- Joined
- Nov 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் 17
ராகவின் கையை பிடித்து கொண்டு அவன் முகம் பார்த்தவள் " இந்த ஒரு வாரம் சொர்க்கம்னா என்னானு உன்கூட வாழ்ந்து தெரிஞ்சிக்கிட்டேன் ராகவ். என் வாழ்க்கையில உன்கூட இருந்த தருணங்கள என்னைக்கும் மறக்க முடியாது. இந்த நொடியே செத்தாலும் இந்த ஒரு வாரம் உன்கூட வாழ்ந்த சந்தோஷத்துல நிம்மதியா சாவேன் ராகவ் " இதழில் புன்னகையோடும் கண்களில் கண்ணீரோடும் சொன்னவளின் கன்னத்தை பற்றி சிரித்த ராகவ்
" என் ஸ்னோ என்னைக்கும் சந்தோசமா இருக்கணும்.. உன் சிரிப்ப பார்க்க இந்த ராகவ் என்னவேனா செய்வேன். சீக்கிரமே என் வீட்ல சொல்லி உங்க அப்பா கிட்ட முறையா பொண்ணு கேக்குறேன் " என்றவன் அவளின் அழுத கண்களை துடைத்து பவானியின் நெற்றியில் முத்தம் வைத்து சிரிக்க பவானியும் அவளின் சிரிப்பில் சிரித்து விட்டாள்.
" குட் கேர்ள்.. ஒழுங்கா போய் சாப்ட்டு நல்லா ரெஸ்ட் எடு நாளைக்கு காலேஜ்ல பாக்குலாம்" ராகவ் கூற சரியென்றவள் கிளம்ப அவள் வீட்டிற்குள் நுழையும் வரை காத்திருந்தவன் பவானி உள்ளே சென்ற பின் தான் ராகவ் அவனின் வீட்டை நோக்கி சென்றான்.
இவர்களை இதுவரை கவனித்து கொண்டிருந்தவன் யாருக்கோ போன் செய்து ஏதோ சொல்லி விட்டு அந்த இடம் விட்டு அகன்றான்.
அடுத்த நாள் தன்னவளை கானும் ஆவலுடன் சீக்கிரமே காலேஜ் வந்துவிட்டான் ராகவ். தன்னவளை நினைத்து சிரித்து கொண்டே தன்னுடைய நண்பர்கள் அருகில் செல்ல ராகவை கண்டதும் " டேய் ஒருவாரமா உனக்கு போன் பண்ணா எடுக்க மாட்டியா.. எங்க தான்டா போன " கடுப்போடு கேட்க புரியாமல் பார்த்த ராகவ்
" மச்சி அதான் சொன்னேன்ல பவானி கூட தான் இருந்தேன் " என்று சொல்லவே பதறி போனவர்கள்
" மச்சி ட்ரிப் கேன்சல் பண்ணி நாங்க வீட்டுக்கே போய்ட்டோம்டா. அத சொல்ல தான் உனக்கும் பவானிக்கும் கால் பண்ண ட்ரை பண்ணோம் பட் உங்க மொபைல்க்கு லைன் கெடைக்குல. நம்ப ப்ரோபஸ்ஸர் வேற ட்ரிப் கேன்சல்னு பேரன்ட்ஸ் மொபைல்க்கு மெசேஜ் தட்டி விட்டுட்டாரு" ராகவின் நண்பன் சொன்னதும் அதிர்ச்சியில் தலையில் அடித்து கொண்டான் ராகவ்.
பவானியை நினைத்து பயந்தவன் பதட்டத்தோடு அவளின் எண்ணிற்கு அழைக்க அது கிடைக்காமலே போனது.
" என்னாச்சுடா ஏன் பதட்டமா இருக்க " ராகவனின் நண்பன் ஒருவன் முகம் கண்டு கேட்க பதில் கூறாதவன் தன் வீட்டை நோக்கி விரைந்தான்.
" அப்பா நா சொல்றத கொஞ்சம் கேளுங்கப்பா. அவன் ரொம்ப நல்லவன்ப்பா. என்ன நல்லா பார்த்துப்பான்பா. ப்ளீஸ்ப்ப்பா அவன் கூட சேர்த்து வைங்கப்பா " தனது அறையின் மூடிய கதவின் முன் கதறி கொண்டிருக்க வெளியில் இருந்தவர்க்கு பவானியின் பேச்சு மேலும் எரிச்சலை தந்தது.
" அப்பா ப்ளீஸ்ப்பா என்ன வெளிய விடுங்க " கதவில் சாய்ந்து அழுதவள் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தாள்.
அவள் நினைவு எல்லாம் நேற்று ராகவிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்ததிலே சுழன்று கொண்டிருந்தது.
