Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 37
- Thread Author
- #1
அத்தியாயம் 5
தனது அறைக்கு சென்றவன் உடனே ஒரு குளியலை போட்டுவிட்டு அவசர அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப எண்ணினான் விக்ரம்..
ஆளுயற கண்ணாடி முன் நின்று தன் தலையை சீவிக் கொண்டிருந்தவன்.. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டான்..
பிளாக் கலர் டி-ஷர்ட் அணிந்தவன் அதற்கு பொருத்தமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தான்..
வெளிய கிளம்ப எண்ணிய அவனை குறுக்கே வந்து தடுத்து நிப்பாட்டினார் சங்கவி...
"இப்பதானடா வந்த.. அதுக்குள்ள வெளிய கிளம்பிட்ட போல.. வந்து ஒரு வாய் கூட சாப்பிடல.. என்ன அவசரம் உனக்கு?? அப்படி என்ன தலை போற வேலை ?? இப்படி வந்ததும் வராததுமா ஓடுற??", என கேட்டார் புருவ சுழிப்புடன்..
இவங்க கிட்ட நான் என்னன்னு சொல்றது கடவுளே.. என மனதிற்குள் மாய்ந்து போனான் அவன் பதில் சொல்ல முடியாமல்..
"அம்மா.. அது.. அது வந்து...."
"என்னடா வந்து போயின்னு கதை சொல்லிட்டு இருக்க?? பேசாம வந்து சாப்பிடு.. வா"
"அம்மா பிளீஸ்.. வழியை விடுங்க.. இப்ப நான் அர்ஜென்ட்டா ஒரு இடத்துக்கு போயாகனும்.. சொன்னா புரிஞ்சிக்க மா.. பிளீஸ்.. என் செல்ல அம்மா இல்ல.. பிளீஸ்", என தன் தாயின் கன்னத்தை பிடித்து கொஞ்சி கொண்டே கெஞ்சினான் ...
"இங்க பாரு விக்ரம்.. உன்னோட ஆரோக்கியத்தை கொஞ்சமாவது கவனி.. இப்படி சாப்பிடாமல் கொள்ளாமல் வேலை பார்த்தா உடம்பு என்ன ஆகிறது??", என்றார் தாய்மைக்கே உரிய பாசம் கலந்த கவலையுடன்..
"அம்மா.. சீக்கிரம் வந்துடுவேன்.. ஓகே வா", என்று கூறி புன்னகை புரிந்து விடை பெற்று சென்றான் அவன்..
ஓட்டமும் நடையுமாக காரில் ஏறி செல்லும் தன் மகனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தார் சங்கவி கவலை படிந்த முகத்துடன்!!
"இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்?? இப்படி வீட்டுக்கு வராமல் சாப்பிடாமல் இருந்ததே இல்ல.. வெளியே எங்கேயும் தங்கியது கூட கிடையாது அதுவும் அவளின் அனுமதி இன்றி தவறியும் வெளியே தங்க யோசிக்க கூட மாட்டான் அவரின் அருந்தவபுதல்வன்!!
இப்போது அவன் இப்படி நடந்து கொள்வதை கண்டதும், அவரின் மனம் எதை எதையோ நினைத்து பதறியது... ஏதோ தன் மகன் செய்ய கூடாத தவறை செய்தது போல..!!!
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
கட்டிலில் அமர்ந்து கொண்டு வெளி உலகை வேடிக்கை பார்த்த வண்ணம் யோசனையில் மூழ்கி இருந்த தேவா.. நேரம் போவது தெரியாமல் அப்படியே இருந்து விட.. ஒரு கட்டத்தில் கண்கள் சொருக, நித்திரா தேவி அவளை அணைத்து கொண்டாள்...!!
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளையில், பூகம்பம் பெரும் சப்தத்துடன் வந்து தாக்கியதை போல உணர்ந்தாள் அவள் !!
மனதிற்குள் தூக்கி வாரி போட அடுத்தக் கணம் திடுக்கிட்டு போய் எழுந்தமர்ந்தாள்...
கையில் கதாயுதமும் பக்கத்தில் எருமை மாடும் மட்டும் தான் இல்லை... மற்றபடி எமதர்மன் போன்ற லுக்குக்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருந்தது விக்ரமுக்கு !!
அவன்தான் , டமார் என்று பொருளை கீழே போட்டு உடைத்து விட்டு.. கட்டிலை எட்டி உதைத்து தள்ளி இருந்தான்...
கண்களில் அனல் பறக்க... கோபமே உருவாக நின்றிருந்தான் அவன்....
"என்ன ?? என்ன ஆச்சு விக்ரம்??", என்று கேட்டாள் பயத்தில் குரலே எழும்பாமல்..
"என்ன நொன்னாச்சு?? உனக்கு அவ்ளோ திமிரா டி?? குடுத்த சாப்பாட்டை அப்படியே வச்சிருக்க.. ?? சாப்பிட வாய் வலிக்குதோ மேடமுக்கு??", என்று கேட்டான் எகத்தாளமாக...
"எனக்கு பசிக்கல", என கூறி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்..
"ஏன்??"
பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள் அப்போதும்..
