Member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 9
மறுநாள் காலை...
காவ்யா ஹோட்டல் ஆரம்பிக்கும் விசியத்தை மித்ரனிடம் கூற அவனும் தான் நேரில் வருவதாக கூறினான். காலை பத்து மணி போல மித்ரன், நிதியோடு சித்தார்த் வீட்டிற்கு வர காவ்யா சமரையும் அழைத்து இருந்தாள்.
அனைவரும் ஒன்றாக ஹால் சோபாவில் அமர்ந்து இருக்க காவ்யா தான் பேச்சை தொடங்கினாள் " மித்து நீ சொன்ன சித்தார்த் ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்றான், நீ என்ன சொல்ற " என்றான்
மித்ரனோ ' உன் விருப்பம் கவி, எனக்கு இந்த ஐடியா ஓகே தான் ' என்றான்
சித்தார்த்தோ " இல்ல வேணாம் கவி, நான் வேணும்னா பேங்க் ல லோன் ட்ரை பண்றேன் " என்றான்
காவ்யாவோ ' சமரன்னா, மித்து ரெண்டு பெரும் அவனுக்கு சொல்லுங்க நேத்துல இருந்து இதே சொல்லிக்கிட்டு இருக்க ' என்றாள் கடுப்பாக
நிதியோ ' சித்தார்த் நீங்க வெளிய லோன் வாங்குறதுக்கு பதிலா காவ்யா கிட்ட வாங்கிக்கோங்க அண்ட் நீங்க அதுக்கு உங்கள முடிஞ்ச அமௌன்ட் அவ கிட்டயே கொடுத்துடுங்க ' என்றான்
சமர் மற்றும் மித்ரன் இருவரும் இதே கூற சித்தார்த் அவர்களை அதிசியமாக பார்த்து கடைசியில் அந்த முடிவுக்கு ஒத்து கொண்டான்.
மித்ரனோ " அப்ப எந்த மாதிரி அம்பியன்ஸ் வேணும் " என்றான்
சித்தார்த்தோ ' சிம்பிள் அம்பியன்ஸ் ல லோ பட்ஜெட் ல நாம ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என சில பல திட்டங்களை' கூற
அனைவரும் அதை ஏற்று கொண்டு அப்ப நாளைக்கி மார்னிங் எல்லாரும் வந்துடுங்க நாம ஹோட்டல் ஆரம்பிக்க இடம் பார்க்க போலாம் என முடிவு செய்து மாலை வரை அங்கேயே பேச்சு, கேலி கிண்டல்,விளையாட்டு என நேரம் போனதே தெரியாமல் இருந்தனர்.
---
இரவு நேரம்...
சித்தார்த் மெத்தையில் அமர்ந்து இருக்க அவன் அருகில் காவ்யாவும் இருந்தாள். அவனோ முதலில் " கவி உனக்கு எதாவது ஹோட்டல் இன்டெரியர் ஒர்க் பண்ற பிளான் இருந்த சொல்லு " என்றான்
அவளோ சில பல திட்டங்களை கூற அவனும் 'சரி அப்படியே நாம பண்ணலாம் அப்பறம் இது எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு தேங்க்ஸ் கவி உன்னால தான் என் கனவு ஆசை எல்லாம் நிறைவேற போகுது ' என்றான்
அவளோ ' தேங்க்ஸ் எல்லாம் வேணாம் அதுக்கு பதிலா தினமும் எனக்கு ஸ்வீட் செஞ்சி கொடுத்த போதும் ' என்றாள்
அவனோ ' கண்டிப்பா உனக்கு இல்லாமையா ' என்றான்
இருவரும் பேசியப்படியே உறங்கி போக அடுத்த நாள் காலை முடிவு செய்த படி ஐந்து பெரும் வெளியே மித்ரனின் காரில் சென்றனர். முன்னாடி காவ்யா கார் ஓட்ட அவள் அருகில் நிதி பின் பக்கம் சித்தார்த், சமர், மித்ரன் என அமர்ந்து கொண்டனர்.
ஐவரும் ஒரு ஹோட்டல் காலி இடம் பார்க்க சென்றனர்.
சமர்:
“இங்கே இடம் நல்லா பெருசா இருக்கு, ரோடு சைடு வியூஸ் கூட இருக்கு. நம்ம ஹோட்டல் இங்கே செட் ஆகும்.” என்றான்
மித்ரன் கிண்டலாக:
“சரி பாஸ், உங்க சாப்பாட்டுக்கு க்கு நான் தான் பிரஸ்ட் கஸ்டமர் ஆனா பிரீயா தான் பண்ணணும்!” என்றான்
காவ்யா வோ
“அப்படியே எல்லா நாளும் பிரீ னா உன் பசிக்காகவே பிஸினஸ் கிளோஸ் ஆகிடும் மித்து!” என்றாள்
அனைவரும் சிரித்து கொண்டனர். ஆனால் காவ்யா மட்டும் சிரிக்கவே இல்லை எப்போதும் போல அமைதியாக தான் இருந்தாள்.