ராகவுடன் இருந்த தருணத்தை நினைத்து கொண்டு உற்சாகத்தோடு வீட்டினுள் நுழைந்தவள் தந்தையை கண்டு மிரண்டு தான் போனாள். பயத்தை மறைத்தவள் வரவழைத்த சிரிப்போடு அவளின் தந்தையின் முன் நிற்க மகளென்றும் பார்க்காமல் அவளின் கன்னத்திலே ஓங்கி ஒரு அடி வைத்தார். ஒரு வாரம் ட்ரிப் செல்லாமல் வேறு எங்கோ சென்று உள்ளாள் என்பதும் அத்தோடு ராகவ் பவானியை வீட்டில் இறக்கி விட்டு சென்றதை தனது ஆள் மூலம் தெரிந்ததும் ஆசை மகளென்றும் பாராமல் அறைந்து விட்டார் .
அவரின் இந்த திடீர் செயலை எதிர்பாராதவள் தூரம் போய் விழுந்தாள் பவானி. கன்னத்தை தாங்கி தந்தையை பார்த்தவள் " அப்பா " என்று அழைக்க அடக்கப்பட்ட கோவத்தில் இருக்கும் தந்தையை பார்த்ததும் பவானியின் இதழ்கள் தானாக மூடி கொண்டது.
" ஒரே மகள்னு ஆசையா வளர்த்தத்துக்கு என்னையே ஏமாத்திட்டு எவன் கூடவோ ஊர சுத்திட்டு வந்திருக்க. உனக்கு எவ்ளோ தைரியம். இனியும் உன்ன இப்டியே விடக்கூடாது. எனக்கு மகளா மரியாதையானு கேட்டா எனக்கு மரியாதை தான் முக்கியம். அத கெடுக்க யாரு என்ன பண்ணாலும் ஒழிச்சிருவேன் " பல்லைக்கடித்து பேசியவர் பவானியின் போனை தூக்கி எறிய அது சுக்கு நூறாக உடைந்தது. அதோடு நில்லாதவர் பவானியையும் அவளின் அறையில் அடைத்து பூட்டி விட்டார் பவானியின் தந்தை.
அவரின் இந்த கோவத்திற்கு காரணம் பவானியின் காதல் கிடையாது. அவள் காதலித்த ராகவின் தந்தை தான். ஆம் ராகவின் தந்தை தான் பவானி தந்தையின் தொழில் வட்ட எதிரி. அவரின் மகனை போய் தன் மகள் காதலித்து உள்ளாள் என்று தான் ஆத்திரமே இவருக்கு.
நேராக தன் வீட்டிற்கு வந்த ராகவ் அவனின் தந்தை அறைக்கு ஓடினான். லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்து கொண்டிருந்தவர் மகனை கண்டதும் பார்வையாலே அமர சொல்லி அவன் முகம் பார்த்தார்.
" அப்பா நா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் " என்று சொல்லும் மகனை ஆராய்ந்து பார்த்தவர்
" என்ன விஷயம். உன் முகம் இவ்ளோ பதட்டமா இருக்கு " என்று கஜேந்திரன் கேட்க முதலில் தயங்கியவன் பின் வரவழைத்த தைரியத்தோடு
" அப்பா நா ஒரு பொண்ண விரும்புறேன். எங்க காதல் விஷயம் அவங்க அப்பாக்கு தெரிஞ்சிருச்சி. நீங்க தான் வந்து அவர்கிட்ட பேசணும் " என்று முழுதாக சொல்லி முடிக்க இதை எதிர்பார்க்காதவர்
" நீ இன்னும் உன் டிகிரி கூட முடிக்கல. இதுலாம் இப்போ முக்கியமா " என்று சொன்னவர் மகனின் வருத்தம் கண்டு
" சரி விடு. அந்த பொண்ணு யாரு " என்று கேட்டதுமே நிம்மதியான ராகவ்
" அப்பா அவளோட அப்பாவும் நம்ப அளவுக்கு வசதியானவர் தான்பா. பவானி ப்ரைவேட் லிமிடெட் கம்பெனி CEO கருணாகரன்பா "என்று ராகவ் சொல்லி முடிக்க கஜேந்திரன் முகம் மாறியது.
மகனை மேலும் பேச அனுமதிக்காதவர் " இங்க பாரு ராகவ் அந்த பொண்ணு உனக்கு வேண்டாம். ஒழுங்கா படிப்ப முடிச்சு நம்ப பிசினஸ்ஸ பாரு. உனக்கு நானே ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் " என்ற தந்தை வார்த்தையில் அதிர்ச்சியானவன்
" அப்பா என்னால அவளை தவிர வேற யாரையும் நினைச்சி கூட பார்க்க முடியாது.. வாழ்க்கைனு ஒன்னுனா அது என் பவானி கூட தான் " பிடிவாதமாக ராகவ் கூற கோவமானவர் ராகவ் கன்னத்திலே அறைந்தார்.
