- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 9
காலை உணவில் குடும்பமே உணவு மேசையில் சூழ்நிந்திருந்தது.
" அண்ணா இன்று நாங்க எல்லாரும் கடைக்கு சென்று வேண்டிய நகைகளை வாங்கி விடுகிறோம். நிச்சயதார்த்த புடவையும் சேர்த்தே பார்த்து விடலாம். நீங்களும் அதற்கு நேரம் ஒதுக்கி எங்களோட வாங்க " என்ற லதா வார்த்தையில் பெரியவர் ஆமோதிக்க உணவை கிண்டிய லைலா அண்ணன் அருகில் அமர்ந்திருக்கும் விஷ்ணுவை சீண்டினாள்.
" மாமா நான் இன்னைக்கு உங்க கூட கார்ல வரேன் " முதல் ஆளாக அவள் சொல்ல வினோதமாய் பார்த்தவன்
"என்னால வர முடியாது. நான் ஏற்கனவே சத்தியா கிட்ட சொல்லிட்டேன்" பிடித்தமில்லாமல் சொல்லியவன் கையை கழுவி விட்டு அறைக்கு செல்லும் வழியில் கண்கள் கிட்சனை தான் நோக்கியது ஹனியை தேடி. பாவி கண்ணில் சிக்காமல் போன கடுப்பு மேலும் ஆடவனை எரிச்சலாக்கிருக்க வேக நடையில் அறைக்குள் அடைந்து கொண்டான் விஷ்ணு மதுராந்தகன்.
குடும்பமே விஷ்ணு பேச்சில் அமைதியானதை கவனித்த சத்தியா "அவனுக்கு இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ரொம்ப நாளா அந்த கிளைண்ட்ட பிடிக்க தான் முயற்சி பண்ணான். இன்னைக்கி அவங்களே நேரம் கொடுக்கவும் இந்த திடீர் முடிவு. வேலை விஷயத்துல அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான் மாமா. நாம போவோம். கல்யாணத்துக்கு ஷாப்பிங் போகும் போது அவன் கண்டிப்பா வருவான் " வாயிக்கு வந்ததை சொல்லி சமாளிக்க லைலாவிற்கு தான் ஒரே வருத்தமாகி போனது.
இன்றாவது மாமாவோடு ஜோடி போட்டு சுற்றலாம் என கனவு கண்டவளுக்கு முகத்தில் அடித்தது போல் ஆனது விஷ்ணு பதில்.
"நானும் மாமாவோடு இருக்கேன் " என்பவளை தலையில் தட்டி அழைத்து சென்று விட்டான் சத்தியா.
எல்லாரும் சென்ற பின்பே கணினி முன் அமர்ந்திருந்த விஷ்ணு நேரம் கடந்து வேலையை முடித்து நிமிர்ந்தவனுக்கு மீண்டும் ஹனி நியாபகம் வந்து இம்சை மூட்டியது அவனை.
நேற்று அவன் கையை பிடித்தபோது இப்பவோ அப்போவோ என கண்ணீர் முட்டி நிற்பவளை அப்போதைக்கு விட்டவன் தான் ஓடி மறைந்தவள் அதன் பின் மறந்தும் காட்சி தரவில்லை மதுராந்தகனிற்கு.
அறையை விட்டு வெளியே வந்தவன் பார்வையை அலைய விடு, எங்கும் அவள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
மண்டை சூடாக, பல்லைக் கடித்தவன் " கொஞ்சம் விட்டா ரொம்ப தான் பண்ணுறா. இருடி வரேன் " வார்த்தைகளை துப்பியவன் சமையற்கட்டில் தேட அங்கும் அவனின் தேவி காட்சி கொடுக்கவில்லை.
வீட்டின் பின்னே சென்று பார்க்க, அங்கும் அவள் இல்லை. இதே வீட்டில் அவளுக்காக கொடுத்த அறையிலும் தேன் இல்லாததை கவனித்த விஷ்ணு யோசனையோடு வர
" என்ன தம்பி ஏதாச்சும் வேணுமா? " மாரியின் குரல் அவன் கவனத்தை இழுத்தது.
" தேனிசை எங்க? "
"அவளா? காலையிலே அவ வீட்டுக்கு போகிட்டா. "
"அவ வீடா?"
"ஆமா தம்பி. நம்ப தோப்பை ஒட்டி தனியா ஒரு ஓட்டு வூடு இருக்கும்ல. அது தான் தேன் வூடு. நான் போய் கூட்டி வரவா " அக்கறையில் அவசரமாய் அவள் கேட்க முகத்தில் ஒரு வெளிச்சம் கொண்ட விஷ்ணு
"தேவையில்ல. நீங்க வேலையை பாருங்க" நகர்ந்தவன் மாரி சொல்லிய தேனுவின் வீட்டை நோக்கி நடந்தான்.
