அத்தியாயம் 13

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
57
* சில காரணத்தால் எனக்கும் கொஞ்சம் கேப் தேவைப்பட்டது அதான் இவ்ளோ லாங் கேப் டியர்ஸ்.. மன்னிச்சு 🤗*

அத்தியாயம் 13

சிலிர்க்க வைக்கும் குளிருக்கு இதமாக பகலவன் அவன் வருகையை தர மனிதர்கள் அவர்களின் அன்றாட வேலையில் மூழ்கினர்.


இங்கு ஆறுமுகம் இல்லத்தில் காலையிலே அனைவருக்குமான தேநீரை ஆவி பறக்க போட்டுக் கொண்டிருந்தாள் தேனிசை. அது அவளின் கடமை அங்கு.



கூடுதலாக வந்தவனுக்கு கொடுக்குலாமா வேண்டாமா? என யோசிக்கும் போதே விஷ்ணுவின் ருத்ர முகம் வந்து போக தலையை தட்டிக் கொண்டவள் நகத்தை கடித்தாள்.



" காலையிலையே திட்டு வாங்க போறேன். யாராச்சும் என்னை காப்பாத்துங்களேன் " வாய்விட்டு புலம்பும் போதே பின்னால் கேட்டது ஆண் குரல்.



" என்ன மேடம் காலையிலே புலம்பிட்டு இருக்கிங்க? " குறும்பும் உரிமையும் கலந்த குரலில் கேட்டவன் மேடையில் அமர தடுமாறிய தேனிசை தன்னை நிதானித்துக் கொண்டாள் அவன் முன்.



இடுப்பில் ஒரு கை மேடையில் ஒரு கை என அவனை முறைத்து நின்ற தேனிசை " உங்களுக்கு இங்க என்ன வேலை? என்ன வேணுமோ சொல்லுங்க நானே எடுத்துட்டு வரேன். நீங்க இங்க வர வேண்டாம் " உறுதியாக சொல்லிவிட்டு கிளாசை எடுத்து வைக்க



" என்ன கேட்டாலும் கிடைக்குமா? "



" ம்ம்ம் "


" என்ன கேட்டாலும்ம்ம் " இரண்டாவது முறையாக அழுத்தி சொன்ன பின்பே அவன் கேட்க வருவதின் அர்த்தம் விளங்கி அவனை முறைத்தாள் அவள்.



" காலையிலேயே என்கிட்ட வம்பு பண்ணனும்னுனே இவ்ளோ சீக்கிரம் எழுந்து வந்திங்களா? "



"ம்ச்... நீ இல்லாம இங்க தூங்க கஷ்டமா இருக்கு. அதான் உன்னை பார்க்கணும்னு வந்தேன் "



" உங்க பேச்சு எல்லை மீறுது சார் " வெளியே கோவமும் உள்ளே நக்கலும் அடங்கிருந்தது. அவளுக்கு பிடித்திருக்கிறது விஷ்ணுவிடம் இது போல் வாய் சண்டை பிடிப்பது. உரிமை இருப்பதாக அவளும் நினைக்கிறாளோ என்னவோ. விரும்புகிறாள் அதை.



வெடிக்க முயலும் சிரிப்பை உதட்டிற்குள் அடக்கி அவனை முறைத்து விட்டு மீண்டும் காபி தேநீர் பால் என பிரித்து வைக்க தலை சாய்த்து பெண்ணை ரசித்த விஷ்ணு, " எல்லையை தொட்டா தானே மீறுறதுக்கு? நான் இன்னும் கோட்டையே தொடுலையே ஹனி. என்னவோ. இந்த முகத்தை பார்க்க இவ்ளோ காலையில எழுந்தது ஒர்த்து தான்... அப்படியே சிரிச்சிட்டே ஒரு காபி கொடுத்தா நாள் சிறப்பாக போகும் " வேண்டுமென சீண்டியவனின் கையில் வம்படியாக கப்பை திணித்த தேனிசை பொய்யான கோவத்தில் இளித்து விட்டு போக இதழ்கள் விரிந்தது விஷ்ணுவிற்கு.