அவள் தனக்கு பதில் சொல்லாமல் இருப்பதை காணவும் அவனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது...!!
"ஏன்னு கேக்குறேன் இல்ல", என்று அந்த அறையே அதிரும் வண்ணம் ஹை டெசிபலில் கத்தினான் அவன்..
நடுநடுங்கி போனாள் அவள்.. அந்த கூச்சலில்!!
"வி... விக்ரம்... எ... என்.. எனக்கு பசிக்கல"
"அதான் ஏன்னு கேட்டேன்..", என்று மீண்டும் கத்தினான் அவன் கட்டுக்கடங்காத கோபத்துடன்...
அமைதியாக இருந்தால் ஒரேயடியாக கத்தி கொண்டே இருக்கிறான்.. என்னை என்னவென்று நினைத்தான் இவன்.. ச்சே...என மனம் நொந்து போனாள் அவள் ஒரு கட்டத்தில்...
"பசிக்கல அவ்ளோதான்.. விடேன்", என்றாள் அவளும் சற்று பொறுமை இழந்து...
"என்னடி சொன்ன?? என்ன சொன்ன??", என்றவன் அவளை கண்ணிமைக்கும் பொழுதில் தர தரவென கட்டிலில் இருந்து இழுத்து போட்டு தலை முடியை கொத்தாக பற்றினான்...
"ஆ....... வலிக்குது விக்ரம் விடுங்க.. பிளீஸ் விடுங்க..", என கண் கலங்க கதறினாள் அவள்...
"என்கிட்டையே உன்னோட திமிரை காட்டுறியா ?? என்னை எதுத்து பேசும் அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா..?? குளிர் விட்டு போச்சு உனக்கு... ஏண்டி??"
"விடுங்க.. ஏன் இப்படி காட்டு மிராண்டி தனமா நடந்துக்குறீங்க?? ச்சே.. விடுங்க என்னை..", கண்ணில் நீர் வழிய கோபத்துடன் மொழிந்தாள்..
அவள் சொன்ன வார்த்தை அவனை உசுப்பேற்றி விட்டது போல...
"என்னடி சொன்ன?? நான் காட்டு மிராண்டி யா?? நானா டி?? என்னை இப்படி ஆக்கியது நீதாண்டி பாவி.. உன்னை சும்மாவே விட மாட்டேன்.. ", சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளின் கன்னத்தில் பளாரென அறைந்தான் அவன் சீற்றத்துடன்..!!
அறைந்த வேகத்தில் ஒரு முறை சுழன்று போய் அங்கிருந்த ஆளுயர கண்ணாடியை தாங்கி இருக்கும் மர மேஜையில் மோதி கொள்ள.. அப்படியே சரிந்தாள் அவள்......!!
அம்மா... என்ற அலறலுடன் கீழே விழுந்தவள் மண்டைக்குள், பொறி கலங்கியது ஒரு நொடியில்...!!
இதயம் தாறுமாறாக துடிக்க... பயத்துடன் அவனை ஏறிட்டு பார்த்தாள் தேவசேனா.....
"என்கிட்ட உன்னோட திமிரை காட்டினா இதான் நிலைமை தெரிஞ்சுக்கோ", என்று கர்ஜித்தவன் அப்போதுதான் அவளின் முகத்தை உன்னிப்பாக கவனித்தான்...
அவளது நெற்றியிலிருந்து குருதி கிளம்பியது ஊற்று நீர் போல... தள்ளி விட்ட வேகத்தில் மேஜையின் கூர் முனையில் மோதியதும் அது அவளின் நெற்றியை பதம் பார்த்து விட்டது...!!
நெற்றியில் வலி சுறு சுறுவென ஏற புருவத்தை சுழித்தாள் அவள்....
"ஸ்ஸ்.. ம்ம்மா... ", முனகிய வண்ணம் நெற்றியை தொட்டு பார்க்க அதிர்ந்து போனாள் அவள்... !!
டோமேட்டோ சாஸ் எடுத்து கையில் ஊற்றியது போல ரத்த கறை அவள் கையில் படிந்திருந்தது...
தான் தள்ளியதால் தான் அவளின் நெற்றியில் இப்படி காயம் பட்டு குருதி கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டவுடன் அவனுக்கு மனம் வலித்தது...!!
யார் வம்புக்கும் போகாதவன் ஆனால் வரும் வம்பை விடாதவன் அவன்.. !!
அப்படி இருக்கையில், இப்படி ஒருவரை அடித்து துன்புறுத்துவது அவனுக்கு அறவே பிடிக்காது.. அதிலும் ஒரு பெண்ணை.. தான், இத்தனை காயப்படுத்தி இருப்பதை கண்டவுடன் அவனுக்கே அவன் மீது சற்று வெறுப்பு வந்தது...!!
ஒரு நொடி தான் யோசித்தான்.. அடுத்த கணமே, அவள் அருகே ஓடி சென்று அவளை எழுப்பி கட்டிலில் அமர செய்தான்..
அந்த அறையில் இருந்த கபோர்டை திறந்து உள்ளே இருந்த ஃபஸ்ட் எய்ட் பாக்ஸ் கிட்டை எடுத்து அவளுக்கு முதலுதவி செய்ய தொடங்கினான்..