அதற்கிடையே நிதி, காவ்யாவை பார்த்து:
“ரெஸ்டாரண்ட் பெயர் என்ன வைச்சிருக்க?” என்றாள்
காவ்யாவோ சித்தார்த்தை பார்க்க அவனோ " அது சஸ்பென்ஸ் ஓப்பனிங் அன்னக்கி தெரிஞ்சிக்கோங்க " என்றான்
பின் அந்த இட உரிமையாளரிடம் பேசி புக் செய்து விட்டு காருக்கு செல்ல காவ்யாவோ மித்ரனிடம் சென்று ' மித்து அம்மாவை பாக்க போலாமா ' என்றாள்
மித்ரனோ ' இப்ப வேணாம் கவி இனொரு நாள் போகலாம் ' என்றான்
அவளோ முகத்தை திருப்பி கொள்ள மற்ற மூவரும் இவர்களை தான் சுவரசியமாக பார்த்து கொண்டு இருந்தனர். நிதியோ சித்தார்த்திடம் ' இப்ப பாருங்க அவன் போகலாம்னு சொல்லுவான் இவ கோபமா இருக்க மாதிரியே நடிப்பா ' என்று கூற
மித்ரனோ பெண் அவளின் முக மறுதலை காண முடியாமல் " சரி போலாம், ஆனா அங்க வந்து கண்ணு எல்லாம் கசக்க கூடாது புரிஞ்சிதா " என்றான்
அவளோ நிதி சொன்னதை போல முகத்தை திருப்பி கொண்டு கோவமாக இருப்பது போல ' யாரும் பிடிக்காம ஒன்னும் என்ன கூட்டிட்டு போக வேண்டாம் ' என்றாள்
அவனோ ' சரி கவி வரலையாம் கைஸ் நீங்க எல்லாம் வண்டியில ஏறுங்க அவ இங்கையே இருக்கட்டும் ' என கூறி
அனைவரும் எற போக அவர்களுக்கு மூன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள் காவ்யா.
மித்ரன் சிரித்து கொண்டு வண்டியை எடுக்க மற்ற மூவரும் சிரித்து கொண்டனர்.
---
கார் நேராக அஞ்சலி இல்லம் சென்றது. காரை நிறுத்தி விட்டு மித்ரன் கீழே இறங்க காவ்யா தோட்டத்திற்கு சென்றாள். அவளோ அங்கே இருந்த பல வண்ண பூக்களை பறித்து அங்கே இருந்த இரண்டு கல்லறையில் பெரிய கல்லறையின் மீது வைத்து விட்டு அங்கே தலை சாய்த்து படுத்து கொண்டாள்.
தூரத்தில் இருந்து இதை எல்லாம் நால்வரும் பார்த்து கொண்டு இருக்க மித்ரனோ ' அவள யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க அவள வரும் போது வரட்டும் ' என உள்ளே சென்று விட்டான்.
சித்தார்த் "நிதி இது மித்ரன் அம்மா அப்பா வா "என கேக்க
நிதியும் 'ஆமா சித்தார்த் ' என்று அவள் கைபேசியில் இருந்த " தேவேந்திரன் - அஞ்சலி தேவி " புகைப்படத்தை கட்டினாள். சமர், சித்தார்த் இருவரும் பார்க்க காவ்யாவை போல இருக்கும் மித்ரனின் அன்னையை கண்டு ' எப்படி இவங்க ஒரே மாதிரி இருகாங்க 'என்றான்
அவளோ " எனக்கு தெரியல பட் ரெண்டு பெரும் பாக்க ஒரே மாதிரி தான் இருப்பாங்க " என்றாள்
---
காவ்யா கல்லறையின் மேல் படுத்து கண்ணீர் விட அங்கே வந்த மித்ரனோ " அழாத கவி அம்மா எப்பவும் உன்கூடவே தான் இருப்பாங்க " என்றான்
அவளோ நிமிர்ந்து அவனை ஒரு வெற்று பார்வை பார்க்க அந்த கண்கள் நீயும் இப்படி தான் என்ன விட்டுட்டு போக போறியா? என்ற கேள்வியை தாங்கி நின்றது....