" நானே இதை எஸ்பெக்ட் பண்ணல ஹனி!!.. ஹே நில்லு... நான் பேசிட்டு இருக்கேன்ல "


" ஐயா சாமி. எனக்கு இங்க ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. உங்க கிட்ட நின்னு பேசுறது மட்டும் என் வேலை இல்லை "


" இருந்துட்டு போகட்டும். காபி கொடுத்துட்டு ரெடியா இரு நாம இன்னைக்கு வெளிய போறோம். ஈவினிங் தான் வருவோம். சோ ரெடியா கிளம்பிடு" தீவிர குரலில் சொல்லியவன் தேநீரை ருசிக்க மலங்க விழித்தாள் தேனிசை.

" விளையாடுறீங்களா? "


" இப்போ விளையாடுல ஹனி. சிட்டிக்கு போகணும். என் ஓல்ட் பிரண்ட்ட பார்க்க. இங்க உனக்கு தான் ரூட் தெரியுமே "


" அதுக்கு! தேவையில்லாம இந்த ஊரார் வாயிக்கு நான் விருந்தாக விரும்பல. உங்களையும் என்னையும் தனியா வச்சு பார்த்தா கண்டதையும் பேசுவா... "


" பேசட்டும் எனக்கு கவலை இல்லை. சத்தியா உங்க ஐயா கிட்ட சொல்லிட்டான். அவருக்கும் தெரியும். சோ, எதும் பேசாம கிளம்பி இரு. கரெக்டா 9 மணிக்கு வாசல்ல கார்ல வெயிட் பண்ணுவேன். வெயிட் பண்ண வைக்காம ஷார்ப்பா வா.. அவ்ளோ தான். இனி உன் வேலையை பாரு " முழுதாக தேநீரை காலி செய்தவன் அவன் அறை நோக்கி செல்ல ஆடிப் போய் நின்றவளுக்கு மூளையும் உறைந்து விட்டன அதிர்ச்சியில்.


"நான் வரலனு சொன்னா!" என்பவளை நின்று புருவம் உயர்த்தி ஏறிட்டான் விஷ்ணு.


அந்த சிறு செய்கையில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கிருப்பதாய் அவள் நினைத்தாள். அதற்கு ஏற்ப "உன்கிட்ட பெர்மிஷன் நான் கேட்கல. நீ வரணும் டாட். அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுவேன். வரலைனா அத்தனை பேர் முன்னால இழுத்துட்டு போவேன். உனக்கு எது வசதியா இருக்கும்னு நீயே முடிவு பண்ணு தேனிசை" அழுத்தம் கூட்டி சொல்லியவன் சென்று விட அவன் தன் பெயரை சொன்னதிலே ஐயா கோவமா இருப்பதை உணர்ந்த தேனிசை மறுவார்த்தை அவனிடம் வைக்கவில்லை.


காலை உணவுகள் ஆவி பறக்க ஹாட் பாக்ஸில் அடுக்கி வைத்தாள் மாரி. உணவு நேரம் என்பதால் ஒவ்வொருவராக உணவு மேசையில் வந்து அமர கண்மணி துளசியோடு கோவில் சென்றதை தங்கை மூலம் கேட்டுக்கொண்டப்படி இருக்கையில் அமர்ந்தார் ஆறுமுகம்.


"சத்தியா எங்க?" என்ற குணசீலனுக்கு


"அவன் தான் கூட்டி போகிருக்கான்" என்றாள் லதா.


"குணசீலா, அந்த மண்டபம் விவரத்தை இன்னைக்கு பேசி முடிச்சிட்டு வந்துரு. இரண்டு நாளைக்கு சேர்த்தே முடிச்சிடு. சாப்பாட்டுக்கு நம்ப கேசவன் கேட்டரிங் பேசிடு. அவன் தான் செய்யிற வேலையை திருப்தியா செய்வான். அவனை விட்டா நம்ப விருந்தினர் சாப்பாடு பற்றி கவலை வேண்டாம். நான் இன்னைக்கு மில் வரை பொய்ட்டு கேசவன பார்க்க வந்துடுறேன்" பேசிக்கொண்டிருக்க உணவை பரிமாற வந்தாள் மாரி.