" நானும் கிளி புள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்ட்றேன். நீ உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க. நீ காதலிச்ச பொண்ணோட அப்பன் யாரு தெரியுமா என் தொழில் எதிரி. அவனால எனக்கு நிறைய லாஸ் ஆகியிருக்கு அவன் பொண்ண காதலிச்சேனு சொன்னதுக்கே உன்ன வெளுத்துருக்கணும். ஒழுங்கா போய் படிக்கிற வேலைய பாரு " என்ற கஜேந்திரன் லேப்டாப்பில் மூழ்கி விட ஒரு முடிவுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான் ராகவ்.
கஜேந்திரன் பேசிய வார்த்தைகள் எல்லாம் ஈட்டியை போல் மனதை குத்தி கிழித்தது. இப்படி விட்டு செல்லவா அவன் ஆசை ஆசையாய் காதலித்தான். அவளை விட்டு சென்றால் இவனின் சந்தோசம் அல்லவா விட்டு செல்லும்.
அவளுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டிருப்பான் அதை எல்லாம் எளிதாக விட்டு செல்ல முடியாமல் தவித்த ராகவ் ஒரு முடிவோடு பவானி வீட்டை நோக்கி சென்றான்.
அழுது அழுது அப்படியே துவண்டு போய் தூங்கி விட்டாள் பவானி. எப்போதும் வருவது போல் பவானி அறையின் பால்கனி வழியாக வந்து விட்டான் ராகவ்.
அறை முழுவதும் பவானியை தேடியவன் கதவு அருகில் படுத்திருந்தவளை கண்டதும் அவளை நோக்கி ஓடினான் ராகவ்.
" ஸ்னோ ஸ்னோ " மெல்லிய குரலில் அவளின் கன்னம் தட்டி அழைக்கவே மெல்ல இமைகளை பிரித்து கண்களை திறந்தவள் ராகவை கண்டதும் தாவி அணைத்து கொண்டு சத்தமில்லாமல் கதறினாள்.
" அழாதடி ஸ்னோ. அதான் நா வந்துட்டேன்ல. நா உங்க அப்பா கிட்ட பேசுறேன்டி.. நீ எனக்கு எவ்ளோ முக்கியம்னு புரிய வைக்கிறேன் ஸ்னோ. நா உன்மேல வச்சிருக்கிற காதல் எவ்ளோன்னு அவர்கிட்ட சொல்லி புரிய வைக்கிறேன் " அழுதவளின் தலை வருடி கூற ராகவின் முகம் பார்த்து மறுப்பாக தலையாட்டியவள்
" இல்ல ராகவ் அவர் உன்ன ஏத்துக்க மாட்டாரு.. அவர் உன்ன எதாவது பண்ணிடுவாரு. நீ என்ன இங்க இருந்து கூட்டிட்டு போடா. எனக்கு பயமா இருக்கு ராகவ் என்ன உன்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்களோனு. ப்ளீஸ் ராகவ் என்ன கூட்டிட்டு போ ராகவ் " சொன்னதையே சொல்ல வேறு வழி இல்லாதவன் சரியென பவானியை அழைத்து கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான் ராகவ்.
அவன் அறியவில்லை இந்த முடிவு தான் இருவரின் வாழ்க்கையையும் சீரழிக்க போகிறது என்பதை.
" அப்றம் உனக்கு என்ன நடந்துச்சு பவானி. நீ எப்டி இறந்து போன " பதட்டத்தோடு ஆத்மி கேட்க அவள் முகம் பார்த்த பவானி
" எப்டியும் எங்க ரெண்டு பேரையும் எப்படியாவது பிரிச்சிடுவாங்கனு ராகவ் ஒரு எஸ் எம். எல். ஏ வேல்பாண்டியன் வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போனான். அவரும் எங்கள சேர்த்து வைக்குறேனு வாக்கு குடுத்தாரு. அவர நம்பி அவர் வீட்டுக்குள்ள தங்க நாங்களும் ஒத்துக்கிட்டோம். அடுத்த நாள் ராகவ ரிஜிஸ்டர் ஆபிஸ் போக சொல்லி அந்த மினிஸ்டர் சொன்னதால இவனும் கெளம்பி போய்ட்டான். அப்போ அப்போ " சொல்ல முடியாமல் கதறி அழுதது அந்த ஆத்மா.
பவானியின் நிலையை கண்ட இருவருக்கும் அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு ஊகித்து கொண்டார்கள்.
