Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 36
- Thread Author
- #1
நடு கூடத்தில் கந்தல் துணியை போல் அமர வைக்கப்பட்டிருந்தார், காமராஜ்.
இன்னும் இந்த ஈனப்பிறவிக்கு மரியாதைக் கொடுக்க வேண்டுமா என்ற எண்ணத்தில் நின்றிருந்தனர் அவர் குடும்பத்தார்.
காமராஜின் காதல்(!) மனைவி மல்லிகா, மூத்த மகன் பிருத்விராஜ் அவன் மனைவியும் அவளின் குடும்பத்தாரும் அத்தனை உக்கிர கோபத்துடன் நின்றிருந்தனர்.
அவரின் இளைய மகன் சஞ்சய் விஷயம் அறிந்து கவுகாத்தியில் இருந்து வந்துக்கொண்டிருக்கிறான்.
ஆத்திரம் அடங்குவேனா என்றிருந்தது மல்லிகாவிற்கு. எத்தனை நாட்கள் யார் யாரோடு இருந்தாரோ என்ற எண்ணமே அவரை மடிய வைத்தது.
செய்தியை கேட்ட நொடி நம்பாதவர், புலனத்தில் வந்த புகைப்படங்களைப் பார்த்த உடன் மகனைத் தான் பேதலித்தாற் போல் பார்த்தார்.
உண்மையை அவரால் ஏற்க முடியவில்லை. இந்த வயதிலும் இப்படியா? என்றவர் மனது அரற்ற, அவர் கழுத்துத் தாலியை இழுத்து விளையாண்டாள் பிருத்வியின் மகள்.
பத்து மாத பேத்தியின் செயல் அவரை உணர்வேகம் கொடுக்க, “அனிகா, அத்தய மன்னிச்சுக்க சாமி” என்றபடி தாலியை அத்து எறிந்தார்.
பிருத்வியின், “அம்மா” என்ற அலறலில் வெடித்து அழுதுவிட்டார் மல்லிகா.
துரோகம். பச்சை துரோகத்தை தானே கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் காமராஜ் அவருக்கு கொடுத்திருக்கிறார்.
மல்லிகா கல்லூரி செல்லும் போது காதல் என்று வந்து நின்றவரை, அப்போது அநியாயமாய் பிடித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்த அவருக்கு காமராஜ் இந்த வயதில் இத்தனை வருடம் வாழ்ந்த பின் கொடுத்தது என்ன?
ஏமாற்றத்தை. நம்பிக்கை துரோகத்தை.
“இந்தாளு என்னிய மல்லிமான்னு கூப்டது எல்லாம் பொய்யாடா பிருத்வி” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் மல்லிகா.
உயிராய் வைத்த காதலை, உதாசீனம் செய்த வலியை அறுபது வயதில் ரணக்கொடூரமாய் அனுபவித்தார் அந்த தாய்.
பிருத்விக்கும் காதல் திருமணம் தானே. மகனாய் தகப்பனின் செயலில் எரிந்தாலும் ஒரு காதலனாய் தன் அம்மாவின் பச்சை ரணம் புரிந்தது.
துரோகத்தின் வலி எப்போதும் பெரியது தானே?!
அனிகாவின் தம்பி முறை பையன் காமராஜின் இத்தனை வருட ஆட்டத்தை மொத்தமாய் பட்டியலிட்டுக் கூற, ரத்தம் கொதித்தது மல்லிகாவிற்கு.
ஒரு கட்டத்தில், “இன்னும் எத்தன பேரோட இருந்தீங்க?” என்றவர் கேள்வியில் கூசிப்போய் அறைக்குள் சென்றுவிட்டாள், அனிகா.
அனிகாவின் வீட்டினர் அவர்கள் வழியில் பெரிய தலைகட்டுக்காரர்கள். மகளின் காதலை மதித்து, பிருத்வியின் நற்பண்பினை உணர்ந்து அவனை தங்கள் மருமகனாக்கிக் கொண்டனர்.
ஆனால், மகளின் புகுந்த வீட்டு கௌரவம் அவர்களுக்கு அத்தனை முக்கியமாய் இருந்தது. அதை மொத்தமாய் திம்ஸ் போட்டு மெத்தியிருந்தார் காமராஜ்.
விட்டுவிடுவார்களா என்ன? பிருத்வியின் ஆட்சேபனையின்மை மேலும் அவர்களுக்கு வலு சேர்க்க, சைலேந்திரன் வெச்சு செய்து முடித்திருக்க, அந்த சூட்டை தனிக்க எண்ணிய அறுபது வயதை கடந்தும் அடங்காத காமராஜை அரவங்காட்டில் கட்டிலோடு பிடித்து, பிரித்தெடுத்துவிட்டனர்.
