அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 1

வட மற்றும் மேற்கு இந்தியாவில் பிரசத்தியாக கொண்டாடப்படும் காரக சதுர்த்தி பண்டிகை அன்று. பௌர்ணமி நிலவு கண்ணை கூசும் பிரகாசத்தில் ஜொலித்திட, வீட்டில் திருமணமான பெண்கள் முறைப்படி விருதம் முடித்து கணவர் கையால் நீரையும் இனிப்பையும் பெற்று சடங்கை முழுமையாக முடிக்க அவள் மட்டும் தனித்து நின்றிருந்தாள் .

ஏமாற்றத்தையும் தாண்டிய வலி பெண்ணின் கண்களில். கண்ணீர் இப்போவோ அப்போவோ என தாங்கி நிற்க “ அவன் வந்துருவான் கீதா. அவனுக்கு போன் பண்ணியா “ கறரான தாத்தாவின் குரலில் மற்றவர்களும் திரும்பி அவளை அற்பமாய் பார்த்தனர். பார்வையிலே ஒரு வெறுப்பு, இளக்காரம் அவள் மீது.


“ அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்னு சொல்லிருக்காரு தாத்தா “ கீச்சு குரலில் பொய் சொல்லியவளை பெரியவர் நம்பவில்லை.

தன் பைஜாமிலிருந்து போனை எடுத்தவர் பேரன் வேந்தனமுதனிற்கு அழைத்தார். முழு ரிங் போய் அழைப்பு தூண்டித்தது தான் மிச்சம். இரண்டாம் அழைப்பிலும் பதில் இல்லை. பல்லைக் கடித்த ராஜமாணிக்கம்,


“டேய் தேவராயன் “ பெரியவர் கர்ஜனையில் எரிச்சலையாய் ஓடி வந்தார் ராஜமாணிக்கத்தின் மூத்த மகன் ராஜதேவராயன். வேந்தனமுதனின் தகப்பனார்.


“ அப்பா “ என அவர் பம்மிட உஷ்ணமாய் மகனை பார்த்தவர்


“ உன் மகன் எங்க? இன்னைக்கு நம்ப வீட்டுல இந்த பூஜை நடக்குறது அவனுக்கு தெரியாதா என்ன? வருஷம் வருஷம் நாம செய்யிறது தானே. அதும் முதல் முறை அவனுக்காக கீதா விரதம் இருக்கா. பொறுப்பா வர்றத விட்டு அவனுக்கு என்ன வேலை வேண்டி கிடக்கு “ பொறிந்து தள்ள ஆழ்ந்த அமைதி நிலவியது அவர் மீதான பயத்தில்.


கடவுள் நம்பிக்கை அதீதமாக கொண்டவர் சடங்கு சம்பிரதாயத்தை கலாச்சாரம் கடந்து மதிப்பார். தை பொங்கலும் கொண்டாடுவார் ஹோலி பண்டிகையும் கொண்டாடுவார்.


தேவராயன் அப்பாவின் அருகே பம்மி நிற்கும் அந்த அப்பாவி பெண்ணை மனதிலே கரித்துக் கொட்டியவர் “ அப்பா அவனுக்கு இப்போ தானே கல்யாணமானது. ஏற்கனவே பிடிக்காத கல்யாணம்னு மனசு உடைஞ்சி போய் கிடக்கான். அதான் இத மறந்திருப்பான் “ வேண்டா வெறுப்பாய் சொல்ல ஆத்திரமடைந்தார் மாணிக்கம்.


“என்ன பொறுப்பில்லா பேச்சு இது தேவராயன். ஒரு அப்பாவா பேசுற பேச்சா இது ? நீ அவனுக்கு புரிய வைக்காம அவனுக்காக பரிந்து பேசிட்டு இருக்க? போய் உன் பையனை வர சொல்லு “


“அவன் முக்கியமான கிளைண்ட் மீட்டிங் “


“நான் சொன்னத செய். நம்ப வீட்டு பொண்ணுங்கள விட எதுவும் முக்கியமில்லை “ கர்ஜனையோடு அவர் கத்தவே அடங்கி அங்கிருந்து நகர்ந்து விட்டார் தேவராயன்.


