- Joined
- Nov 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் 14
வீட்டின் பின்புறத்தில் அமர்ந்து நண்பர்கள் பால்ய நினைவுகளை பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் சத்தமாய்.
விஷ்ணு வருகிறான் என அறிந்ததும் அவர்களுடைய மற்றோரு நண்பனும் வந்துவிடவே பேச்சு சத்தம் அதிகரித்தது.
" டேய் வெற்றி அந்த பன்னிரண்டாவது பையனை மிரட்டி விட்ட கதையை சொல்லு " மணிகண்டன் சொல்ல ஆவலாய் பார்க்கும் விஷ்ணுவிடம்
" அதான் மச்சான் உன் ஆளு அந்த தேனு பொண்ணுவ பார்த்துக்க சொன்னில்ல. எப்பவும் நம்ப பசங்க அந்த பொண்ண பார்த்தா கவனிக்கிறது உண்டு. நம்ப செல்வா இல்ல பயபுள்ள படிச்ச ஸ்கூல் முன்னாடியே ஒரு கடையை போடவும் எங்களுக்கும் வசதியா போச்சு. அப்படி தான் ஒரு நாள் நம்ப கூட்டம் எல்லாம் அவன் கடையில உக்காந்து பேசிட்டு இருக்கும் போது சிலுவண்டு சைசுல ஒருத்தன் வந்தான். பார்க்க தனுஷ்ஷோட தம்பி மாதிரி இருப்பாப்ல. யாருக்கோ ப்ரொபோஸ் பண்ண போறான்னு பேசிட்டு இருந்தான். ஆனா எங்களுக்கு அவன் பேசி முடிக்கும் போது தான் தெரியும் அவன் ப்ரொபோஸ் பண்ண போறது 12A ல இருக்குற உன் ஆளுன்னு " பொங்கும் சிரிப்பை அடக்க விஷ்ணுவின் முகம் தீவிரமாகியது பதட்டத்தில்.
வெற்றி நிறுத்திய இடத்திலிருந்து மணி தொடர்ந்தவன் " தேனுன்னு பெயர் வந்ததும் நம்ப பசங்க மொத்த பேரும் ஒரே நேரத்துல அலார்ட் ஆகிட்டானுங்க. பாவம் அந்த பையன். நம்ப பசங்க கொடுத்த மிரட்டல்ல அவன் அதுக்கு அப்றம் கிளாஸ் மாறிட்டான். போதாது நம்ப பசங்க வேற தேனுவோட அண்ணனுங்கனு சொல்லி வைக்க பாவம் அந்த பொண்ணு பசங்க ஏன் அதை பார்த்து மிரளுறாங்கன்னு கூட தெரியாமல் முழிச்சிருக்கும் " சொல்லி சத்தமாய் சிரிக்க விஷ்ணுவிற்கு ஆத்ம நிம்மதி உண்டானது.
ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாதவன் " நான் உங்கள கவனிக்க தானடா சொன்னேன். இதையெல்லாம் எதுக்கு பண்ணி வச்சிருக்கீங்க? " முறைப்பாக வெளிவர
" ராசா உள்ளுக்குள்ள உனக்கு குளுகுளுன்னு இருக்குறது இங்க வர தெரியுது. ஒரு செகண்ட்ல நல்லவனா மாறாதடா. இவ்ளோ இருக்கிறவன் தினம் அந்த பொண்ண பற்றி கேட்டு எங்கள நச்சரிச்சிருக்க கூடாது " ஒரு சேர சொல்லும் நண்பர்களை பார்வை மாறாமல் பார்த்தவன்
" சும்மா ஒன்னும் செய்யலையே. அதான் லஞ்சமா பாரின் சரக்கு வருதுல "
" அந்த ஒரு காரணம் தான் மச்சான் நீ நம்ப கூட்டத்துல ஒசந்து நிற்கிற" தோளை தட்டிக் கொடுத்தவன் கையை தட்டி விடவும் தேனிசை அங்கு வரவும் சரியாக இருந்தது.
அவள் திடீர் வருகையை எதிர்பாரா ஆண்கள் திடுக்கிட்டு நிற்க, " சாப்பிட கூப்பிடுறாங்க " இயல்பாய் சொல்லிவிட்டு போறவளை மற்றவர்கள் நம்பினாலும் விஷ்ணு விழிகள் கூர்மையானது அவளின் நடவடிக்கையில்.
வெற்றியின் மனைவி ப்ரியா தலை வாழை இலையில் சமைத்ததை பரிமாற " அக்கா நான் ஹெல்ப் பண்ணுறேன் " என வந்த தேனுவை அதட்டி உக்கார வைத்த ப்ரியா அவளுக்கும் உணவை வைத்தாள்.
