நயனவாசினி - 09(i)

Member
Joined
Aug 20, 2025
Messages
36
மதுர குலுங்க குலுங்க…” என்று காதைக் கிழித்துக்கொண்டிருந்த பாடல் சத்தத்தையும் மீறிக் கத்தினாள், நயன மனோகரி.

கண்களை விரித்தவண்ணம், “குமரா, குண்டு மல்லி” என்று பூக்கார பெண்ணிடம் சென்று நின்றவளுக்கு, தலை நிறைக்க மதுர மல்லியை வாங்கிக்கொடுத்தான், அவள் காதலன், சந்தனக்குமரன்.

அப்போதுதான் விடிய ஆரம்பித்திருந்தது மதுரை.

பெயருக்குத் தக்க தூங்கா நகரம் அந்த நேரத்திற்கே சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.

டீ கடைகள், பூத், மார்க்கெட், பேருந்து நிலையம், உணவகங்கள் என்று மெல்ல மெல்ல கண்விழித்து விழி சிமிட்டிக்கொண்டிருக்க, மதுரையை ஆளும் மங்கையர்க்கரசி அவர்களுக்கு முன்பே துயில் எழுந்திருந்தாள்.

அதிகாலை நான்கு மணிக்கே மீனாட்சியை சேவிக்க திருகோவில் வந்துவிட்டனர், குமரனும் நயனி குடும்பமும்.

கஜேந்திரன் வேலை காரணமாக வர இயலவில்லை. மஞ்சு, தாரணி, நயனி, மஞ்சுவின் அக்கா கனகா, அவரின் மகன் விசாகன் மற்றும் குமரன் என்று ஆரவாரமாய் வந்திருந்தனர்.

சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்னும் இரு தினங்களில் துவங்க இருக்க, அதற்குள் அவன் நாச்சியாரைப் பார்க்க ஓடி வந்துவிட்டான் சந்தனக்குமரன்.

குமரனின், “முறைக்கு எங்க குலதெய்வம் கிட்டத்தான் பத்திரிக்க வெச்சு எடுக்கனும். எனக்கு ஏ மீனாட்சி கிட்ட போகனுமுனு தான் இருக்கு. கல்யாணம் முடிஞ்ச பின்ன வேணா ஊருக்கு போய் கும்புட்டுக்கலாம்” என்றவன் வார்த்தையை மதித்தனர் நயனி வீட்டார்.

அவனை வாழ வைத்து, இன்றளவும் துவழவிடாமல் இயங்க வைக்கும் அவன் தடாதகை பிராட்டியை கண்குளிர கிடைத்த அந்த சொற்ப விநாழிகையில் கண்டு மகிழ்ந்தான், சந்தனக்குமரன்.

அவன் மனதில் இருக்கும் ஆற்றொணா துன்பத்தை அவளிடம் இறக்கி வைத்த நிம்மதி அவனிடம்.

‘என்னோட இரத்த சொந்தம் யாரும் இல்லாம, என் நயனிய கல்யாண பண்ணப்போறேன் மீனாட்சி. இது என்னப் பொறுத்தவரை சரிதான். அவங்கள பொறுத்தவரை நா தப்பு. அந்த தப்பு தப்பாவே இருந்துக்கட்டும். எப்பவும் போல நீ மட்டும் என்னோடவே இரு, அதுபோதும் எனக்கு.. இல்ல எங்களுக்கு. எப்பவும் சிரிச்சபடியே இரு கண்ணு நீ’ என்று வேண்டியவன் முகத்தில் அப்போது தான் கீற்றாய் ஒரு புன்னகை அரும்பியது.

ப்ரயத்தனப்பட்டு சந்தனக்குமரன் - நயன மனோகரியின் திருமணப் பத்திரிக்கையை முதலில் மீனாட்சியின் பாதங்களில் வைத்து வாங்கியவர்கள் சுந்தரேஸ்வரர், முக்குறுணி விநாயகர், மீனாட்சி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதிகளிலும் வைத்து வணங்கினர்.

