்னு தோணுது. நானும் என்னதான் பண்ணுவேன் மிருது ...

நீ ஒன்னும் பண்ண வேண்டாம். சரி நம்ம கிளம்பலாமா . டைம் ஆயிடுச்சு பாரு ...

அடியே இப்பதானே சொன்னே நேரம் இருக்குன்னு இப்ப நீயே வந்து டைம் ஆகுதுன்னு சொல்றே . அப்புறம் எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க..

யாருடா உன்னை பற்றி நினைக்கிறதுக்கு நான் இருக்கும் போது , என்னடா ஏதாவது வேற வேலை ஏதாவது பாத்துட்டு இருக்கியா எனக்கு தெரியமா ..

அப்படியெல்லாம் இல்ல மிருது . நீ இருக்கும் போது எனக்கு யாரும் தேவையில்லை ...

அந்த பயம் இருக்கட்டும் . உனக்கு எப்பவும் நான் மட்டும் தான் . வேற எங்கேயாவது யார் கூடவாவது கண்ணுல பார்த்தேன் . உன்னைய தொலைச்சுப் புடுவேன் பாத்துக்கோ ...

நீ இப்படியே பேசிக்கிட்டு இருக்காத மிருது . கிளம்பு நேரம் ஆகுது . உனக்காக தான் இவ்வளவு சீக்கிரத்தில் நானும் கிளம்பி வந்தேன் . இங்க இருந்து இனி போறதுக்குள்ள நம்மளுக்கு நேரம் ஆயிடும். அப்புறம் அந்த மேனேஜர் வேற கத்துவான் . சீக்கிரம் வா போலாம் . என இருவரும் கிளம்பி சென்றனர் .

இருவரும் வண்டியில் ஒன்றாக இணைந்து சென்று கொண்டிருந்த போது மிருது நம்ம ரெண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு போலாமா, ஏதோ மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கிற மாதிரி இருக்கு. நீ என்ன சொல்ற போலாம்னு சொன்னால் போலாம் இல்லன்னா ஆபீசுக்கு கிளம்பி போயிடலாம் .

சரி போலாம் கொஞ்சம் சீக்கிரமாவே போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் நம்மளுக்கு தான் ஆபத்து எம் டி ரூபத்துல வரும் சரியா...

மிதுன் மிருது இருவரும் போகும் வழியில் உள்ள கோவிலுக்கு சென்றனர்..

வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி கோவில் வாசற்படியை தொட்டு வணங்கி விட்டு உள்ளே கடவுளை தரிசிக்க சென்றனர்..

என்னடா மிதுன் உனக்கு என்ன ஆச்சு ! இன்னைக்கு என்ன புதுசா கோயிலுக்கு எல்லாம் போகலாம்னு கூப்பிட்டு இருக்க .. இப்படி எல்லாம் செய்ய கூடியவன் இல்லையே நீ...

என்னமோ தெரியல மிருது . மனசு சங்கடமா இருக்கு அதனாலதான் கோவிலுக்கு போனால் கொஞ்சம் மனசு ரிலாக்ஸா இருக்குமுனு தான் போலாம்னு கேட்டேன் ...

சரி வா உள்ளே போய் சாமி கும்பிட்டு கோவிலை சுத்திட்டு சீக்கிரமா கிளம்புவோம் ... அப்புறம் அங்கு ஒருத்தன் கத்துவான் . அதைக் கேட்க முடியாது .. எனக் கூறிக்கொண்டே மிருது கோவிலுக்குள் சென்றாள் .

மிதுனும் மிருதுவும் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்து தன் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி இருந்தார்கள் ...

ஆபீஸில் அவசரமாக மீட்டிங் ஏற்பாடு செய்து கொண்டிருந்த அனைவரும் ஒரு இடத்தில் இணைந்தனர் .. எம் டி காக வெயிட்டிங்ல் ஹாலில் அமர்ந்திருந்தனர்..

என்ன இன்னைக்கு திடீர்னு மீட்டிங் ஏற்பாடு பண்ணி இருக்காங்க . எதனாலே என்று தெரியலையே உங்களுக்கு யாருக்காவது தெரியுமா என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர் . அப்பொழுது உள்ளே நுழைந்தனர் மிருதுளாவும் மிதுனும் ...

நீங்க ரெண்டு பேரும் இப்பதான் வரிங்களா, ஏன் இவ்வளவு நேரம் , இன்னும் கொஞ்ச நேரத்துல எம் டி வந்துருவாரு . அப்புறம் எல்லாத்தையும் புடிச்சு சத்தம் போடுவார். சீக்கிரம் வாங்க இப்படி உட்காருங்க என அவர்களை அழைத்து அமரச் செய்தனர் ...

அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்க அங்கு சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது . அப்பொழுது உள்ளே வந்து கொண்டிருந்தார் எம் டி ...

எம் டி உள்ளே நுழையும் போது காலடி சத்தத்தை வைத்து அனைவரும் அமைதியாகினர் ... கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்தான் ராஜேஷ் .. அவன்தான் கம்பெனியின் எம் டி ...

உள்ளே வரும்போது இவ்வளவு சத்தமா இருக்கு . எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க , என்று தன் குரலை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தான் ராஜேஷ் ..

குரலை உயர்த்தி பேசியவுடன் அனைவரும் அமைதியாக இருந்தனர் .