புதிதாக மாரி இருப்பதை கண்கள் சுருக்கி பார்த்த லதா " நீ இங்க என்ன பண்ணுற? அவ எங்க?" அதட்டலாய் கேட்க, லைலாவும் முரளியிடம் பேசியப்படி அங்கு வந்து சேர்ந்தாள்.


"தேனுவையா கேட்குறிங்க?" ஒன்றும் தெரியாத அப்பாவி போல் கேட்கும் மாரிக்கு தெரியாமல் இல்லை எதுவும்.


"அந்த அம்மாவை தான் கேட்குறேன். எங்கே அவ?"


"அவ .." மாரி துவங்கும் முன்

" நான் தான் விஷ்ணு கூட அனுப்பி வச்சிருக்கேன் லதா" என்றார் இயல்பாய்.


ஆனால் அங்கு அவரை தவிர்த்து மற்றவர்கள் முகம் தான் வெகுவாக மாறியது எரிச்சலில்.


"அவளையா? எதுக்கு விஷ்ணு கூட?"


"விஷ்ணு அவனோட நண்பரை பார்க்கணும்னு சத்தியாகிட்ட சொன்னான். தேனுக்கு தான் அந்த தம்பி வீடு தெரியும். அதான். சத்தியா, விஷ்ணு ரெண்டு பேருக்கும் நம்ப ஊரு கொஞ்சம் புதுசா தெரியும்ல" மகன் மீதான அக்கறையில் சொல்ல பல்லைக் கடித்தவள்


" அதுக்கு ஏன் அவளை அனுப்பிருக்கீங்க அண்ணா? ஏன் நம்ப லைலாவை அனுப்ப வேண்டியது தானே. அவளுக்கு தெரியாத இடமா? வந்த நாள்ல இருந்து விஷ்ணு கூட அவ நேரமே செலவிடல. இது அவங்களுக்கு ஒரு விதமா அமைஞ்சிருக்குமே " தேனுவை அனுப்பிவிட்ட வேகம் இருந்த போதும் பாவமாக சொல்ல அப்போதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஆறுமுகம் லதாவின் எண்ணத்தை புரிந்துக்கொள்ளவில்லை.

“நான் கேட்டேனே லதா. லைலா கிட்ட சிட்டி வரையும் பொய்ட்டு வரியாமானு கேட்டேன். புள்ள தான் தலைவலி முடியாது மாமான்னு சொல்லிடுச்சி” என்றவர் உணவை உண்ண குணசீலனும் லதாவும் ஒருசேர மகளை வெறித்தனர்.

“அம்மா அவர் ஏதோ வேலை விடுவாரோனு எப்பவும் போல பொய் சொன்னேன். இது தான் விஷயம்னு சத்தியமா தெரியாதுமா” தாயின் காதைக் கடித்தவளுக்கு மூஞ்சு சுருங்கி போனது.

தனக்கு வந்த வாய்ப்பை நானே கெடுத்து விட்டேனே என முகத்தை தொங்க போட்டவளின் மனநிலை புரியாமல், “அப்போ நாம வெளிய போவோமா லைலா?” என்பவனை எரிச்லை மறைத்து பார்த்த லைலா

“எனக்கு தலைவலிக்குது வரல” எழுந்து சென்று விட்டாள் அவள் அறைக்கு. முரளி போறவளை புரியாமல் பார்த்தவன் தோளை குலுக்கிவிட்டு உணவை உள்ளே தள்ளினான்.

லேசாக மேகம் கறுத்து தூறலிட தயாராக இருப்பதை பொலிவின்றி வெறித்திருந்தாள் தேனிசை. அவள் மனதில் இப்போது இருக்கும் ஒரே பயம் லதாவே. எப்படியும் இந்நேரம் தெரிந்திருக்கும் அவர்களுக்கு. இனி என்ன நடக்குமோ? அவர்கள் என்ன பேசுவார்களோ என்பதிலே மூளை உழன்று கொண்டிருக்க ஹாரன் அடித்து அவளை திடுக்கிட செய்தான் விஷ்ணு மதுராந்தகன்.

