அத்தியாயம் 3

Member
Joined
Aug 20, 2025
Messages
37
அத்தியாயம் 3

திருமணம் முடிந்த கையோடு தேவசேனாவை இழுத்துக் கொண்டு காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டான் விக்ரம் சக்கரவர்த்தி...

வழிநெடுக அவன் வாய்திறவாது ரோட்டிலே கண் பதித்து கடுமையான முக பாவத்துடன் அமர்ந்து கொண்டு காரை ஒட்டி சென்றான்...

கார் வேகமெடுத்து நேராக ஊர் எல்லையை தாண்டி அடர்ந்த செடிகளும் மரங்களும் நிறைந்த காட்டுக்குள் நுழைந்தது.....!!

கடவுளே இவர் நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார்?? இவருடைய வீடு இந்த பக்கம் இல்லையே.. ஏதோ காடு போல இருக்கிறது.. இந்த பக்கமாக எதற்காக அழைத்து வந்தார்?? என்று பயத்துடன் யோசித்து கொண்டே அங்குமிங்கும் பார்த்த வண்ணம் அமைதியாக வந்தாள் தேவா....

கார் நேராக அந்த காட்டிற்கு நடுவே உள்ள அந்த பெரிய பங்களா கேட்டிற்கு முன்பாக வந்து நின்றது....!!

இவர்கள் வந்த காரின் ஹாரன் ஒலி கேட்டு அந்த கேட்டை திறந்து விட்டான் ஒரு காவலாளி..

பிறகு அங்கிருந்த கார் பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு காரை விட்டு இறங்கிய விக்ரம், கார் கதவை வேகமாக அறைந்து சாற்றினான்...!!

ஏதோ அவளையே கன்னத்தில் பளார் என்று அறைந்தது போல் இருந்தது அவளுக்கு...

இப்போது என்ன செய்வது நாமும் இறங்க வேண்டுமா ?? இல்லை காரிலேயே இருக்க வேண்டுமா?? ஒன்றும் புரியவில்லையே, என குழம்பிய வண்ணம் கைகளை பிசைந்து கொண்டு உள்ளே அமர்ந்திருந்தாள் அவள்...

" ராஜப்பா இங்க வா", என்று அவன் கட்டளையிடவும்...

அங்கு தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயதுக்காரன் ஒருவன் வேகமாக ஓடி வந்தான்...

இவனை கண்டதும் தூக்கி மடித்து கட்டியிருந்த வேட்டியை இழுத்து விட்டு விட்டு, குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு பணிவாக "ஐயா சொல்லுங்க", என்றான்...

" நான் சொன்ன மாதிரியே எல்லாத்தையும் தயார் பண்ணிட்டியா??", என்று அவன் கேட்கவும்..

" ஆமாங்கய்யா.. நீங்க சொன்னது போலவே எல்லாமே தயார்", என்று அவன் கூறினான்..

"ம்ம்.. நான் சொல்ற வரைக்கும் யாரும் அந்த பக்கம் வர வேண்டாம்.."

" சரிங்கய்யா"

" சரி நீ போ"

" ஆகட்டும்ங்க", என்று கூறிவிட்டு மீண்டும் தன் பணியை தொடர்ந்தான் அவன்...

அந்த ராஜப்பாவிடம் பேசிவிட்டு திரும்பிய போது தான் விக்ரம் கவனித்தான், அவள் இன்னும் இறங்கவே இல்லை காருக்குள்ளே தான் அமர்ந்திருக்கிறாள் என்று...

அதை கண்டதும் கோபம் அவனுக்கு தலைக்கு ஏறியது..!!

வேகமாக காரை சுற்றி அந்த பக்கமாக வந்து கார் கதவை ஓங்கி அடித்தான்...

எதிர்பாரா நேரத்தில் அவனின் இந்த செயலைக் கண்டு அதிர்ந்து போனாள் தேவா...