பூஜை முடிந்த கையோடு மஞ்சு, “விசாகா மாமாவோட போய் மொத கல்யாணத்துக்கு பதிவு பண்ணிட்டு வாங்க. வேற என்ன நகல் எல்லாம் தரனும்னு ஒரு தடவைக்கு ரெண்டா கேட்டுட்டு வா. கல்யாணத்தன்னிக்கு எல்லாம் இங்க நிக்கக் கூட முடியாது, எள்ளு போட்டா எண்ணெ ஆகிடும். பாத்துக்க” என்க, குமரனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கனகா, “இப்போவே இந்த வெயிலு கொளுத்தது. கண்ணாலத்தன்னிக்கு என்னாகுமோ” என்று அவர் ஒருபக்கம் புலம்ப,

தாரணி, “அதிகமா நகை எதுவும் போடாத மனோ, இப்போவே இந்த உப்புசமா வேற இருக்கு. நீ பட்டு கட்டிட்டு நகை போட்டுட்டு வந்தே, முடிஞ்ச” என்க, நயனி கண்களை உருட்டினாள்.

குமரன் அலாட்டிக்கொள்ளாது, “கல்யாணத்தன்னிக்கு அதெல்லாம் அவ கவனத்துலையே இருக்காது” என்று பொதுவாய் கூற, தாரணி கேலியில் இறங்கிவிட்டாள்.

ஆம், சித்திரை திருவிழாவான மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின் போதுதான் சந்தனக்குமரன் நயனியின் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தான் குமரன்.

கஜேந்திரன் வீட்டில் அது அத்தனை ஆட்சேபத்திற்கு ஆனாது. சித்திரையில் அவர்கள் வழக்கப்படி நல்லது எதுவும் செய்யமாட்டோம் என்று கஜேந்திரன் வழி பெரியப்பா, சித்தப்பாமார்கள் எதிர்க்க, குமரன் விடாபிடியாய் இருந்துவிட்டான்.

எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அவன் யார் பேச்சையும் கேட்பதாய் இல்லை.

கார்த்தி, நயனி ஏன் கஜேந்திரனே சொல்லவும், “என் கல்யாணத்தப் பார்க்க என் அப்பா, அம்மா, தம்பின்னு யாரும் இருக்கமாட்டாங்க. என் சார்ப்பா என் மீனாட்சி மட்டும் தான் இருப்பா. அவ கல்யாணத்தப்போவே நானும் பண்ணிக்கிறேன். என்ன தப்பு இதுல? என்னோட முடிவு இதுதான், இதை ஏத்து தேதி கூறிக்கறது உங்க விருப்பம்” என்றிருக்க, மாப்பிள்ளையின் முறுக்கை பார்த்து அவனுக்காக பெரியவர்களிடம் காவடி எடுத்தார் கஜேந்திரன். வேறு வழி?

கடைசியில் அவன் இழுப்பிற்கு கட்டுப்பட்டு சித்திரை திருவிழா அன்று திருமணத்தை மதுரையில் வைத்துக்கொள்ள ஒற்றுக்கொண்டனர்.

அதேபோல், பெரிய அளவில் எல்லாம் ரிசப்ஷனை நடத்த திட்டமில்லை. கோவையிலேயே ஒரு சின்ன மண்டபம் பார்த்து ஒரு வேளை உணவோடு முடித்துக்கொள்ள வேண்டும் என்பது நயனியின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.

குறைந்தது ஒரு நூறு பத்திரிகை அடித்து, நண்பர்கள் தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினரை மட்டும் அழைக்கும் எண்ணம்.

நயனிக்கு அதில் ஆடம்பரம் அனாவசியமாகப் பட்டது.

“ஒரு நாளுக்காக எதுக்கு இத்தன செலவு? அந்த பணத்த எடுத்து வெச்சா நாளைக்கு எங்களுக்கு உதவும். கோவில்ல கல்யாணம் வெச்சு, சின்னதா நமக்கு தெரிஞ்சவங்களுக்கு சிம்பிளா டிஃபன் போட்டாலும் கல்யாணம் தான்” என்றிருந்தாள் அழுத்தமாய்.

மகளின் பேச்சை பிரம்மித்துப் போய் பார்த்திருந்தார் கஜேந்திரன்.

இன்னும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அதைவிட, குமரன் அவரை வெளிப்படையாக தவிர்த்து ‘மாமா’ என்ற கூப்பிடுவதையும் நிறுத்தியிருந்தான்.

கஜேந்திரனுக்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை குணமாய் வாய் பேச்சால் சொல்லியிருக்கலாம் என்பது தான் அனைவரின் கருத்தும்.

“வய்துல அன்னிக்கு ஒதச்சது என்னாவது பெரிசா போயிருந்தா என்னய்யா பண்ணியிருப்ப நீ?
தெய்வம் புண்ணியத்துக்கு ஒன்னும் ஆகல, இல்லேனா?