அச்சோ இப்படி காயம் பட்டு விட்டதே என கவலைப்படுவது போன்ற முக பாவனையுடன் கண்களில் வேதனை தென்பட அவளின் காயத்திற்கு மருந்திட்டான்...
என்ன பிறவி இவன்?? காயப்படுத்தவும் செய்கிறான்.. பின், காயத்திற்கு மருந்திடவும் செய்கிறான்..அந்நியனா இவன்??
" கொஞ்சமாவது சாப்பிடு.. ", என்றான் அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து..
"இல்ல வேணாம்.. பசிக்கல", என்றாள் கண்ணில் தேங்கிய நீரோடு..
அடிபட்ட வேதனையில் அவள் முகம் தவிக்க..
என்ன நினைத்தானோ தெரியவில்லை , அவனின் இரும்பு கரங்கள் அவளின் காயப்பட்ட நெற்றியை மெல்ல வருடியது...
" ரொம்ப வலிக்குதா சாரி.. என்னை டென்ஷன் பண்ணாம நான் சொல்லும் போதே நீ சாப்பிட்டு இருந்தா இந்த வேதனை உனக்கு இருந்திருக்காது.. இப்பவும் அதே பதிலை சொல்லி எனக்கு மறுபடியும் டென்ஷன் ஏத்தாத.. வந்து சாப்பிடு..", பல்லை கடித்துக் கொண்டு முடிந்த மட்டும் அவளிடம் பொறுமையாக கூறினான் அவன்..
" இல்ல விக்ரம் எனக்கு வேண்டாம்"
மீண்டும் மீண்டும் அவள் அதே பதிலை கூறவும் அவனுக்கு கோவம் தலைக்கேற கைமுஷ்டியை இறுக்கினான்...
" இப்படி சாப்பிடாமயே இருந்து ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்து.. அப்படியே ஹாஸ்பிடல் போற சாக்குல இங்க இருந்து தப்பிச்சு போகலாம்னு பாக்குறியா அதெல்லாம் இங்க நடக்காது ஒழுங்கு மரியாதையா சாப்பிடு.."
முடியாது என அவள் தலையை ஆட்டவும்..
"இவளை....", என மனதிற்குள் அவளின் செயலை கண்டு கடுப்பாகி திட்டிக்கொண்டான்..
"இப்படியே வாய் வார்த்தையா சொல்லிட்டு இருந்தா நீ கேக்க மாட்ட.. இரு வரேன்..",என்றவன் அந்த மேஜை மீது ராஜப்பா மூடி வைத்துவிட்டு சென்ற சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு அவள் அருகே வந்தான்..
மல்லி பூ போல மெது மெதுவென்று இருந்த இட்லியை சாம்பாரில் முக்கி எடுத்து அவள் வாயில் ஊட்டுவதற்காக அருகே கொண்டு சென்றான்..
தான் காண்பது கனவா அல்லது நினைவா என்பது போல் நம்ப மாட்டாது அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவா..
இத்தனை நேரமாக பசி உணர்வே இல்லாமல் அமைதியாக இருந்தவள்.. இப்போது அவன் சாப்பாட்டை கொடுக்கவும் அமைதியாக வாயைத் திறந்து உண்ண தொடங்கினாள்.. ஏதோ வசியத்திற்கு கட்டுப்பட்டது போல.. அவன் சாப்பாட்டை கொடுக்க கொடுக்க இவள் உண்டாள் ....!!
முகத்தில் கடுமை நிறைந்திருந்தாலும் அவள் வயிறார உண்ணும் வரை பொறுமை காத்தான் அவன்..
சாப்பிட்டு முடித்ததும் எழுந்து போய் தட்டை வைத்து விட்டு கை கழுவி விட்டு மீண்டும் அறைக்கு வந்தவன்.. அவளுக்கு சில டேப்லெட் எடுத்து கொடுத்து தூங்க சொன்னான்..
" என்ன மாத்திரை இது??"
" பயப்படாத உனக்கு ஏற்பட்டிருக்கிற காயத்திற்கு தான் நான் மாத்திரை கொடுத்து இருக்கேன்.. இது சாதாரண பெயின் கில்லர் தான்.. அதுவும் ரொம்ப லோ டோசேஜ்.. சோ உனக்கு எந்த ஆபத்தும் வராது தைரியமா சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கு நான் அப்புறமா வரேன்.." , என்றவன் அவள் கைகளில் வலுக்கட்டாயமாக அந்த மாத்திரைகளை திணித்தான்..
" நீயே போடுறியா?? இல்ல அதையும் நான் தான் போட்டு விடணுமா??", என்று கேட்டான் ஒற்றை புருவத்தை உயர்த்தி..
" இல்ல நானே போட்டுக்கிறேன்", என்று சொல்ல..
அதன் பின் அந்த மாத்திரையை அவள் போடும் வரை அங்கிருந்து அவளை கவனித்தவன் அதன் பிறகு தான் விடை பெற்று சென்றான்...!!
- தொடரும்..

Author: praba novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.