மேகா மெத்தை விட்டு எழுந்து பவானி அருகில் வந்தவள் " அந்த வேல்பாண்டியன் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா " தயங்கி கேட்க அழுதவள்
" அவன் மட்டும் இல்ல மேகா... அவனுக்கு கையாள இருந்தவங்க. வலியோட நா செத்து போனதுக்கு அப்றம் எத்தனை பேரோ " என்ற பவானி வார்த்தையில் இருவரும் அதிர்ந்து போனார்கள்.
" நா செத்து போனது போனது தான். இனி என்ன திருப்பி கொண்டு வரமுடியாது. ஆனா என் ராகவ் வாழ வேண்டியவன். அவன வெளிய விடாம அடைச்சு வச்சி போதை ஊசி போட்டு கொடும படுத்திட்டு இருக்கான். அவனை எப்படியாச்சும் காப்பாத்தி குடுங்க " கையெடுத்து கும்பிட பதறி அருகில் வந்த ஆத்மீ
" நீ கவலை படாத பவானி கண்டிப்பா உன் ராகவ நாங்க காப்பாத்தி தரோம். நீ இறந்த விஷயம் உன் அப்பாக்கு தெரியுமா " அவளின் சந்தேகத்தை கேட்க மேகாக்கும் அதே சந்தேகம் தான் போல
" தெரியாது அவர் இன்னும் என்ன தேடிட்டு தான் இருக்காரு. நாங்க ரெண்டு பேரும் அந்த வேல்பாண்டியன் வீட்டுக்கு தான் போனோம்னு எங்க ரெண்டு வீட்டுலையுமே தெரியாது " பவானி கூற அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் ஒரு முடிவோடு உறங்க சென்றனர்.
தன் முன்னால் போர்வை தலைக்கு போத்தி அமர்ந்தவனை கொலைவெறியோடு பார்த்து கொண்டிருந்தான் கணபதி.
" டேய் இன்னும் எவ்ளோ நேரம் தான்டா இப்டியே பார்த்துட்டு இருக்க போற மணி ரெண்டு ஆகுது தூங்க விடுடா " கெஞ்சாத குறையாக சொன்ன கணபதி மெத்தையில் சாய போக இழுத்து பிடித்த ஆரவ்
" எனக்கும் தான் தூக்கம் வருது. தூங்காம தலைவிதியேனு உன் மூஞ்ச பார்த்துட்டு இருக்குல " எக்கச்சக்க தெனாவட்டாக பேசியவனை வெட்டவா குத்தவா என்கிற அளவுக்கு முறைத்து பார்த்த கணபதி
" அடேய் நானாடா உன்ன என் மூஞ்ச பார்த்துட்டு இருக்க சொன்னேன். ஏன்டா இப்டி என்ன இம்சை பன்ற. நீயும் தூங்கேண்டா " என்று கணபதி கூறியதில் பதறிய ஆரவ்
" மச்சான் கண்ண மூடினாலே கனவுல தாய்க்கிழவி தான்டா வரா " சொல்லியவன் அழுக.ஆரவ் கூறியதை கேட்டு குபீரென சிரித்து விட்டான் கணபதி.
கண்ணில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்தவனை கொலைவெறியோடு பார்த்த ஆரவ் கணபதி நிறுத்தாமல் சிரித்ததில் கடுப்பாகி விடவே. ஆரவ் எட்டி உதைத்ததில் மெத்தையில் இருந்து உருண்டு விழுந்தான் கணபதி.
ஆனால் அப்போதும் கணபதி சிரிப்பை அடக்கவில்லை.
" டேய் அதிகமா சிரிச்ச அந்த டாக்டர் புள்ளைகிட்ட நீ ஆல்ரெடி ரெண்டு பொண்ணுங்கள காதலிச்சு ஏமாத்துனதா போட்டு கொடுத்துருவேன் " என்ற அடுத்த நொடி கணபதி வாய் அதிர்ச்சியில் மூடியது.
" நா எப்போடா காதலிச்சேன். ஏன்டா போட்டு கொடுக்குறதுக்கும் ஒரு மனசாட்சி வேணாமா. இந்த மூஞ்சிய ஒருத்தி காதலிக்கிறதே பெரிய விஷயம். இதுல நா கழட்டி விட்டேனு சொன்னா உலகம் நம்புமா ராசா. " கணபதி பாவமாக கூறியதில் சிரித்த ஆரவ்
" அப்போ மூடிட்டு ஒழுங்கா தூங்கு. இவர் நம்பள கலாய்க்காரரம பே " என்ற ஆரவ் மெத்தையில் படுத்து கொள்ள பாவம் கணபதிக்கு தான் தூக்கம் தூரம் போய் விழுந்தது.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 17
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.