என்ன பேசினா அதுக்கு ஏதாவது பேசுங்க அப்பத்தானே என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியும் . இப்படியே இருந்தா என் கம்பெனி என்ன ஆகிறது .

ஒருவர் நின்று சார் .... என அவர் அழைக்க என்ன என்பது போல் அவனுடைய பார்வை இருந்தது..

அது வந்து சார் இந்த மீட்டிங் எதுக்காகன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் சார் எல்லாரும் பேசிகிட்டு இருந்தோம்..

இந்த மீட்டிங் எதுக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சுதா , இல்ல தெரிய வைக்கணுமா ,என தன் கம்பீரக் குரலில் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜேஷ்..

மிதுன் எழுந்து சார் உண்மையிலேயே எதுக்கு எங்களுக்கு தெரியவில்லை சார், நீங்களே சொல்லிடுங்க என கேட்க ராஜேஷ் மிதுனை அலட்சிய பார்வை பார்த்து கொஞ்சம் உட்காருங்க என்று கூறினான் ...

ராஜேஷின் அலட்சிய பார்வை மிதுனை என்னமோ செய்தது . அவனும் அமைதியாக அமர்ந்து கொண்டான் . அவன் தன் மனதில் ஏதோ ஒன்றை கணக்கு போட்டுக் கொண்டு தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று மிதுனுக்கு தெரிந்தது . அதனால் அமைதியாகி விட்டான் .

ராஜேஷ் மிதுனை பேசியதில் மிருதுளாவிற்கும் மிகவும் கோபமாக வந்தது . இப்போ இவன் என்ன கேட்டு விட்டான் என்று இந்த எம்டி இப்படி பேசுகிறானே என்று அவள் அவன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தால் .

நான் சொல்லுறதை எல்லோரும் கவனமா கேளுங்க என பேச ஆரம்பித்தான் ராஜேஷ் ... ராஜேஷின் பேச்சை கேட்டு கொண்டு அனைவரும் அதற்கு சரி என கூறி விட்டு மீட்டிங்கை முடித்தனர் ...

மீட்டிங்க் முடிந்து வெளியே வந்த அனைவரும் அவர் அவர்கள் கேபினுக்கு சென்றனர் . மிருது மிதுனின் மீது சற்று கோபமாக இருந்தாள் ...

மிருது நீ எதுக்கு இப்ப என் மேல கோவப்படுற நான் என்ன பண்ணுவேன் ..

நீ தெரிஞ்சு தான் பேசுறியா தெரியாம பேசுறியா மிதுன் .

நீ என்ன சொல்ல வர மிருது? அதை முதல்ல சொல்லு...

அந்த எம்டி உன்னை எப்படி பேசினான்? நீயேன் அமைதியா இருக்க . அவனுக்கு எதிராக ஒரு பேச்சு பேசி இருக்கலாம் இல்ல. அவன் எம்டியா இருந்தா என்ன வேணா பேசலாமா ...

இங்க பாரு மிருது நம்ம இங்க வேலை பாக்குறதுக்கு தான் வந்திருக்கோம் . அதை விட்டுட்டு அவன்கிட்ட சண்டைக்கு எல்லாம் போக முடியாது .. அப்படி போனா நம்ம ஃபேமிலி என்ன ஆகிறது? அதனால நம்ம அமைதியா இருக்கத்தான் வேணும்.. நீ இதெல்லாம் ஏதும் நினைக்காதே ... நம்ம வேலையை மட்டும் பார்ப்போம் மிருது என கூறி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவன் கேபினுக்கு சென்றான் .

இவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது போலிருக்கிறது . இவனை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது...

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேமராவின் மூலம் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். உங்க ரெண்டு பேத்துக்கும் இருக்கு ஒரு நாளைக்கு அப்படி என்ன வேலை நேரத்தில் இவங்களுக்கு பேச்சு வேண்டி கிடக்கு . அதுவும் என்னை பற்றி. ஒரு நாள் இல்ல ஒரு நாள் என் கையில மாட்டாம யா போயிடுவீங்க . அன்னைக்கு இருக்குது மிருதுளா . உன்னைய ஒரு வழி பண்ணாம நான் விடமாட்டேன் .. அப்போ தெரியும் இந்த ராஜேஷ் யாருன்னு ...

உன்னால நான் பட்ட அவமானத்தை உன்னால தான் தீர்க்கணும் . அது நீ என் கூட இருந்தா மட்டும் தான் முடியும் . அதுக்காகத்தான் நானும் இப்ப உன்னைய என்னுடைய கம்பெனியில் வேலைக்கு ஜாயின் பண்ண வச்சேன் இது எல்லாம் என்னுடைய வேலைக்கு தான் . மிருது உன்னைய நான் அடையாமல் விடமாட்டேன் டி . உனக்கு என்ன அவ்வளவு ஒரு திமிரு . நீ என் கைக்கு கிடைக்காமல் நான் ஓயமாட்டேன் . அது உனக்கு தெரியாது நினைக்கிறேன், தெரியாமல் இருக்கிற வரைக்கும் தான் உனக்கு நல்லது . அது தெரிஞ்சா நீ தாங்க மாட்ட, உன்னைய என்ன பண்றேன் பாரு மிருது என தன் மனதில் வன்மத்தை வைத்து கொண்டு நினைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான் ராஜேஷ் ...

தொடரும்.....
 

Author: இந்திரா
Article Title: அத்தியாயம் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top