அவனுக்கே இப்போது தான் நியாபகம் வருகிறது. 'அவள் வீட்டில் இருந்து வரும் போது தானே என்னை பார்த்து பேய் என்று ஓடிருந்தாள்'. அந்த நிகழ்வை நினைத்தப்படி சென்றவனை ஊர் மக்கள் சிலர் ஜாடை கண்டு பேசிட சிறு புன்னகையோடு பதிலளித்து ஒரு வழியாய் தேனுவின் வீட்டின் முன் வந்து நின்றான் விஷ்ணு.
அந்தகால பழைய மரக்கதவு... உள்பக்கமாக பூட்டிருக்கிறாள் போலும். கதவை தட்டி இவன் காத்திருக்க " யாருங்க? " எரிச்சலாய் குரல் கொடுத்தப்படி கதவை திறந்த தேனிசை எதிரே விஷ்ணுவை பார்த்ததும் விருட்டென சாத்த முயல அசால்ட்டாக ஒற்றைக் கையில் தடுத்து விட்டான் விஷ்ணு மதுராந்தகன்.
தேனிசை முயற்சியை விடவே இல்லை. பெரிய புலியிடம் எலி பலத்தைக் காட்டினால் எப்படி??? நன்றாக தம் கட்டி அவள் மூட முயற்சிப்பதை ஒற்றைக் கதவில் உன்றி சிரிப்பை அடக்கி பார்த்தவன் "எதுக்கு வீண் முயற்சி பண்ணுற ஹனி? வழியை விட்டா மாமா பேச வேண்டியதை பேசிட்டு போவேன்" குறும்பு ததும்பும் பார்வையில் சொல்ல வாயடைத்தவள்
"யாருக்கு யாரு மாமா? ஒழுங்கா இங்கிருந்து போங்க. இல்லை உங்களுக்கு தான் பிரச்சனை "
"என்ன பிரச்சனை?"
"ம்ச் உங்களுக்கு என்ன தான் வேணும்? "
"நீ தான்டி. இவ்ளோ தூரம் ஒருத்தன் வரும் போதே தெரிய வேணாம்?"அழுத்தமான அவன் வார்த்தையில் நொந்து போய் நின்றாள் தேனிசை.
வழியை விடாமல் மறித்து நின்றவள் "நீங்க யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிட்டு" முழுதாக அவள் முடிக்கும் முன்னே வீட்டிற்குள் விஷ்ணு வந்து விட
"நீங்க என்ன பண்ணுறீங்கனு தெரிஞ்சு தான் " கத்தியவள் வாயை பொத்தி தன்னை ஒட்டி அணைத்திருந்தான் அவன்.
"தெரியாம பண்ண நான் இன்னும் நீ முதல்ல பார்த்த மதுராந்தகன் இல்லை கண்ணம்மா. நல்லா வளர்ந்து எல்லாம் தெரிஞ்சு உன் முன்ன நிற்கிறேன்" என்பவனை புருவம் இடுங்க பார்த்தாள் புரியாமல்.
அவளுக்கு தன்னை நியாபகம் இல்லையோ என்பது ஒரு புறம் வலித்தாலும் நினைவு வைத்திருக்க கூடிய வயது அது இல்லை என்பது புரியவே உதட்டின் ஓரம் மெல்லிய புன்னகை உதிர்த்த விஷ்ணு
"நான் இந்த ஊர விட்டு மொத்தமா கிளம்பி போகும் போது நான் பார்த்த கடைசி ஆள் நீ தான்டி. கண்ணம்மான்னு பெயரை சொல்லிட்டு உன் அம்மா பின்னாடியே சுத்துன. அப்போ தெரியாது. இந்த கண்ணம்மா என் மண்டைக்குள்ள சுத்துவான்னு" மனதை திறந்து சொல்லியவனை விழி விரித்து பார்க்க இப்போது கொஞ்சம் மூளைக்கு உரைத்தது யாரிவன் என்பது.
"அது...அ...து.. எப்படியும் பத்து பதினைந்து வருஷத்துக்கு மேல இருக்கும். இதுல நான் உங்கள பார்க்க கூட இல்லையே" நியாமாக கேட்டாள். ஆனால் அதுவே காதலை துளிர்வித்ததை அவன் எப்படி சொல்ல.
"குணசீலன் மாமா விஷயத்தை சத்தியா சொல்லும் போது தான் திரும்ப உன் பெயர் தட்டுப்பட்டுச்சு. ஏன்னு தெரியலடி. உன் பெயரை கேட்டதும் ஒரு பெயர் தெரியா உணர்வு. திரும்ப திரும்ப உன்னை பற்றிய விஷயங்கள் மட்டுமே என்னையும் மீறி எனக்குள்ள ஆழமாய் புதைச்சிருக்கேன். இப்போ நான் இந்தியா வந்ததுக்கும் முதல் காரணம் உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போக. என் மனைவியா!" வேக மூச்சில் அவன் சொல்லி முடிக்க அதிர்ந்து போய் நின்றாள் தேனிசை.
இதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். ஒருவன் தன்னை பார்க்காமல் காதலிக்கிறான் என்றால் எப்படி நம்புவது. பொய். வேறு ஏதோ காரணம் இருக்கும். ஒரடியாக என்னை இந்த வீட்டை விட்டு விரட்ட இந்த திட்டமா? இல்லை வயசு கோளாறில் வேறு எதும் அவள் கண்களை உருட்டி நகத்தை கடிக்க முகத்தை படித்த விஷ்ணு
"அந்த எண்ணம் இருந்திருந்தால் இவ்ளோ நேரம் நின்னு பொறுமையா பேசியிருக்க மாட்டேன்டி " எண்ணவோட்டத்தின் கேள்விக்கு அவன் பதில் தர திடுக்கிட்டு தள்ளி நின்றாள் தேனிசை.
ஆனால் அவள் அறியவில்லை. விஷ்ணு அருகில் இல்லாமலே அவளுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்பதை.
நம்ப முடியாத அவன் பேச்சை காதில் போட்டுக் கொள்ளாத தேனிசை "எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்குலாம். கிளம்புங்க முதல்ல. இங்க உங்களயும் என்னையும் சேர்த்து பார்த்தா தப்பா பேசுவாங்க " அவசரமாக சொல்ல அவளை விட்டு விலகி வீட்டை சுற்றி பார்த்த விஷ்ணு
"கட்டிக்க போற பொண்ணோட சேர்த்து வச்சு பேசுறதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை கண்ணம்மா. நான் இங்க வந்தது உன்னை கூட்டிட்டு போக. சீக்கிரம் உன் முடிவை சொல்லு. என் மனைவியா என் கூடவே இங்கிருந்து போகிடலாம் " அவளை நோக்கி கரம் நீட்ட முழுதாய் குழம்பி போனாள் தேனிசை.
மண்டையே வெடித்து விடும் அளவிற்கு குட்டை போல் குழம்பி நின்றவள் "நீங்க சொல்லுற எதுவும் எனக்கு புரியல. சும்மா பார்த்து பழகாம காதலை என்னால நம்பக்கூட முடியல. ஆனா ஒன்னு தெரியும். உங்க மனசுல இருக்குற மாதிரி என் மனசுல உங்கமேல எந்த எண்ணமும் இல்லை. உங்கள கல்யாணம் பண்ணிக்கவோ உங்க கூட வரவோ எந்த எண்ணமும் என் மனசுல இல்லை. இதான் என் பதில் " தெளிவாய் சொல்லியவள் தரையைப் பார்த்து நிற்க மெலிதாய் இதழ் விரித்தான் மதுராந்தகன்.
"என் முடிவையும் அப்போ தெளிவா கேட்டுக்கோ. நான் இங்கிருந்து போனா அது உன்னோட தான். இது தான் என் முடிவு" அவள் கண்கள் பார்த்து சொல்லிய விஷ்ணு கதவை நோக்கி நடந்தவன் நின்று முகம் வாடியவளை நோக்கினான்.
அவன் நின்று விட்டதில் தேனுவும் என்ன என்பது போல் பார்க்க "என்னை பிடிக்கலைனாலும் பரவால்ல கண்ணம்மா. என் கண்ணு முன்னாடியே இரு. இது மாதிரி ஓடி ஒளியாத. புரியுதா?" உரிமையில் சொல்ல தன்னிச்சையாய் தலை அசைத்து சரியென்றாள் தேனிசை.
"குட். சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு" கண்ணை சிமிட்டி அவன் சென்று விட விக்கித்து நின்றவள் அப்படியே அமர்ந்து விட்டாள் திராணின்றி.
ஏதேதோ பேசிவிட்டு அவன் நிம்மதியாய் கிளம்பி விட்டான். ஆனால் இவளுக்கு தான் இப்போது நிம்மதி மொத்தமாய் தொலைந்து போனது.
தன்னை ஒருவன் இந்தளவு நேசிக்கிறான் என்பது பெண்ணாக அவளை மலர வைத்தாலும் நிதர்சனம் தலையில் தட்டி நிகழ்விற்கு கொண்டு வந்து விட்டன.