“ அதான் அவனுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம்னு தெரியும்ல. இவள யாரு இதெல்லாம் பண்ண சொல்லுறது “ சின்னவர் சிவராயன் குரல் கொடுக்க பெரியவர் முறைப்பில் கப் சிப் ஆகி போனார் .

“ நீ கவலைப்படாத கீதா. சீக்கிரம் அவன் வந்துருவான் “ மாணிக்கத்தின் மனைவி ராஜகுமாரி ஆறுதல் சொல்ல மெல்லிய புன்னகை தந்தவளுக்கு லேசாக தலையை சுற்றியது. தலையை சிலுப்பி கண்களை இறுக்க மூடி தன்னை நிதானமாக்கி கணவன் வருகைக்காக காத்திருந்தாள் அவள்.


ராஜமாணிக்கத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் தேனி தான். ஆனால் தாத்தா வியாபாரத்திற்கு மும்பை வந்தவர் ஆட்டோமொபைல் நிறுவனத்தை துவங்கி இப்போது நிலையான இடத்தில் இடம் பிடித்தார். அதன் பின் ராஜமாணிக்கமும் தாத்தாவின் தொழிலை இன்னும் பல இடங்களில் பரப்பியவர் சொத்தின் மதிப்போடு நல்ல பெயரையும் பெற்றார் அவர் குணத்தால்.


ராஜமாணிக்கத்திற்கு இரண்டு மகன்கள். இரண்டுமே தகப்பனுக்கு நேர் எதிர் தான். மாணிக்கம் ஒரு நாளில் நூறு கோடி சம்பாதித்தால் அதை ஒரு மணி நேரத்தில் செலவழிக்கும் திறமை உண்டு மகன்கள் இருவருக்கும். பெரிய மகன் தேவராயனுக்கு பிறந்தவன் தான் வேந்தனமுதன். அதற்கு அடுத்து மகள் ஒருத்தி உண்டு. சிறியவருக்கு ஒரு மகன் இரண்டு மகள். இவர்கள் எல்லாரும் குணத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையால் சேர ஒரு காரணம் கீதா. கீதாஞ்சலி.


இவர்கள் யாருக்கும் கீதாவை கண்டாலே பிடிப்பதில்லை. பூர்வீக வீட்டிற்கு மனைவி ராஜகுமாரியோடு சென்றிருந்தவர் திரும்பி வருகையில் கீதாவோடு தான் வருகை தந்திருந்தார்.


அவர்களை பொறுத்த வரையில் பெண் என்றால் ரசகுலா நிறமும் , இறுக்கி பிடித்த உடையில் அங்கங்கள் அடங்காமல் பிதுக்கிக் கொண்டு இனிக்க இனிக்க நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் தான்.


ஆனால் இவளோ பட்டிக்காடு. மாநிறம். பேருக்கு உடலை மறைக்க உடை. இறுக்கி பின்னிய கூந்தல். ஜீரோ சைஸ் அல்லாமல் சற்றே சதை கொண்ட சாதாரண பெண். ஏதோ வேற்று வாசி போல் பார்த்த குடும்பம் அரண்டு போனது மாணிக்கம் கொடுத்த அடுத்த அதிர்ச்சியில்.


“ இவள் தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் “ என்ற மாணிக்கத்தின் வார்த்தையை வேந்தனின் தாயாய் ஹேமலதா தான் முதலில் எதிர்த்தாள். “ ஆனால் கல்யாணத்திற்கு வெகுமதியாய் என் நிறுவனத்தின் CEO பதவியும் கிடைக்கும் “ என்று அறிவித்திட எதிர்த்து பேசிய வாயெல்லாம் மூடியது. வேந்தனமுதனின் வாயும் தான்.


