New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
"ஹேப்பி பர்த்டே பேபி..." கதவை திறந்தவளை அணைத்து நின்ற ஆதிஷால் அணைக்கப்பட்டிருந்தவள் துள்ளினாள்.
"ஆஆஆ..." பெண்ணவள் கத்த.
"ஏன்டி கத்துற நான் தான் மச்சி..." என்றவன் தன் முகத்தை அவள் பின்னிருந்து முன்னே முகத்துக்கு இழுத்தான். ஆனால் முதுகோடு அணைத்திருந்த பிடியை விடவில்லை.
ஒற்றை கையால் அவள் முதுகுக்கும் இடைக்கும் இடையில் அணைத்திருந்தவன் உள்ளங்கை அவள் ஆடை விலகிய இடையை சற்றே உரசிக் கொண்டிருந்தது.
பயந்து விட்டாளோ என அவன் இன்னும் திடமாய் அரவணைக்க. அவன் ஒற்றை கரத்தின் பிடிக்கே அவள் விலக முடியாது போராடி நின்றாள்.
அவனாக வித்தியாசத்தை உணர முன், "வி...விடுங்க..." அழுகும் பெண்ணின் குரலில் திடுக்கிட்டவன் சட்டென விலகினான்.
அவசரமாக மின்விளக்கை உயிர்ப்பிக்க விரைந்த மனோஜூக்கு முட்டுக்கட்டை போடும் படியாக, குறுக்கே நெடுக்கே வந்து அவனை திசை திருப்பிக் கொண்டிருந்தான் வினோத் வேறு.
"ஏன்டா குறுக்க குறுக்க வர!" மனோஜ் கத்தினான்.
"நீ தான்டா நான் போற இடத்துக்கு எல்லாம் வர. அப்படி போடா..." என்றான் வினோத்.
"பரதேசி சுவிட்சு போடு இந்த பக்கம். அங்க போய் நான் என்ன பண்ண?" மனோஜ் கடுப்பில் கூறி விட்டான்.
"இருட்டுல கூட லாவண்யா வீட்டு சுவிட்ச் போர்ட் எங்க இருக்குனு அவசரமா சரியா பாயுறியே..." வினோத் பிடித்து விட்டான்.
அதன் பின் மனோஜ் குரல் ஒலிக்கவில்லை.
அதற்குள் தனக்கு முன் நின்றிருந்தவள் முகத்தை,தெரு விளக்கின் கொஞ்சமாய் உள்ளே நுழைந்த வெளிச்சம் வழி குனிந்து கூர்ந்து கவனித்தான் ஆதிஷ்.
அவளை முந்திக் கொண்டு மின்னும் அவள் கண்ணீரே இவன் கண்களுக்கு தென்பட்டது. அது மட்டுமா அவளின் மஞ்சள் வாசமும் இவன் நாசி தொட்டது. அன்றுணர்ந்த அதே வாசம். எப்படி மறப்பான்.
"ஷிட்..." ஆதி கத்திய வேளை மின் விளக்கு உயிர்ப்பிக்க பட்டிருந்தது.
"முல்லை ஏன் கத்தின?" கேட்ட லாவண்யா தன் கை மேல் ஸ்விட்ச்சில் பதிந்திருந்தவன் கரத்தை கண்டு கொண்டாளா எனக்கூட தெரியவில்லை.
உடனே முல்லையை நெருங்கினாள். மனோஜ் பாவமாய் நின்றிருந்தான். ஆதிஷோ கோபமாய் முல்லையை முறைத்திருந்தவன் மறுகையில் கேக் ஒன்றிருந்தது.
"அ...அக்கா..." என்றவள் உடனே லாவண்யா அணைப்பிற்குள் அடங்கி அழத்துவங்கி விட்டாள்.
"போச்சு மருத்துவ முத்தம் தந்ததுக்கே தாலி கட்ட வச்சாங்க. இப்போ நீ இருட்டுல அணைச்சிட்டியா. என்ன பண்ண போறாங்களோ!" ஆதிஷிற்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் வினோத்.