தேனுவும் பிரியாவும் ஒரே ஊர் தான். பக்கத்து வீட்டுக்காரி. இவளின் கல்யாணத்திற்கு தாயோடு வந்த நினைவுகள் எல்லாம் இன்றும் தேனுவால் மறக்கவும் முடியாதவை.
ஆறுமுகம் யோசிக்காமல் தேனுவை அனுப்ப மற்றோரு காரணமும் இதுவே.
" வர வர ரொம்ப பெரிய மனுஷி மாதிரி தான் பண்ணுறக்கா!" என்பவள் தலையில் வலிக்காது கொட்டு வைத்த பிரியா
" சொன்னாலும் சொல்லலைனாலும் நா பெரிய மனுஷி தான்டி. ரெண்டு வருஷத்துல நீ இவ்ளோ மாறிருக்கும் போது நான் கல்யாணமாகி புள்ள பெத்தவ "
" உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. நானும் வெற்றி அண்ணா மாதிரி அமைதியா சாப்பிடுறேன் " பேச்சு வாக்கில் சும்மா இருப்பவனை கோர்த்து விட்டு குனிந்து கொள்ள கணவனை முறைத்தாள் பிரியா.
"நானும் வெற்றி அண்ணா உன் கிளாஸ் கவிதாக்கு கொடுத்த காதல் லெட்டர் வச்சி அவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சேன். ம்ச் " பாவமாக தேனிசை உச்சுக் கொட்ட வெற்றி முகம் கலவரமாகியது.
" தேனுமா!!! பிரியா அப்படிலாம் இல்லம்மா. நான் போய் அப்படிலாம் பண்ணுவேண்ணா? எனக்கு அப்போவே தெரியும் என் அத்தை மவ ப்ரியா தான் " பேசிக் கொண்டே போனவனை வாயை பொத்த சொல்லிய ப்ரியா
" நீ என் கிளாஸ் மஞ்சுக்கே ரூட் விட்ட கதை எனக்கே தெரியும். ரொம்ப நல்லவனாட்டும் நடிக்காதடா " அதட்டி விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்த பிரியா
" தேனு உனக்கு என் கிளாஸ் இளங்கோ தெரியுமா? " என்றதும் தான் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் ஒன்றுக் கூடி எரிந்தது தேனிசை முகத்தில். அதை விஷ்ணுவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
" தெரியுமாவா? எங்க அம்மாவுக்கு இளங்கோன்னா பிடிக்கும். அவங்களும் சொல்லுவாங்க. நல்ல பையன். நல்லா படிப்பான்னு.. எனக்கும் அவர ரொம்ப பிடிக்கும். நான் அவரை பார்க்கவே உங்கள பார்க்கிற சாக்குல உங்க கிளாஸ் வருவேன். அமேசான் காடு மாதிரி இருக்குற உங்க கிளாஸ்ல இளங்கோ மட்டும் ஏஞ்சல் மாதிரி தனியா உக்காந்து படிச்சிட்டு இருப்பாரு " கண்கள் மின்ன சொல்லிக்கொண்டே போறவளை நண்பர்கள் பீதியாய் பார்க்க விறப்பாக அமர்ந்திருந்த விஷ்ணு உணவை உண்ணாமல் அவள் பேசுவதை காதில் வாங்கினான் உள்ளூர எரியும் நெருப்பை அடக்கியப்படி.
ஆண்களின் மனநிலை அறியாது பிரியாவும் தேனிசையும் அவர்களின் பள்ளி நினைவிற்கே திரும்பி விட்டனர்.
" அடிப்பாவி!!! அக்கான்னு பாசத்துல வந்தன்னு நினைச்சா.. இதுக்கு தானா? ".
" பின்ன சொல்லிட்டா வர முடியும். நான் அவர் கிட்ட பேசலாம் முயற்சி பண்ணேன். ஆனா பேசல பயத்துல "
" அது சரி. இங்க கோயம்பத்தூர்ல தான் ஒர்க் பண்ணுறான். நம்பர் தரேன் பேசுறியா? " பெண்களுக்குள் பேசிக் கொண்டிருக்க விருட்டென இருக்கையில் இருந்து எழுந்தான் வேகமாய்.
" அண்ணா என்னாச்சு? இருங்க சாப்பாடு வைக்கிறேன் " எதுவும் புரியாமல் பிரியா கேட்க
"போதும் ம்மா. " உள்ளிருக்கும் எரிமலையை கட்டுப்படுத்தி சொல்லியவன் போகும் முன் தேனுவை ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல தடுமாறி போனாள் பாவை.
கோவத்தை தாண்டி அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை தடுமாற செய்தது.