குண்டுக்கட்டாக கோவை தூக்கி வந்து மல்லிகாவின் முன்பு நிறுத்தியிருந்தனர். இனி அவர் கையில் தான் எல்லாம் என்று.
பிருத்வியும் ஒரு கட்டத்தில், “அம்மா இந்த வயசுக்கு மேல டிவோர்ஸ் எல்லாம் தேவையில்லாத பேச்சுன்னு நினைக்காத. மொத்தமா அந்தாள் சங்காத்தமே இல்லாம சென்னை போயிடலாம். வேண்டாம்மா, விட்டுரு” என்றிருக்க, சஞ்சய் வந்திருந்தான்.
ஹால் ஓரத்தில் சுவற்றோடு சாய்ந்து அமர்ந்திருந்த காமராஜைப் பார்க்க, அழுகையோடு கோபமும் மேல் வந்தது.
“நீங்க நல்லா அப்பாவா இருந்தீங்க. ஆனா ஆண்பளயா தோத்துப் போய், செத்துட்டீங்க” என்றவாறு மல்லிகாவின் அறைக்குள் வந்தவன், “ம்மா” என்றபடி அவரை கட்டிக்கொண்டான்.
வரம்பி மீறிய ஆசை ஒரு குடும்பத்தை மொத்தமாய் சிதைத்திருந்தது.
மூன்று தினங்கள் கடந்து,
கோவை மாநகரின் ஒப்பனக்கார வீதி. பரபரப்பான திங்கள்கிழமை காலை நேரம்.
பரிதியின் உச்சபட்ச சூடு தாங்காது மக்கள் நிழலைத் தேடி விரைய, போக்குவரத்து நெரிசலும் ஏகத்திற்கு இருந்தது.
முகூர்த்த சீசன் ஆகையால் ஜவுளி கடைகளில் கணிசமான மக்கள் கூட்டம் இருந்தவண்ணம் இருக்க, போலீஸாரின் எச்சரிக்கை குரலும் ஒலிப்பெருக்கியில் வந்தவண்ணம் இருந்தது.
சிவப்பு விளக்கு மாறி பச்சை வந்தவுடன் வாகனங்கள் சாலையில் பறந்திருந்தன.
கடைசியாக பச்சை விளக்கு சமிக்ஞை முடிய பதினைந்து விநாடிகள் இருக்க, சிக்னலின் நான்கை வழி சந்திப்பில் மெதுவாய் வந்து நின்றது ஒரு ஆம்னி வேன்.
நின்ற சமயத்தில் கந்தல் கட்டாய் இருந்த காமராஜை தூக்கி வீசிய கையோடு வேகமெடுத்துப் பறந்திருந்தது.
“ஏய் ஏய் ஏய்” என்ற சப்தங்கள் எழும்ப, சிக்னல் விழுந்திருந்தது.
சுதாரித்த மக்கள் வாகனங்களை நிறுத்தியபடியே அவரை யாரென்று அடையாளம் தெரியாது தூக்கி நிறுத்தி ஓரம் கட்டினர்.
“டேய் காமராஜ் ஸார்டா” என்றொரு குரல், சத்யத்தில் இருந்த மொத்த பேரும் சூழ்ந்துவிட்டனர் அவரை.
அரைகுறையான ஆடை. ஆபாசமாகத் தான் இருந்தது.
முகம் முழுக்க ரத்தக் காயம், உடலெல்லாம் அத்தனை அடி உதை விழுந்த தடம், ஒரு பக்கம் மீசை மழிக்கப்பட்டு, பின்பக்க தலை முடியும் மழிக்கப்பட்டிருந்தது.
மயக்கம் தெளிந்த நிலையில் முற்றும் அவரால் தன் நிலையை கிரகிக்க முடியவில்லை என்றாலும் அவர் இருந்த கோலம் புரிந்து, கூசியது. அவமானம் பிடிங்கித் தின்றது.
“ஸார் தண்ணீ குடிங்க மொத”
“டேய் ஒரு போர்வை எடுத்துட்டு வாடா”
“ஸார் ஸார்.. கேக்குதா ஸார். யாராவது வண்டி கொண்டு வாங்க, இல்ல ஆம்புலன்ஸ் கூப்டுங்க”
போக்குவரத்து காவலர் வந்துவிட, “மொத அவருக்கு காத்து வரட்டும். தள்ளி நில்லுங்க. தள்ளுங்கையா” என்க, இன்னும் நன்றாய் அவரை வேடிக்கைப் பார்த்தனர் மக்கள்.