'லைலாவுக்கும் இவருக்கும் தான் கல்யாணம் பண்ணி வைக்க குடும்பமே முடிவு பண்ணிருக்காங்க. அதை கெடுக்க நான் காரணமாக கூடாது. அவர் ஏதோ புரியாமல் பேசிட்டு போறாரு. நீ உன் முடிவுல தெளிவா இரு தேனு. முடிஞ்சா இந்த வீட்டை இந்த ஊரை விட்டு எங்கையாவது ஓடிரு. திரும்ப ஒரு நரகம் உனக்கு வேண்டாம். இவர் இங்கு வந்து பேசுனது தெரிஞ்சா கூட லதாம்மா என்னைக் கொன்னு போட்ருவாங்க' மிரட்சியில் புலம்பிய தேனிசை விஷ்ணு சென்ற பின்பும் பெரிய வீட்டிற்கு போகாமல் கொஞ்ச நேரம் அங்கையே நேரத்தைக் கடத்தினாள்.
மாலை போல் பெரிய வீட்டிற்கு வந்தவள் குடும்பமே சுற்றி அமர்ந்து வாங்கிய நகைகளை பரப்பி பேசிக் கொண்டிருப்பதை கவனித்தவள் எல்லாருக்கும் தேநீரை போட்டு கொண்டு செல்ல
"ஹேய் தேனு எங்க போன நீ?? உன்னை தான் ஆத்தா தேடினேன். இந்தா இது மாமா உனக்கு வாங்கியது " ஆறுமுகம் அனைவர் முன்னிலையில் அவளுக்காக வாங்கிய புடவையை கொடுக்க அதிர்ச்சியில் பேச்சை நிறுத்தினாள் லதா.
அவளுக்கே தெரியவில்லை அண்ணன் எப்போது இதை வாங்கினார் என்று.
தேனிசை பார்வை லதா மேல் பதிய கவனித்த சத்தியா " என்ன பார்க்குற தேனு. நிச்சயதார்த்தத்துக்கு எல்லாருக்கும் வாங்குனோம். அது உனக்காக. மறுக்காமல் வாங்கிக்கோ "
"இல்லை. இதுலாம் எதுக்கு?"
" எம்மா. நல்ல விஷயம் நடக்குற இடத்துல உன்னை மட்டும் எப்படி விட்டுட முடியும். வாங்கிக்கோம்மா "விஷ்ணுவின் தாயாரும் சொல்ல மறுக்க முடியாமல் சங்கடமாய் நின்றவள் வேறு வழியின்றி அதை வாங்கிக் கொண்டாள் லதாவின் முறைப்பை மீறி.
"ஒழுங்கா என் நிச்சயதார்த்தத்துக்கு இதை தான் நீ கட்டனும் தேனிசை. நான் தான் இதை உனக்காக செலக்ட் பண்ணேன் " கண்மணி பாச மிரட்டலை கொடுக்க பொத்தம் பொதுவாய் தலையை ஆட்டியவள் லதாவின் முறைப்பிலிருந்து தப்பித்து ஓடி விட்டாள்.
இதோ சத்தியதேவ் கண்மணியின் நிச்சயதார்த்த நாள் வந்து விட்டது. ஆறுமுகம் ஊரில் ஒருத்தரை விடவில்லையே. இன்று உணவு நம் வீட்டில் தான் எல்லாரும் குடும்பத்தோடு வந்துடுங்க அன்பு கட்டளை போட்டவரின் வார்த்தையை மதித்து ஊர் மக்களும் வந்துவிட கண்மணி செலக்ட் செய்து கொடுத்த புடவையில் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் தேனிசை.
கரும்பச்சை நிறத்தில் சிவப்பு கலந்த பட்டு புடவை. கூந்தலை அள்ளி பின்னிலிடாது காதோர கற்றையை சுருட்டி கிளிப் போட்டவள் மாரி கொடுத்து விட்ட பூவை அளவாய் வைத்திருந்தவளுக்கு அதுவே அழகாய் காட்டியது பெண்ணை.
"ஏய் தேனும்மா. என் அறையில மஞ்சள்பை ஒன்னு மேசை மேல் வைத்திருப்பேன் எடுத்துட்டு வாம்மா " நிச்சயதார்த்த வேலை ஆயுத்தமாக ஆறுமுகம் சொன்னதை செய்திட மேலே செல்பவளை அந்த நேரம் யாரும் கவனிக்கவில்லை.
லதாவிற்கு மகனின் நிச்சயதார்த்தம் நடக்க போகிற சந்தோஷமே கொஞ்சம் தேனுவை நிம்மதியாக வீட்டில் உலாவ வைத்திருந்தது.
கீழே மொத்த கூட்டமும் இருக்க மேலே ஆறுமுகம் அறை நோக்கி வந்தவளை திடீரென இழுத்துக் கொண்டு விஷ்ணு அவன் அறைக்குள் அடைந்துக் கொள்ள அப்போது தான் மேக்கப் முடித்து வெளியே வந்த லைலா கண்ட காட்சியில் சிலையாய் நின்றாள்.
தொடரும்...

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 9
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.