வெற்றியும், மணியும் எல்லாம் தெரிந்தும் மௌனமாய் அமர்ந்திருக்க, பிரியா மீண்டும் " அவன் நம்பர் தரவா? " என்பவளிடம்
" இல்லக்கா. அவரை பிடிக்கும் தான். அதுக்காக இப்போ போன் பேசுற அளவுக்கு முக்கியமானவர் இல்லை " அதோடு அப்பேச்சிற்கு முற்று புள்ளி வைத்து விட்டாள் தேனிசை.
மதிய உணவை முடித்து ஆண்கள் தனியே வெளியே சென்று விட பிரியாவோடு வீட்டிலிருந்த தேனு தான் வாசலை அவ்வப்போது எட்டி பார்த்தாள்.
பக்கத்திலே இருந்து தொல்லை தருபவன் இப்போது உடனில்லையே என்ற புது கவலை. தன் செயலை நினைத்து அதிர்ந்த தேனிசை கடினப்பட்டு மனதை மாற்றி பிரியாவின் குழந்தையோடு நேரம் கடத்தினாள்.
நன்றாக இருட்டிய பின்பே வெற்றியோடு வீடு வந்த விஷ்ணு பிரியாவிடம் சொல்லிவிட்டு முன் செல்ல தேனுவும் அவர்களிடமிருந்து விடைபெற்று அவனை தொடர்ந்தாள் ஓட்டமும் நடையையுமாய்.
காரை ஸ்டார்ட் செய்த வேகத்திலே இயக்கியவன் செயல் அவள் வருகையை எதிர்பார்க்கவில்லை என்பது போல் தான் பிரதிபலித்தன.
அதை உறுதி படுத்துவது போல் விஷ்ணு அவள் புறம் திரும்பிடாது சாலையில் பார்வை பதிக்க கவலையாகி போனாள் தேனிசை.
தன்னால் தான் கோவமாக இருக்கிறான் என்பதை உணர்ந்த பெண் " நீங்க கோவமா இருக்கீங்களா என்மேல? " மெல்லிய குரலில் கேட்டிட, கேட்காதவன் போல் அலட்சியம் செய்தான்.
" உங்க கிட்ட தான் கேட்குறேன். என்மேல கோவமா? "
" ம்ச். உன்மேல கோவப்பட எந்த ரைட்ஸ்ஸும் எனக்கு இல்லை "
" நீங்க சொல்லுறதுலையே தெரியுது என்மேல கோவமா இருக்கீங்கன்னு. நான் ப்ரியா அக்கா கூட பேசுனதுல தானே கோவமா இருக்கீங்க. அது ஒன்னும் நீங்க நினைக்கிற எண்ணத்துல சொல்லுல. எனக்கு இளங்கோவ ஒரு ரோல் மாடலா பிடிக்கும். அத தான் அப்படி சொன்னேன் " வாயிக்கு வந்ததை சொல்லி மலையேறிய மன்னவனை இறக்க முயன்றாள். ஆனால் அது இன்னும் அவனை எரிச்சல் மூட்டியது தான் அதிகம்.
அதன் வெளிப்பாடு, " இன்னொரு முறை அவன் பேச்சையோ.. அவன் பெயரையோ நீ சொல்லி கேட்டேன் இருக்குற கோவத்துல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. வாயை மூடிட்டு அமைதியா உக்காருடி. வர்ற கோவத்துல காரை எங்கையாச்சும் விட்டுருவேன் " கழுத்து நரம்புகள் புடைக்க கடித்து துப்பியவனை பீதியில் பார்த்த தேனிசை வாயை இறுக்க மூடிக் கொண்டாள்.
இருட்டிய ரோடு. இவனிருக்கும் கோவத்தில் செய்தாலும் ஆச்சர்யமில்லை.
ஸ்டியரிங்கை இறுக்கி பிடித்த விஷ்ணுவின் காதுக்குள் பிடிக்காத அந்த பெயர் தான் மந்திரமாய் ஒலித்தது.
" இளங்கோ? மை பூட்" முனுமுனுத்த விஷ்ணு அருகில் இருப்பவளிடம்
" அவனை பத்தி சொன்னதும் மேடம் மூஞ்சில அப்படி பிரகாசம். அவன் நேருல இருந்தா மேடம் ஓடிருப்பிங்களோ அவன் கிட்ட? "
" அய்யோ!!! எனக்கு அவரை நேருல பார்த்தாலே பதட்டமாகிரும் " பதில் சொல்லி விஷ்ணுவின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டாள் கிராதகி.