“என்கூட இருக்கும் போது அப்படி என்ன யோசனை உனக்கு?”

“அதை எல்லாம் சொன்னாலும் உங்களுக்கு புரிய போறது இல்லை” வெடுக்கென அவள் சொல்ல ஆழ்ந்து பார்த்தவன்

“இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. பொறுமையா சொல்லு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுறேன்” பொறுமையாய் சொல்ல கடுப்பாகி போனாள் அவன் பேச்சில்.

பெரு மூச்சை விட்ட தேனிசை, “உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிங்கனு சத்தியமா தெரியல. எந்த தைரியத்துல சத்தியா அண்ணாவை விட்டு ஐயா கிட்ட கேட்க சொல்லிருப்பிங்க. அவங்க இப்போ என்னை என்னானு நினைப்பாங்க? நீங்க பண்ணுறது எல்லாம் வரம்பு மீறி” ஆதங்கத்தில் பேசியவள் அவனின் விழியின் சிவப்பில் பேச்சை நிறுத்திக் கொண்டாள் பாவை.

பயம் தான். “ ம்ம் ..அவ்ளோ தானா? இல்ல இன்னும் ஏதாச்சும் இருக்கா?” விஷ்ணு கேட்ட தோரணையில் கோவம் கிலோ கணக்கில் கொட்டி கிடப்பது பச்சையாக தெரிந்தது அவளிற்கே.

அதான் வாயை கம் போட்டது போல் இறுக்கி மூடிக் கொண்டாள் உஷாராக. இல்லையேல் கூட இவளின் பேச்சு என்பது எரியும் நெருப்பில் கெரோசினை ஊற்றுவது போல் தான்.

தன் மௌனம் அவனை சாந்தம் செய்துவிடம் என்றெண்ணியவளுக்கு அதுவே இன்னும் அதிகமாக்கும் என்பதை அறியவில்லை.

“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் தேனிசை” பல்லைக் கடிக்க பயந்து விழித்தாள் அவனிடம். அதில் கோவத்தை அடக்கி தலையை தட்டிக் கொண்ட விஷ்ணு அவள் பக்கம் திரும்பிடவில்லை சில வினாடிகளுக்கு. சில வினாடிகள் தான்.

சற்றே கோவம் தணிந்த குரலில் “ உனக்கு நான் எப்படி புரிய வைக்கணும்னு எனக்கு தான்டி தெரியல. காதலிக்கிறேன்னு சொல்லுறேன். உனக்காக தான் இங்க வந்தேன் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறேன். ஆனா என்னவோ செய்யக் கூடாத தப்பு செய்யிற மாதிரி ட்ரீட் பண்ணுற ஹனி. இப்போ நான் உன்னை இங்க கூட்டிட்டு வரலைனா நீ அந்த முரளிக் கூட ஊரு சுத்திருப்ப, நான் அதை வேடிக்கை பார்த்துட்டு நிற்கணும். அதானே வேணும் உனக்கு? என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ஹனி. உன்கூட தனியா நேரம் ஸ்பென்ட் பண்ண நினைக்கிறேன். கொஞ்சம் பேசனும்னு நினைக்கிறேன். இப்பவும் வந்து யாரு என்ன நினைப்பாங்க என்ன சொல்லுவாங்கனு பேசி என்னை ஆத்திரமாக்காத” முடிவாய் சொல்லிவிட்டு காரின் வேகத்தை கூட்டிருக்க அவன் வார்த்தையில் முகம் வாடிய தேனிசை

“சாரி” அமைதியாகி விட்டாள் அடுத்து பேசாது.

சொன்னது போல் விஷ்ணுவின் நண்பன் வீட்டை அடைந்தவர்கள் நண்பர்கள் நீண்ட வருடங்களுக்கு பின் நேரில் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்க, அதில் சில விஷயங்களை காதில் வாங்கிய தேனுவிற்கு பெருத்த அதிர்ச்சி.







 

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 13
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Active member
Joined
Nov 26, 2023
Messages
48
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top