" ஏன் மேடம் காரை விட்டு இறங்கி வர மனசு இல்லையோ??, நான் வந்து கார் கதவை திறந்து விட்டு வாங்க அம்மணி அப்படின்னு வரவேற்கணுமோ?? இல்ல ஆர்த்தி கரைக்கணுமா?? பூ தூவி வரவேற்கணுமா?? சொல்லுங்க மேடம்.. நீங்களே இப்ப காரை விட்டு கீழே இறங்கி வரீங்களா?? இல்ல.......", என்று அவன் ஏளனமாக குரலை இழுக்கவும்....

அடுத்த நொடி கார் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கி விட்டாள் அவள்..

" விக்ரம்.. இது எந்த இடம்?? எதுக்காக என்னை இங்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க?? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க?? எனக்கு ஒன்னும் புரியல..", என்றாள் கலங்கிய விழிகளுடன்..

" இந்த முதலை கண்ணீர் வடிக்கிறது எல்லாம் என்கிட்ட வேணாம்.. சும்மா டயலாக் பேசிட்டு இருக்காம ஒழுங்கா என் பின்னாடியே வா..", என்றவன் அவளின் பதிலுக்காக காத்திராமல் திரும்பி அவன் பாட்டுக்கு உள்ளே வேகமாக சென்றுவிட்டான்...

வேறு வழியின்றி அவளும் அவனை பின்தொடர்ந்து உள்ளே சென்றாள்..

ஏதோ பெரிய கல்யாண மண்டபம் போல அத்தனை பெரிய ஹாலை தாண்டி வலப்புறமாக இருந்த மாடி படிக்கட்டை நோக்கி சென்றான் அவன்...

இவளும் பேசாது அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள்...

மாடியில் இருந்த நான்காவது அறைக்குள் அவன் நுழைய ..

இவள் சிறு தயக்கத்துடன் வாசலிலேயே நின்று விட்டாள்...

" என்ன அங்கேயே பராக் பாத்துட்டு நின்னுட்டு இருக்க உள்ளவா..", என்றான் சீற்றத்துடன்..

அவள் இன்னமும் தயக்கத்துடன் அங்கேயே நிற்க.. இவனுக்கு கோபத்தில் முகம் கடுகடுத்தது...!!

"ச்சே", என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கிச் சென்றவன்.. அவளின் கைகளை இறுகப்பற்றி உள்ளே இழுத்து போட்டான் அரிசி மூட்டையை இழுத்து போடுவது போல்....!!

இழுத்து போட்ட வேகத்தில் கட்டிலில் குப்புற விழுந்தாள் அவள்....

"ஒருதடவை சொன்னா உனக்கு புரியாதா ?? நீ என்ன கைக்குழந்தையா ஒவ்வொன்னையும் சொல்லிட்டே இருக்கணுமா??", என்று கத்தினான் அவன்...

முரட்டு தனமாக அவன் இழுத்து போட்டதில் அவளின் கை மணிக்கட்டு லேசாக சிவந்து போனது....

மெதுவாக தேய்த்து விட்டு கொண்டாள் தன் கைகளை..

" எதுக்காக இப்படி முரட்டுத்தனமா நடந்துக்குறீங்க?? உங்களோட நடவடிக்கை ஒண்ணுமே எனக்கு புரியல.. எதையோ மனசுல வச்சுட்டு தான இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க??", என்று கேட்டாள் பொறுக்க மாட்டாமல்..

" ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத.. நீ இப்படி ஒன்னும் தெரியாத பச்ச பிள்ளை மாதிரி பேசும்போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா??", என்றவன்..தாங்க முடியாத கோபத்தால் தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கத்தினான்..

" என்ன..என்ன ஆச்சு விக்ரம் உங்களுக்கு ?? ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க??", என்றாள் திணறலாக..

அடுத்த நொடி அவளின் குரல்வளையை தன் இரும்பு கரங்களால் நெறித்தான் அவன்...!!