மித்ரனோ " அப்படி பாக்காத கண்டிப்பா உனக்குன்னு ஒருத்தன கண்டு பிடிச்சி அவன் கையில உன்ன கொடுத்துட்டு தான் நான் நிம்மதியா கண்ண மூடுவேன் " என கூற
அவளோ கோபமாக அவன் கன்னத்தில் அரைந்து ' இனிமே இப்படி சொன்ன நானே உன்ன கொன்னுடுவேன் மித்து என்னடா எல்லாரும் என்ன தனியா விட்டு போய் சாவடிக்குறிங்க ' என அவன் நெஞ்சில் சாய்ந்து அழ
அவனோ " பச்! சரி இனி சொல்ல மாட்டேன் இப்படி அழுதுட்டே இருந்தின இனி வீட்டுக்குள்ள விட மாட்டேன் " என பேச்சை மாற்றி கூற
அவளோ ' என் வீடு இது நான் வருவேன் என் அம்மா அப்பாவை பார்ப்பேன் உனக்கு பிடிக்கலைன்னா நீ வெளியே போ ' என்றாள்
அவனோ சிரித்து கொண்டு ' வா காபி கூடிக்க போலாம் ' என அவள் கண்களை துடைத்து உள்ளே அழைத்து சென்றான்.
---
இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர். சமரை அவன் வீட்டில் விட்டு விட்டு சித்தார்த் அவன் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தான். காவ்யாவோ மெல்ல " சித்தார்த் உங்க பேமிலிய ஹோட்டல் ஓப்பனிங்க்கு கூப்பிடலையா " என்றாள்
அவனோ விரக்தியான சிரிப்போடு ' உங்க வீட்ல உன் நிலைமை எப்படியோ அப்படி தான் என் நிலைமையும் என்ன என் வீட்ல எப்ப காசு கேட்டாலும் தர மெஷின் னா ஆனா உங்க வீட்டுல நீ தேவை இல்ல பொருள் அவ்ளோதான் வித்தியாசம் ' என்றான்
அவளும் அதன் பின் கேக்கவில்லை ஏனென்றால் அவன் கூறியது தான் சாத்தியமான உண்மை எனவே அவளும் பழைய நினைவுகளின் தக்காதில் இருந்தாள். இன்றும் அந்த பழைய ரணம் அவள் மனதில் பசுமை மாறாத காயமாக இருந்தது. பழைய யோசனையில் மூழ்கி இருந்தவள் சித்தார்த் அழைப்பில் தான் நிகழ் காலம் வந்தாள்.
சித்தார்த் " என்ன பலமான யோசனை மேடம் " என்றான்
அவளோ ' ஒன்னும் இல்ல உள்ள போகலாம் ' என உள்ளே சென்று விட்டாள். அன்றும் இரவு இருவருக்கும் இடையில் இருந்த தலையணையை சித்தார்த் எடுத்து விட அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் சித்தார்த் கையை தலையணை என நினைத்து இருக்கி பிடித்து கொண்டாள். அவனும் சிரித்து கொண்டே அவளை இழுத்து அணைத்து கொண்டு உறங்கினான். அவனும் சில நாட்களாக இப்படி தான் பெண் அவளை அணைத்து கொண்டு தான் உறங்குகிறான். அவளும் மாத்திரை மயக்கத்தில் இது எதும் தெரியாமல் உறங்கி விடுகிறாள்.
---
மறுநாள்...
புதிய ஸ்பேஸ் பைண்டிங்,டெகரேஷன் எல்லாம் நடக்க, ஐவரும் நேரடியாக வேலைக்கு இறங்கினர்.
மித்ரன் நாற்காலி எல்லாம் சுத்தம் பண்ண, சித்தார்த் எலெக்ட்ரிசின் -ஐ பார்த்துக்கொண்டான். காவ்யா மற்றும் நிதி மெனு கார்டு டிசைன் பண்ண, சமர் சப்பிலியர்ஸ் பைனல் பண்ணினான்.
அந்த நேரத்தில் அதிக தூசியான இடத்திற்கு சென்ற மித்ரன் மூச்சு விட சிரமப்பட்டு மயங்கி கீழே விழ அதை பார்த்த காவ்யாவோ " மித்துஉஉ " என்ற கூவளோடு அவன் அருகே சென்று அவனை மடியில் தாங்கி கொண்டு "என்னாச்சு மித்து, எழுந்திரி டா என்ன ஏமாத்திட்டு போயிடாத " என அவன் கன்னத்தை போட்டு தட்ட
காவ்யாவின் சத்தம் கேட்டு வந்த சித்தார்த் தண்ணீரை மித்ரனின் முகத்தில் தெளித்தான். அதற்குள் நிதி, சமர் இருவரும் அங்கே வந்து விட நிதியோ மித்ரன் மூக்கில் ரத்தம் வருவதை கண்டு " சித்தார்த் லேட் பண்ண வேண்டாம், வாங்க ஹாஸ்பிடல் போகலாம் " என கூறி மித்ரனை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றனர்.
மித்ரனுக்கு நேர்ந்தது என்ன? அடுத்த பாகத்தில்...
காதல் கூடுமா 💞...
	
			 Author: velvizhiyaal
Article Title: கனவு 9
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.