அழுகையெல்லாம் தாண்டிய ஒரு மன்னிக்க தகுதியற்ற இடத்தில் இருந்ததால் மரத்து போய் அமர்ந்திருந்தார்(ன்) காமராஜ்!
யாரோ ஒரு துணியைக் கொண்டு அவர் உடம்பை போர்த்தினார். தண்ணீரை பருக வைத்தனர்; குடிக்க முடியாது துப்பினார்.
முற்றும் செயலறுந்து போய் இருந்தார் மனிதர்.
கனகம்பீரமாய் நடந்த இடத்தில் குனிக்குறுகிப் போய் அமர்ந்திருந்தார்.
அதுவெல்லாம் என்னடா நிலை என்பதைப் போல் அவர் முதுகு பக்கத்தில் ஒரு பேப்பர் இருந்தது.
‘பல பெண்களின் கனவு நாயகனுக்கு இந்த நிலை என்றால். இங்கிருக்கும் ஒவ்வொரு கடையில் இருக்கும் இவரின் ஆசை நாயகிகளின் நிலை இதைவிட படு மோசமாக அமையும்.
இது வெறும் செய்தி அல்ல, எச்சரிக்கை!’
என்றிருக்க, படித்த நபர் ஆடிப்போய்விட்டார்.
உடனே பக்கத்தில் இருந்தவர் அதை சப்தமிட்டு படிக்கவும், காவலர் அதைக் கைப்பற்றி ஒரு ஆட்டோவைப் பிடித்து காமராஜை இரண்டு பேரோடு மருத்துவமனை அனுப்பி வைத்து, போக்குவரத்தை சீராக்க முனைந்தார்.
ம்ம், காமராஜின் விசுவாசியோ அல்ல சக மனிதனைக் காக்க முனைந்த ஒரு ஈரமுள்ள மனிதரோ? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.
காமராஜே இந்த நிலையில் இருக்க, முத்துராமன்?
யாரென்று யோசிக்க முடியாது அவனை வேலூரிலேயே ம(மு)டக்கியிருந்தார், சரபேஸ்வரன்.
ஹேமா, “சரண், இந்த நயனிப் பொண்ணுக்கு நீ செய்யற ஒரு உதவியா இது இருக்கட்டும். உன் மச்சான் கிட்ட சொல்லி அந்த கருப்பு முத்துராமன ஆஃப் பண்ண வையேன்” என்றிருக்க, ஒரு பெரும் யோசனை சரபேஷ்வரனிடம்.
அவரின் வெகுளிப் பெண் நயனிக்காக சரபேஷ்ரனிடம் பேசினார் ஹேமா.
“என்னடா யோசிக்கறா?”
“இல்ல, நீ அவ்வளவு சீக்கிரம் யாருக்காவும் கேக்கமாட்டீயே? என்ன விஷயம்?” என்க,
“அந்த பையன் குமரன் கொஞ்சம் நல்ல மாதிரி. அவனுக்காகவும் பண்ணலாம்னு தான்” என்றிருக்க,
கொஞ்சம் யோசிப்பதாய் பாவனைக் காட்டியவர், “ம்ம், முடிச்சாச்சு. அவனோட கல்யாணப் பரிசா இந்த விஷயம் இருக்கட்டும்” என்க, “என்ன? எப்போ பண்ண சரண்?” ஹேமாவிற்கு ஆச்சரியம்.
“அவன் எப்போ என் கடையோட சிசிடிவி வீடியோஸ என்னை கேட்காம எடுத்தானோ அப்போவே முடிவு பண்ணி வெச்சது தான். நீ கேட்டதுக்காக எல்லாம் இல்லை” என்று அவர் சிரிக்க, “காரியவாதிடா நீ” என்றிருந்தார் ஹேமா.
சரபேஷ்வரன், “இருக்கட்டும். நீ ரீசண்ட் வீடியோ பார்த்தியா?” என்க, அங்கு சப்தமில்லை.
“ஹேமா, அப்போ பாத்துருக்க?”
ஹேமா, “நீயா இல்ல நித்தி அப்பாவா?” என்றார் ஆழ்ந்த குரலில்.
“இதுக்கு நா பதில் தரனும்னு எக்ஸ்பேக்ட் பண்ணுறீயா நீ?”
ஒரு பெருமூச்சு வெளியானது ஹேமாவிடம். பழி வெறியெல்லாம் அவரிடம் இல்லை. யார் என்ன செய்தாலும் அதற்கான எதிர்வினையை நிச்சயமாய் அனுபவிப்பர் என்பது அவரின் எண்ணம். அவ்வளவுதான்.
சரபேஷ், “சரி சைலண்ட் ஆகாத. நாங்க கண்டிப்பா இல்ல. இது வேற கணக்கு” என்க,
“உண்மையா? நீங்க எதுவும் பண்ணலையா?”