அனல் கக்கும் விழிகளோடு அவளின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்த வண்ணம்.. சூடான மூச்சுக்காற்று அவளின் வதனத்தை தீண்டியது அவனின் நெருக்கத்தால்...!!

புரியாத குழப்பமும், சற்றே பயமும் கலந்த பாவனையோடு அவளும்...👀👀

சீற்றம் மிகுந்த சிங்கம் போல் சினத்தோடு அவனும்.. 🔥🔥

ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேராக பார்த்த வண்ணம் சில கணங்கள் அப்படியே இருந்தனர்....!!

" நீ பண்ண வேலை எதுவும் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கியா??.. என்னவோ நீயும் நானும் காதலித்து.. அப்புறம் நீ என்னை ஏமாத்திட்டு வந்து கல்யாணம் பண்ணதா தான் எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க அங்க மண்டபத்துல.. ஆனா உண்மை என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. உனக்கும் கூட தெரியும்.. ஆனால் நீ ஒத்துக்க மாட்டே.. அதுதானே உன்னோட சாமர்த்தியம்.. ஒன்னும் தெரியாதவ மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு எல்லா வேலையும் பண்ணிட்ட இல்ல?? உன்னை சும்மா விட மாட்டேன்டி.. இனி உன் வாழ்க்கையில் வர ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு நரகமா தான் இருக்கும்.. ஏன்டா இவனோட வாழ்க்கையில தலையிட்டோம் என்று நீ நினைச்சு ஒவ்வொரு நாளும் ஃபீல் பண்ணனும்.. பண்ண வைப்பான் இந்த விக்ரம் சக்ரவர்த்தி", என்று உறுமினான் அவன்...

அவனுடைய சினத்தை அவன் பேச்சில் மட்டும் காட்டவில்லை .. அவளின் குரல்வளையை நெருக்கி இருந்த அவனின் இரும்பு கரங்களிலும் காட்டினான்.. அதன் விளைவாக மூச்சு விட முடியாமல் திணறிப் போனாள் தேவா....!!

சுவாசத்திற்கே அவள் திண்டாடினாள்.. கண்கள் இரண்டும் சிவக்க தொடங்கின அவளுக்கு..!!

தன் இரு கைகளாலும் அவளும் எத்தனையோ போராடினாள் தன்னை அவனிடம் இருந்து விடுவிப்பதற்காக..

ஆனால் அவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது..!!

கண்களில் நீர் வழிய"ப்ளீஸ் விக்ரம் விட்ருங்க.. வலிக்குது", என்றாள் தாங்க முடியாத வேதனையோடு..

கொலை வெறியோடு அவளின் கழுத்தை நெறிக்க தொடங்கி இருந்த அவன்..அவளின் கண்களில் இருந்து வழிந்த நீரை கண்டவுடன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. சட்டென அவளை விடுவித்தான்...

அதன் பிறகுதான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது...

" இங்க பாரு.. இந்த வீட்டை விட்டோ.. இல்ல இந்த காட்டை விட்டோ வெளியே போகணும்னு நீ கொஞ்சம் கூட நினைச்சு பார்த்திராத.. ஏன்னா, நீ இந்த ரூம விட்டு வெளியே வந்தா கூட எனக்கு தெரிஞ்சுடும்..அப்படி இருக்கும்போது இந்த வீட்டை விட்டு இல்ல இந்த ஏரியாவை விட்டு நீ வெளியே போகணும்னு கனவுல கூட நினைச்சு பார்த்துடாத.. இங்கிருந்து கத்தி சத்தம் போட்டு யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என்று கூட நினைக்காத.. ஏன்னா சுற்றி உள்ள மொத்தம் தென்னந்தோப்பு வாழைத்தோப்பு என்று கிட்டதட்ட 25 ஏக்கர் நிலமும் எங்களுக்கு தான் சொந்தம்.. அதனால நீ இங்கிருந்து தப்பிச்சு போறத பத்தி கனவில் கூட நினைக்காத.. நான் சொல்றதை கேட்டுட்டு எனக்கு அடங்கி இந்த ரூமுக்குள்ள தான் நீ இருக்கணும்.. சொன்னதெல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்", என்று கூறிவிட்டு அடுத்த நொடி அந்த அறையை விட்டு வெளியேறினான்.. கதவை அடைத்து விட்டு..!!