இப்படி வற்புறுத்தி நடக்கப்பட்ட திருமணம் தான் இது. பச்ச தண்ணீர் கூட நாவில் படாமல் அவள் ஒருத்தி மட்டும் ஒதுங்கி இருப்பதை கவலையாய் மாணிக்கம் பார்க்க “ அப்பா அவன் போன் எடுக்கல. நான் அவனோட செக்ரட்டரி கிட்ட விசாரிச்சு பார்க்கிறேன் “ அலட்சியமாய் சொல்லிவிட்டு செல்ல மீண்டும் தன் போனை எடுத்தார் பெரியவர்.


கருமை சூழ்ந்த அறைக்குள் ஆடைகள் சிதறி அலங்கோலாமாய் காட்சியளிக்க மூலையில் சைலன்ட்டில் ஒளிர்ந்து மின்னியது அவனின் அலைப்பேசி. திரையில் டாட் என்று பொறிக்கப்பட்டிருக்க, சிறிது நேரத்தில் அதுவும் அடங்கி 50 மிஸ்டு கால் என அறிவிப்பை காட்டி அணைந்து போக, போனிற்கு சொந்தமானவனோ அடங்க முடியா காமத்தில் அவள் மீது இயங்கி கொண்டிருந்தான் வேந்தனமுதன்.


பேஷன் மார்க்கெட்டில் பல பிரபல பிராண்ட்களுக்கு அம்பாஸ்டர் மற்றும் நடிகையான மௌனிகா. ஒரு விருது நிகழ்ச்சியின் போது தான் முதல்முறை ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தனர். கண்டதும் காதலை கடந்து கண்ட நாளே காமம் அரங்கேறியது அவர்களுக்குள். அப்படி தொடங்கிய உறவு தான் இவர்களது. இதெல்லாம் தெரிந்தே தான் ராஜமாணிக்கம் பேரனை திசை மாற விரும்பாமல் கீதாஞ்சலியுடன் சேர்த்து வைத்தார். வழி மாறியவனை மாற்றலாம். தன்னுடையே வழியே இதுதான் என உறுதியாய் இருப்பவனை மாற்ற முடியாது என்பதை பெரியவர் யோசிக்கவில்லை.


அவன் அசைவிற்கு ஏற்ப உச்சத்தில் மகிழ்ந்தவள் “ இன்னும் அமுதன். வேகமா. ஆஹ் . எஸ் .. எஸ் . ஐ லவ் யு அமுதன். ஐ லவ் யூ “ வேக மூச்சை வாங்கி கத்துபவளின் சாயம் பூசிய இதழை வேகம் கொண்டு கவ்வி மென்றான் அமுதன்.


“ஐ லவ் யு. ஐ லவ் யு பேபி “ பேரின்பத்தை இருவரும் பெற்று மெத்தையில் சரிந்து விழ , அட்டை போல் அவன் மேல் ஒட்டிக் கொண்டவள் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.


“ என்னை எப்போ கல்யாணம் பண்ணிக்க போற அமுதன். இன்னும் எவ்ளோ நாள் இப்படியே ரகசியமா பார்க்குறது. ஏற்கனவே மீடியா நான் ரிலேஷன்ஷிப்ல இருக்குறத துருவ ஆரம்பிச்சிட்டாங்க. எவ்ளோ நாள் இதை நான் மறைக்கிறது. எனக்கு நீ வேணும் அமுதன். நினைக்கும் போதெல்லாம் வேணும்” லிப்ஸ்டிக் கலைந்த உதட்டால் அவன் கழுத்தில் முத்தமிட்டு அணைந்த நெருப்பை மீண்டும் எரிய வைக்கும் முயற்சியில் இறங்க அவளுக்கு சளைக்காமல் விரலால் அவளை ஆட்கொண்டவன்