“ம்ஹூம். அவ்வளவு டவுட் இருந்தா உன்னோட மிஸ்டரை கேள்” என்றவர் மேலும் பேசி வைத்துவிட்டார்.
அத்தோடு அந்த பேச்சிற்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.
இங்கு சரபேஷ்வரன் குறிப்பிட்ட அந்த வீடியோவைத் தான் ரீவைண்ட் செய்து பார்த்துக்கொர்டிருந்தான், பாண்டி.
காமராஜின் ப்ரத்தியேக வீடியோதான் அது.
போனை வேறு வேறு திசைகளில் வைத்து பார்த்தபடி, “நல்லா வகை வகையா ரக ரகமா பொலந்துருக்காய்ங்க மாப்ள. செத்த வுட்டிருந்தா சுருங்கிருக்கும்” என்க, “எது?” என்றான் கார்த்தி.
தண்ணீரைக் குடித்துக்கொண்டிருந்த குமரனுக்குப் புரையேறிவிட்டது.
“நாரப் பயலே, அந்தாள சொன்னேன். ஏற்கனவே குள்ளம். போட்டு பொலந்துருக்க லட்சணத்துல நாலடியும் சுருங்கி போயிருக்கும்னே” என்க, அறை அதிர சிரித்தான் குமரன்.
பாண்டி, “நீ பாக்கலையாடா கட்டெறும்பு? அந்தாளுக்கு தான உம்மேல ஒரே லவ்ஸ்சு” என்றபடி குமரன் போனிற்கு அதை பகிர,
“எனக்கெதுக்கு அதெல்லாம். வேண்டாம், அனுப்பாத. அந்த கேடுகெட்ட ஆளோட வண்டவாளம் இப்போவாச்சு வெளிய வந்துச்சே. சும்மா எத்தன நாளுக்குத் தான் நல்லவன் வேஷம் போட்டுட்டு உத்தமனாட்டம் பேசுவான்? பொறுக்க முடியாம பொலந்துட்டாங்க” என்றவன் காதில் செவிபேசியை அடைத்து அமர்ந்துவிட்டான்.
பாண்டி, “இவனுக்கு ரசனையே இல்லடா கார்த்தி” சலிக்க,
“ம்ம் அவன் நிலையில நீ இருந்தா ரசிப்ப?” அவன் முறைத்தான்.
“சேரி வுடு” என்றவனும் அடங்கிவிட்டான்.
குமரனின் முகத்தில் சற்றேனும் இலக்கம் இப்போது வந்திருந்தது. நேற்று அவன் மதுரையில் இருந்து வந்த பின்னர் அவனிடம் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் மன புழுக்கம் இல்லாது இல்லை.
கார்த்திக்கு அவன் கட்டெறும்பு தன் கூட்டிற்குள் சுருங்குவதைப் பார்க்க முடியாது பெருந்தவிப்பானது.
சலித்தவன், “ம்ப்ச்” என்று நெஞ்சை தடவிக்கொண்டு மணியைப் பார்த்தான்.
கடிகார முள் இரவு பனிரெண்டு தாண்டி பயணிக்க, தீர்த்த வாடை அவனை வா வா என்றழைத்தது.
இருந்தும், போக முடியாது எதுவோ அவனைத் தடுக்கவும் செய்தது.
அந்த உணர்வைத் தாங்காதவன் குமரனின் செவிபேசியை வெடுக்கொன்று எடுத்தபடி, “மூச்சிய கொஞ்சம் மாத்தித்தான் தொலையேன். எனக்கு தான் உன் மொகறக் கட்டைய இப்படி பாக்க சகிக்க” என்று அவனிடம் பாய்ந்திருந்தான்.
முறைத்தவன், “என் நயனி பார்ப்பா” என்க, “ஏ வாயில என்னாவது வந்துரும் பாத்துக்க. இன்னும் இரண்டு வாரம் கூட இல்ல கல்யாணத்துக்கு, இப்படி மண்ணு மாதிரி இருந்தீயினா என்னடா செய்ய” என்று பொறிந்தான்.
கார்த்தியின் கண்களைப் பார்த்தபடி, “எனக்கு செய்ய, யார் இருக்கா?” என்றிருக்க, யோசிக்காது சுள்’ளென்று அவன் கட்டெறும்பை அரைந்திருந்தான், கார்த்தி.
••••
எனக்கு இந்த அத்தியாயத்தில் satisfaction இல்ல ☹️ கதை சரியா கொண்டு போறேனான்னும் தெரியலை.
குறைகள் இருப்பின் நிச்சயம் பகிருங்கள்.
நன்றி 📿

Last edited:
Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 10
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.