புத்தி மழுங்கிடுச்சா உனக்கு? நீ பெத்த பிள்ளைய போய் அந்த அடி அடிக்கர? ஒதக்குற? அவளே பொங்குனு கெடக்கா, ஒன்னோட அடிய தாங்குமா அந்த பிள்ள” என்று ஆதங்கம் தீரத் தீர கஜேந்திரனை பிழிந்தெடுத்திருந்தார், மஞ்சு.

அதையெல்லாம் தன் அக்காளிடம் அளவளாவிக்கொண்டு வந்தவரின் பார்வை மொத்தம் அவரின் வருங்கால மூத்த மருமகனிடம் தான்.

கனிந்த முகமாய் தன் மகளிடம் பேசியபடி, அவளை மெள்ள வழிநடத்திக்கொண்டு, தேவையறிந்து செயல்பட்டும் அவனை அத்தனைப் பிடித்தது அத்தையவருக்கு.

இளையமகளுடன் சற்று தள்ளி நின்று பழகுவதாகட்டும், நயனியின் நயனமொழியறிந்து நடப்பதாகட்டும், அவன் பதவிசான பேச்சு, பழக்கம் எல்லாம் தாயாக அவரை நிறைத்துவிட்டது.

இதில் குமரனின் சாதியை அவர் எங்கும் எதிலும் பார்க்கவில்லை, பிடித்துத் தொங்கவும் இல்லை.

கனகா, “அவ மனசறிஞ்சு நடக்கற மாப்பிள்ள தான் மஞ்சு. சாதி சனம் எல்லாம் ஒரு எல்ல வரைக்கும் தான், அத புரிஞ்சு அவர் அப்பாம்மா வரதுக்கு காலம் ஆகும். ஆனா இவர் நம்ம நயனி தான் வேணும்னு நின்னு கட்டறார் பார், ஒசந்துட்டார்டீ” என்க, மஞ்சுவிற்கு மனது குளிர்ந்துவிட்டது.

மஞ்சு, “அவர் (கஜேந்திரன்) இதெல்லாம் பாத்து புரிஞ்சுக்கிட்டனால தான் இவங்க காதலுக்கு சரின்னுட்டார். அவருக்கு தெரியாதா ஒருத்தரோட குணம் எப்படின்னு? நல்ல பிள்ளையா, ஒழுக்கமா அதவிட சுத்தமானவரா இருக்காருன்னு தானே மனோ அப்பாவுக்கு மாப்பிள்ளை அத்தன பிடிச்சிருக்கு. அன்னிக்கு வீட்டுக்கு வந்து அவரையே எப்டி நயனிய நீங்க அடிக்கலாம்னு கேட்கவும், மனுஷனுக்கு உள்ளுக்குள்ள இலகிடுச்சே” என்று அத்தனை பெருமை.

அதையெல்லாம் மெய்யாக்கும் படிதான் குமரனும் இருந்தான். இனியும் இருப்பான்.

கோவிலுக்கு முன்பிருந்த கடைகளில் தாரணியும் நயனியும் பொருட்கள் சிலதை வாங்க, குமரனும் ஒன்றை வாங்கினான்.

அவன் வருங்கால இல்லாளின் நெற்றியை பிரத்தியேகமாய் அலங்கரிக்க வென்றே தாழம்பூ குங்குமத்தை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான், சந்தனக்குமரன்.

அவன் மனதில் கொள்ளை ஆசை இருக்கப் போய் தானே நயனிக்கான சிறுசிறு விஷயங்களையும் யோசித்து யோசித்து செய்கிறான்!

பக்கத்தில் இருந்த சைவ உணவகத்தில் உணவுண்டவர்கள் அங்கிருந்து திருப்பரங்குன்றம் சென்று முருகன் சேவித்த பின்னர் மீனாட்சியின் அண்ணனைக் காண புறப்பட்டனர்.

பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி நயனியை உண்மைக்கும் மிரட்டினார்.

குமரனை ஒட்டிக்கொண்டே அவள் நகர, சத்தங்காட்டாது வேலையை முடித்து அழகரைப் பார்த்து கையோடு ஊருக்கு கிளம்ப முனைந்தனர்.

ஆனால், நயனி ஒற்றுக்கொள்ளவில்லை.

குமரன், “என்ன கண்ணு” என்க,
அவன் கண்களைத் தான் ஆழ்ந்து பார்த்தாள்.

அவன் கண்களில் குட்டியூண்டாக ஒரு வரட்சி ஆக்கிரமித்திருக்க, அதை தன்னால் முடிந்தளவு கலைய முனைந்தாள், நயனி.