“ எனக்காக இவ்ளோ நாள் வெயிட் பண்ண மாதிரி இன்னும் கொஞ்ச நாள் பேபி. என் தாத்தா இப்போ தான் என்னை நம்ப ஆரம்பிச்சு நிறுவனத்தை என்கிட்ட ஒப்படைச்சிருக்காரு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் . எல்லாமே என் தாத்தாவுக்காக தான்”


“ அப்புறம் ஏன் இன்னைக்கு வீட்டுக்கு போகாம இங்க வந்த. உனக்காக உன் பெண்டாட்டி காரக சதுர்த்தி நடத்திருப்பாளே. அங்க போக வேண்டியது தானே “ முதுகை காட்டிக் கொள்ள, இடையை பற்றி ஒரே இழுப்பில் தன் மார்பில் போட்டுக் கொண்டவன்


“ நானா கேட்டேன். அவளை என் வீட்டு நாயாக் கூட நான் நினைச்சது இல்ல. நான் வராம அப்படியே செத்து போய்தொலையட்டும், எனக்கு வேலை மிச்சம்“ சலித்துக் கொண்டான் வெறுப்பாய்.


“ வாட்டெவர். அவளை டிவோர்ஸ் பண்ணுவீங்களோ இல்லை வேற எதும் பண்ணுவீங்களோ. சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணுற வழியப் பாருங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை. அவ பக்கம் நீங்க எப்போ வேணாலும் சாயலாம் “ அழுத்தமாய் சொல்லிட , சத்தமாய் சிரித்தவன்


“ நீ அவளை இன்னும் நேருல பார்க்கல. அதான் இவ்ளோ கோவமாகுற. அவளாம் உன் கால் தூசிக்கு சமமில்லை. அந்த கருப்பட்டி பார்த்தா கடுப்பு தான்டி வரும். ஆனா உன்ன பார்த்தா தான் உடம்புல இருக்குற ஒவ்வொரு நரம்பும் டெம்ப்ட் ஆகுதுடி “ உடலை அழுத்தி அவளின் அங்கங்களில் முத்தம் வைக்க சிணுங்கியவள்


“இப்படியே சமாளிச்சிரு அமுதன்“


“ ஹேய், என்னை பாரு மௌனி. கொஞ்சம் வெயிட் பண்ணு. இப்போவே அவளை நான் கொன்னா என் தாத்தா நான் தான் அவளை கொன்னேன்னு சந்தேகமே இல்லாம கண்டுபிடிச்சிடுவாரு. வெறும் பதவி மட்டும் தான் கொடுத்துருக்காரு. முழு கட்டுப்பாடும் என் கைக்கு வர இன்னும் கொஞ்சம் நடிக்கனும். அதுவரை தலை விதியேன்னு அந்த மூஞ்ச பார்க்க வேண்டியது தான். நீ நினைக்கிற மாதிரி என் மனசு மாற நான் ஒன்னும் குருடன் இல்லை. என்னை தொடவும் ஒரு அருகதை வேணும் “

“ அது அந்த பட்டிக்காட்டுக்கு இந்த ஜென்மத்துல கிடையாது” உறுதியாய் சொல்லிய அமுதன் விலகி தன் ஆடையை போட ஆரம்பிக்க புருவம் சுருக்கினாள் மௌனி.

“ எங்க? ”


“ வீட்டுக்கு “ என்பவனை கோவமாய் அவள் பார்க்க சிரித்தவன்


“ நான் போகலனா அந்த கிழவன் தேடி வந்துருவான். அகைன் எப்போ பாரக்குலாம்னு நான் சொல்லுறேன். பாய் “ அவள் இல்லத்தில் இருந்து வந்த சுவடே இல்லாமல் கிளம்பியவனை பால்கனியில் நின்று கவனித்தாள் மௌனி.


பண்டிகை முடித்து தங்கள் கடமை முடிந்ததே என்ற நிம்மதியில் அவரவர்கள் உறங்கி விட “ உன் விரதம் கண்டிப்பா முடியும். தாத்தா உன்னை விட்டிட மாட்டேன் “ நம்பிக்கை கொடுத்து சென்றவரின் வார்த்தைக்கு மட்டுமல்லாமல் மனதின் ஓரம் இருக்கும் துளி நம்பிக்கையில் காத்துக் கிடந்தாள் இரவின் பனியில்.