"இப்ப தானடா அங்கிருந்த. எப்படி தான் அதுக்குள்ள இங்க வந்து ஓதுறியோ!" என்றபடி வந்த மனோஜ் நடந்ததை சுருக்கமாக லாவண்யாவிடம் கூறினான்.
"எருமைங்களா நான் தான் மிட் நைட்ல வந்து நின்னு தொலையாதீங்க. நாளைக்கு பகல்ல பார்த்துக்கலாம்னு மூணு பேர் கிட்டயும் செப்பரேட்டா, ஒன்னானு மூணு தடவைக்கு மேல சொன்னனே!" என்ற லாவண்யா முல்லையை விடாது அணைத்திருந்தாள்.
அந்த அணைப்பை கண்ட ஆதிஷ் கடுப்பானான்.
"போயும் போயும் இந்த பட்டிக்காட்டுக்காக நீ எங்களை இக்னோர் பண்றியாடி?"
"இவளை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டேன்னு போன வாரம் தானே சொன்ன. சோ இவளுக்காக என்கிட்ட பொய் சொல்ற. வர வேணாம் சொல்றல்ல?"
காட்டு கத்தாக அவன் கத்தி கேட்டதில் முல்லை உடல் இன்னமும் நடுங்கியது.
"கண்ணு முன்ன தானே நிக்குறேன். எதுக்குடா இப்ப காது கிழிய கத்துற!" என்றாள் லாவண்யா.
"வர வர நான் பேசினாக்கூட உனக்கு பிடிக்கலைல்ல. எல்லாம் இவளால!" என்றான்.
முல்லை லாவண்யாவை விட்டு விலகினாள். உள்ளே செல்லவும் எத்தணித்தாள்.
அதற்குள் அவள் கரத்தை பற்றி நிறுத்திய லாவண்யா, "சும்மா கத்தாதேடா. அவளே பாவம் பார்ட் டைம் வேலைக்கு போன இடத்துல ஒரு பொறுக்கி நாய் ஹரேஸ் பண்ண ட்ரை பண்ணதுல பயந்து காய்ச்சல்ல இருக்கா!" என்றாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லை. நல்லா ஜில்லுனு தான் இருக்கா!" சொன்னவனை மற்றவர்கள் அனைவரும் விழி விரித்து பார்த்தனர்.
"உளறாத. மெடிசன் கொடுத்திருக்கேன். அதான் ஃபீவர் குறைஞ்சு உடம்பு தண்ணி விட்டிருக்கு!" என்றாள் லாவண்யா.
தோழி சொன்னதை கேட்டு முல்லையை தலை முதல் கால் வரை கண்டான் ஆதிஷ்.
சிவப்பு நிற ரவிக்கையும், பாவாடையும் அணிந்திருந்தவள் கருப்பு நிற தாவணி அணிந்திருந்தாள். அவளின் நெற்றி, கழுத்து பகுதி என வியர்த்து போய் இருந்தது. அவள் மஞ்சள் நிற இடையில் இவன் கையில் ஒட்டியிருந்த சாக்லேட் கேக்கின் க்ரீம் வேறு இருந்தது.
கடுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டான்.
"என்ன ஆச்சு? உனக்கு ஒன்னும் இல்லையே! வினோத்தும், மனோஜூம் முல்லையிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
"இவ கைல இருந்த துடப்பத்தை வச்சு கை வைக்க வந்தவனை வெளு வெளுனு ஆத்திரத்துல வெளுத்துட்டா.
கடை முதலாளி எனக்கு போன் போட்டு சொன்னாரு. போன் பார்த்தா அவனை தைரியமா அடிச்சுட்டு அம்மணி வெளிய வந்ததும் வெடவெடத்து போயிட்டாங்க.
அதான் இரண்டு நாள் கூட இருக்கட்டும்னு ஹாஸ்டல்ல சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்!" என்றாள் லாவண்யா.
"சூப்பர் மா இப்படி தான் தைரியமா இருக்கணும்!" என அவளிடம் கை குலுக்கினான் மனோஜ்.
வினோத்தோ நமட்டு சிரிப்புடன் ஆதியை கண்டான்.