குமரனுக்கு மதுரையின் ஃபேமஸ் ‘அல்வா செட்’ என்றால் அத்தனை பிடித்தம்.

அது இரவு நேரத்தில் தான் கிடைக்கும் என்பதால் அதை காத்திருந்து சாப்பிட்டு தான் பேருந்து ஏற வேண்டும் என்று விடிவாதம் பிடித்தாள், நயனி.

“வந்த சுருக்குல போகனும்னு சொன்னா, நீ கேட்டியேனு மதுர முழுக்க சுத்தியாச்சு. இதுக்கு மேல லேட் பண்ணா ஊர் போக விடியல் ஆகிடும் நயனி. சொன்னாக் கேளு, வா” என்று அவன் சமாதானம் செய்தது எல்லாம் வீண் தான்.

தெரியாத தெருக்கள், சின்ன சின்ன கோவில்கள், பார்க்கும் கடைகள் என்று சுற்றியவர்கள் கடைசியில் மீனாட்சியிடமே வந்து நின்றனர்.

ஜிகிர்தண்டா குடித்து குடித்தே அனைவர் வய்றும் மெத்தென்று இருக்க, இனி இரவு உணவிற்கு எங்கு இடம்?

கனகா, குமரன் நயனி மற்றும் தாரணியை மட்டும் உணவுன்ன செல்ல சொன்னவர், மஞ்சு விசாகனோடு மீண்டும் மாசி வீதியை சுற்ற ஆரம்பித்துவிட்டார்.

கோவிலை விட்டு சற்று தள்ளி நகரவுமே அத்தனை உணவகங்களும் அங்கிருந்து வந்த கலவையான உணவின் மணமும் நாசியை நிமிண்டின.

மின் விளக்கு மினுங்கும் ஒரு கடையைக் காட்டிய தாரணி, “அங்க போகலாம் மாமா. கூட்டமா வேற இருக்கு, நல்லா இருக்கும் போல” என்க, நயனியும் அதற்கு இசைந்தாள்.

நடுத்தர உணவகம் தான். நல்ல கூட்டம். உள்ளே நுழையும் போதே அனல் பறந்தது தோசைக்கல்லிலிருந்து.

நயனி சாப்பிட கேட்க,

பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, மட்டன் பரோட்டா, சிக்கன் படோட்டா, முட்டை பரோட்டா, பன் பரோட்டா, நெய் பரோட்டா, கிழி பரோட்டா, பாடர் பரோட்டா, சிலோன் பரோட்டா, பொறிச்ச பரோட்டா, பரோட்டா பொட்டலம், வீச்சே என்று மூச்சு பிடிக்க ரயில் நீளத்திற்கு அவர் பரோட்டா வகைகளை வாசிக்க, தலை சுற்றியது அவளுக்கு.

குமரன், “அல்வா செட் இருக்காண்ணே” என்க, அவர் முகத்தில் பல்ப் எரிந்தது‌.

“மேலூரா தம்பி” அவர் ஆர்ப்பரிக்க,

“இல்லண்ணே, தஞ்சை பக்கம்” என்றான்.

“ரைட்டு, எல்லாம் நம்மூரு தானே. ஸ்பெஷலே போட்டுடுவோம்” என்றவர் எழுதிக்கொள்ள,

குமரன் நயனியைப் பார்க்க, அவள் திறந்த வாய் மூடியிருக்கவில்லை.

பின் அவனே, “அண்ணே, மட்டன் கறி தோசை மூனு, வெங்காயக் கறி ரெண்டு, மட்டன் எலும்பு வறுவல் ஒரு ப்ளேட்” என்றான்.

தாரணி, “மாமா, இதெல்லாம்..” என்று இழுக்க,

“மூனு பேருக்குத் தான் ராசாத்தி. என்னால அளவாத் தான் சாப்ட முடியும்” என்க, பதார்த்தம் வரவும் சத்தமில்லாது உண்டு முடித்தனர்.

குமரன் நிறுத்தி நிதானமாக சாப்பிட, நயனிக்கு உள்ளூர நிறைந்துவிட்டது.

மகளீரைக் கூட்டிக்கொண்டு கோவை செல்லும் கடைசி பஸ்ஸை பிடிப்பதற்குள் நூறு முறைக்கு மேல் கஜேந்திரன் அழைத்துவிட்டார்.

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 09(i)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
96

😃😃😃😃
 
Top