உடலில் துளி தெம்பும் இல்லை. சிறு குடல் பெரு குடலோடு போட்டி போட நிலவையே பார்த்து நின்றவள் பின்னே கேட்டது கர்ஜனைக் குரல்.


“ இவ்ளோ நேரம் சாப்பிடாம நின்னு என்ன சாதிக்கலாம்னு நினைக்கிற? அதான் விருப்பம் இல்லைனு தெரியுதுல உன் வேலையை பார்க்க வேண்டியது தானே “


“இது என் கடமை. ஒரு மனைவியா உங்களுக்காக இருக்கிறதுல என்ன தப்பு? “ அவன் வந்து விட்ட இன்பத்தில் அவள் சொல்ல அவளை நெருங்கிருந்தவன்


“தப்பானவனுக்கு நீ பண்ணுறது தான் உன் தப்பு. முதல அந்த தண்ணீரை குடிச்சிட்டு விரதத்தை முடி “ பல்லைக் கடித்தவன் மீது பயம் இருந்து தயங்கினாள் கீதாஞ்சலி.


“இல்லை. இது முறைப்படி தான் செய்யணும்னு சொன்னாங்க. அதை செய்யாம நான் எதும் சாப்பிட மாட்டேன் “ பிடிவாதமாய் சொல்லியவளின் தாடை பற்றியவன்


“ நீ சாப்பிடாம செத்தே போனாலும் சந்தோஷம்னு இருப்பவனுக்காக இதெல்லாம் செஞ்சி எதை நிருபீக்க போற “ அவள் கண்களை பார்த்து வார்த்தைகளை கடித்து துப்பியவன் அலைப்பாய்ந்த பெண்ணின் கருவிழியிலே தடுமாறி போனான் அவன்.

அதுவரை இருந்த கோபம் தணிந்து அவளை விலக்கி மார்பின் குறுக்கே கை கட்டி நின்றவன் “ என்ன செய்யனுமோ செய்” உணர்ச்சி துடைத்த வார்த்தையில் அவளையே வெறித்து நின்றான். ராஜகுமாரி பாட்டி சொல்லிக் கொடுத்தது போல் இன்பமாய் சடங்கை செய்து முடித்தவளுக்கு நீரை கொடுக்க வர நிற்க முடியாமல் தடுமாறியவளை கையில் தாங்கிக் கொண்டான் ஆடவன்.

கீதாஞ்சலி நினைத்தாலும் நிலையாய் நிற்க முடியாமல் தலையை சுற்ற, புரிந்து கொண்டவன் தானே நீரை அவளுக்கு புகட்டியதோடு இனிப்பையும் கொடுத்து அவள் விரதத்தை முடித்து வைத்தான்.

அவ்ளோ தான் என அவள் பெரு மூச்சை விடுமுன்னே கையில் ஏந்தி அவர்களுக்கான அறைக்குள் நுழைந்தவன் மூடி வைத்த உணவை கொண்டு வந்து நீட்டிட , மலங்க விழித்தவளின் விழியில் திணறி கையில் கொடுத்து விட்டு வெளியேறியவனை இமை மூடாது பார்த்தாள் அவள்.


மறுநாள் காலை என்றும் இல்லாத உற்சாகத்தில் எழுந்த கீதாஞ்சலி வெளியே கிளம்பி செல்பவன் கையை பற்றியவள் " ரொம்ப நன்றி. நேத்... " அவள் முழுதாக சொல்லி முடிக்கும் முன்னே அமுதனின் ஐந்து விரல் பெண்ணின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.


- தொடரும்...
 
Last edited:

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ngy

Member
Joined
Nov 10, 2023
Messages
6
Anti villan pola ivan
 
Top