ஆதிஷ் முல்லையின் இடை கடந்து மேலேறி முகத்தை பார்த்து விட்டு தோழியிடம் வந்தான்.
"எவ்ளோ ஆசையா டிவல்லோ கிளாக் உன்னை சர்ப்ரைஸ் பண்ணனும்னு கேக்கோட வந்தோம் தெரியுமா? குறுக்க இவ வந்துட்டா. நீ வந்து கதவை திறக்க வேண்டியது தானே!" என்றான்.
"அப்பா அம்மா வெளிய தான்டா இருக்காங்க. அவங்கனு நினைச்சு திறந்திருப்பா..." என்றாள் லாவண்யா.
"வெளியவா நாங்க வரும் போது கண்ல படலையே!" என்றான் மனோஜ்.
அதற்குள், "அடடே நாங்க கேக் டெலிவரி வாங்கிட்டு வர்றதுக்குள்ள நீங்களும் கேக்கோட வந்துட்டீங்களா? என்ன விஷ் பண்ற டைம் தான் மிஸ் ஆகிப்போச்சு!" என்ற லாவண்யாவின் தந்தை மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவரை தொடர்ந்து அவள் அன்னையும்.
"நேரத்தை மிஸ் பண்ண நீங்க மட்டுமா? நேரத்தோட வந்த நாங்களும் தான் மிஸ் பண்ணிட்டோம்..." என்ற மனோஜ், "ஹேப்பி பர்த்டே டி... இல்லை டியர் ஃபிரண்டுனு சொல்ல வந்தேன்!" என இறுக்கமாக அவளை கட்டிக் கொள்ள முடியாமல் பட்டும் படாது அணைத்து விலகினான்.
"ஹேப்பி பர்த்டே மச்சி..." வினோத்தும் கை வாழ்த்து கூறினான். ஆதிஷ் மட்டும் முகத்தை திருப்பிக் கொண்டு வீம்பாகவே நின்றிருந்தான்.
"என்னப்பா நீ ஏற்கனவே சொல்லிட்டியா?" லாவண்யாவின் தந்தை கேளவும், "ஆமா அங்குள் இருட்லயே முதல் ஆளா பாய்ஞ்சு வந்து சொல்லிட்டான்னா பாருங்களேன்..." என்றான் வினோத்.
"சும்மா இருந்து தான் தொலையேன்டா!" என அவனை திட்டி வைத்த மனோஜ், "அப்புறம் அங்கிள். இத்தனை மணிக்கு கைல பார்சலோட எங்கிருந்து வர்றீங்க? நாங்களும் இப்ப தானே வந்தோம். உங்களை காணவே இல்லை...?" என கேட்டு வைத்தான்.
"அட டெலிவரி பாய்க்கு அட்ரெஸ் தெரியலையாம்ப்பா. சின்ன பையன். நாய் தொல்லைனு வரவே பயப்பட்டான் வேற. அதான் நீ தெரு முனைலயே நில்லு நான் வந்து வாங்கிக்குறேன்னு போனேன். பார்த்தா அவன் பக்கத்து தெரு முனைல நிக்குறான். அதான் வாங்கி வர லேட்!" என்றார் அவர்.
"அதுக்கு எதுக்கு ஆன்ட்டி வேற?" வினோத் கேளவும், இந்த வினோத்திற்கு மட்டும் எப்படித்தான் இப்படி வினோதமான சந்தேகம் எல்லாம் வருமோ! என்றே அவனை பார்த்தான் மனோஜ்.
"அவ என் துணைக்கு வந்தாப்பா..." என்றவர் முல்லையை கண்டார்.
"என்னமா முல்லைக்கொடி இப்போ ஜூரம் எல்லாம் பரவாயில்லையா? நீ உன் டாக்டர் அக்கா கிட்ட கேட்டு கொஞ்சமா கேக் சாப்பிடுப்ப!" என்றார்.
"அதான் ஒன்னுக்கு நாலு டாக்டர் ஒன்னா ஒரே இடத்துல இருக்காங்களே!" என்ற அவள் அன்னை கேக்கை வாங்கி சென்று அதனை மேசை மீது வைத்து வெட்டி கொண்டாட வாகாக ஏற்பாடுகளை செய்தார்.