" பதட்டம் " பற்களை நறநறவென கடித்தவன்
" ஓஹ்... இல்லைனா மேடம் போய் பேசுருவீங்க அப்படி தானே " குரல் ஏறி இறங்க பாவமாய் பார்த்தவள்
" அதுலாம் பேச மாட்டேன். பேச வேண்டிய அவசியமும் இல்லை. அது ஸ்கூல் படிக்கும் போது. இப்போ அதே மனநிலையில நான் இல்லை. நல்லா படிக்கிற பையன். நல்ல குணம்னு அம்மா சொல்லவும் எனக்கு அவரை பிடிக்கும். அவ்ளோ தான். மத்தப்படி எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அதான் உங்க நண்பர்கள் இலவச சேவையை உங்களுக்காக பண்ணிட்டு இருந்தாங்களே. அவங்க அதை நடக்காம பண்ணிருப்பாங்களே " ஒரே மூச்சாக தேனிசை சொல்லிட அதிர்ச்சியில் சடன் பிரேக் போட்ட விஷ்ணு நல்லவேளையாக அருகில் இருப்பவளை பிடித்து விட்டான்.
இல்லையேல் எதிர்பாரா பிரேக்கில் முன்னாடி போய் முட்டி நெற்றியில் பரிசை வாங்கிருப்பாள்.
விஷ்ணு அவள் சொன்னதை நம்பாத பார்வையில், " என்ன உளறிட்டு இருக்க தேனு? "
" எல்லாம் தெரியும். நீங்க பேசுனத நான் கேட்டேன் " உறுதியாய் சொல்ல ஆழமாய் பார்த்த விஷ்ணு மீண்டும் வண்டியை கிளப்பினான் எதுவும் சொல்லாது.
அவன் பதில் சொல்லுவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமாகியது அவன் நடவடிக்கையில்.
" இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? "
" நீ சொன்னது தான் உண்மைன்னு அர்த்தம் " என்றான் தெளிவாய்.
வாயடைத்து போனவள் " நீங்க எப்படி அதை பண்ணலாம். அது என் வாழ்க்கை "
" எனக்கு வேண்டியதை பத்திரமா பார்த்துக்க நினைக்கிறது தப்பு இல்லையே...பேச்சை மாத்தாத தேனிசை. உனக்கு புரியலையா இல்லை புரிஞ்சும் ஏற்க மறுக்குறியா தெரியல. ஆனா என் எமோஷனலோட ரொம்ப விளையாடுற நீ" மீண்டும் குற்றம் சாட்டி திரும்பிக் கொள்ள எதையும் காதில் வாங்காத தேனிசைக்கு ஏனோ அவன் தன்னை முழு பெயர் சொல்லி கூப்பிடுவது காரணமே இல்லாமல் எரிச்சலைக் கூட்டியது பெண்ணிற்கு.
சுர்ரென ஏறிய கோவத்தில் " அப்பா நான் எதுமே பேசல. ஆள விடுங்க. நான் உங்க முன்னாடி வாய்க் கூட திறக்க மாட்டேன் " கையெடுத்து கும்பிட
" ஆமா. என்கிட்ட பேச மேடம்க்கு வாய் வலிக்கும். இளங்கோ நம்பர் வாங்கி தரவா? " என்றதில் முகம் சிவந்து காதில் புகை வராத குறை தான் தேனுவிற்கு.
பிடித்த இளங்கோவே இப்போது பிடிக்காமல் போனது விஷ்ணு கேட்ட கேள்வியில். ' அதெப்படி இவரே சொல்லலாம்' என்ற ஆதங்கம் அவளிடம்.
நடந்த வாக்குவாதத்தில் கார் வீட்டை அடைந்தது கூட தெரியவில்லை. கேட் திறக்கும் சத்தத்தில் வந்ததை உணர்ந்த தேனிசை அவன் காரை நிறுத்தவும் இறங்கி வேக நடையில் நடக்க ஆரம்பித்தாள் அவள் இருப்பிடம் நோக்கி.
அம்மிணியின் கோவத்தில் அடங்கி தணிந்த விஷ்ணுவிற்கு அதன் பின்பு தான் பேசிய வார்த்தைகள் உரைக்க ஆரம்பித்தன.
பின்னந்தலையிலே அடித்துக் கொண்டவன் " தேனு... தேனு... ஏய் நில்லுடி... ஹனி " குளிர்ந்த குரலில் கூவிக் கொண்டு தொடர மதிக்கவே இல்லை அவள்...
தனக்காக பின் புறத்தில் ஒதுக்கப்பட்ட அறையின் பூட்டை திறக்க போனவளின் கையை பற்றி திருப்பியவனை இம்முறை அச்சமும் அதிர்ச்சியுமின்றி கோவமாய் பார்த்தாள் பேதை.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.