மனோஜூம், வினோத்தும் லாவண்யாவின் பெற்றோருக்கு உதவ சென்றிட.
லாவண்யா கண் முன்னே ஆதிஷ். அவள் கைப்பிடியில் முல்லை.
"விஷ் பண்ணு ஆதி..." என்றாள் லாவண்யா.
அவன் இன்னமும் முகத்தை திருப்பி அவளை பாரவில்லை.
"சரி அவன் பண்ண மாட்டான். சோ நீயே எனக்கு அவனுக்கு முன்ன விஷ் பண்ணு முல்லை..." அவள் கூறவும் உடனே வாய் திறந்தான்.
"ஹேப்பி பர்த்டே டு யூ. உனக்கு பிடிச்சவங்களோட பிடிச்ச போல ஹேப்பியா இரு. நான் குறுக்க நிற்க மாட்டேன்!" என்றவன் தன் பாட்டிற்கு உள்ளே சென்று விட்டான்.
"சரியான பொசசிவ் பிடிச்ச இடியட்! நீ வா..." தோழனை பார்த்து சொல்லி விட்டு, முல்லையை உள்ளே அழைத்து போனாள் லாவண்யா.
லாவண்யாவின் பெற்றோரும், நண்பர்களுடன் அவளை சுற்றி வளைத்து நிற்க. முல்லை மட்டும் விலகியே நின்றாள்.
"முல்லை வந்து கேன்டில் ஏத்து..." லாவண்யா அழைக்கவும் தயக்கமாக முல்லை அவளருகே வந்தாள். ஆதிஷ் விலகி சென்றான்.
லாவண்யா கேன்டில் நோக்கி குனியவும் அனைவரும் பிறந்த நாள் பாடலை பாடினர்.
கேக்கை வெட்டிய லாவண்யா தன் பெற்றோருக்கு அடுத்து இவளுக்கு கொடுத்தாள்.
"அக்கா..." மறுத்தவளுக்கு க்ரீம் அதிகம் இல்லாத பகுதியாய் பார்த்து ஊட்டியவள், க்ரீமை அவள் மூக்கின் மீதும் கன்னத்தின் மீதும் வைத்து விட்டாள்.
இவர்கள் விளையாட்டை காண பிடிக்காமல் ஆதிஷ் கிளம்ப போன நேரத்தில், முல்லை ஊட்டிய பெரிய துண்டு கேக்கை வாயில் அதக்கிக் கொண்டு ஆதிஷை நோக்கி வந்தாள் லாவண்யா.
அவனை கண்டு எங்கடா போற? என்பதாய் புருவம் உயர்த்தியவள், அவனுக்கு கேக்கை ஊட்ட வந்தாள்.
இவனுக்கு அவளுக்கு முதல் முக்கியத்துவம் தந்து, அவளுக்கு ஊட்டிய கரத்துடன் தனக்கு ஊட்ட வந்த போது வாங்க விருப்பமே இல்லை.
அந்த துரோகி தனக்கு முன் தன் தோழி மனதில் இடம் பெற்றதை ஏற்கவே முடியவில்லை.
இருப்பினும் லாவண்யா பெற்றோரை மனதில் வைத்தும், லாவண்யாவின் பிறந்த நாள் அதுவுமாக கோபிக்க வேண்டாம் என்றும் திறந்தும் திறவாமல் உதடுகளை பிரித்து ஆக்காட்டினான்.
ஆனால் அவன் தோழியோ, அவன் வாயில் கேக்கை ஊட்டாமல் அவன் முகத்தில் அல்லவா அதை தேய்த்து விட்டாள். அதுவும் அவள் முகத்தில் உரசிய அதே விரல் கொண்டு. கோபம் கொண்டவன் உடனே அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
"ஆதி நில்லுடா..." என யார் அழைப்பதையும் காதில் வாங்காமல். இப்படி அவளை கண்டாலே விலகி விலகி ஓடுபவன் முன் முல்லையை தங்கள் மருத்துவமனைக்கே லாவண்யா அழைத்து சென்று நின்றால் என்ன ஆகும்?
தொடரும்...

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.