வெளியே கதவை பூட்டும் சப்தம் அவளுக்கு நன்றாக கேட்டது...

எதற்காக அவன் தன்னை இப்படி அடைத்து வைக்க வேண்டும்?? இப்படி சித்திரவதை செய்ய வேண்டும்??

விக்ரம் அப்படிப்பட்ட ஆள் கிடையாது.. கம்பீரமான தோற்றத்துடன் விளங்கும் தன்னம்பிக்கை மிகுந்த தைரியமான ஆள் அவன்..!!

ஆனால் ஒரு நாளும் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாது அடுத்தவருக்கு எந்த தீங்கும் நினைக்காது.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன்...

அப்படிப்பட்ட நேர்மையான நல்ல குணம் படைத்தவன் எதற்காக இப்படி வில்லன் போல நடந்து கொள்ள வேண்டும்?? ஒருவேளை அவன் ஏதேனும் கண்டுபிடித்து இருப்பானோ?? ஆனால் எதையும் நான் அவனுடைய கெடுதலுக்காக செய்யவில்லையே.. எல்லாம் நல்லதற்காக தானே செய்தேன்.. அவனுக்கு ஒரு நாளும் நான் கெடுதல் நினைத்ததே கிடையாதே.. கனவிலும் கூட!!

அப்படி இருக்க அவன் இத்தனை கோபம் கொள்வதற்கு காரணம் என்னவாக இருக்கும்?? என யோசித்து யோசித்து அவளுக்கு மண்டையே வெடித்து விடும் போல் ஆகி விட்டது....!!

இதற்கு முன் தன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒருமுறை படம் போல் ஓட்டி பார்த்தால் தன் மனக்கண் முன்னாடி..!!

அப்போது அவள் மனதில் இருந்த மகிழ்ச்சியையும்.. இப்போது அவள் மனதில் இருக்கும் குழப்பம் பயம் அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு மனம் சோர்ந்து போக.. அப்படியே கட்டிலில் சரிந்தாள்...

சிறிது நேரம் கழித்த பிறகு மெல்ல எழுந்தாள்.. ஒருமுறை அந்த அறையெங்கும் சுற்றிலும் நோட்டமிட்டாள்...

விசாலமான அந்த அறையில், ஒரு கட்டிலும்.. ஒரு ஓரமாக ஆளுயர கண்ணாடி கொண்ட ட்ரெஸ்ஸிங் டேபிளும் இருந்தது..

மறுபுறம், ஒரே ஒரு அறை இருந்தது.. அது குளியலறை போல...

நல்ல சுத்தமாக இருந்தது.. ஏதோ அப்போதுதான் சுத்தம் செய்து வைத்தது போல் காட்சியளித்தது....

குளிப்பதற்கு தேவையான பக்கெட்டும் மக்கும் இருக்க.. இன்னொரு புறம் சோப்பு பிரஷ் பேஸ்ட் என்று அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது ஒரு ஸ்டாண்டில்..

வெஸ்டர்ன் டாய்லெட் கொண்ட அட்டாச்டு பாத்ரூம் தான் அது...!!

மீண்டும் கட்டிலுக்கு வந்தவள் அருகில் இருந்த கபோர்டை திறந்து பார்த்தாள்...

பெரிதாக அதில் ஒன்றும் இல்லை.. பத்து செட் ஷர்ட்டும் பேண்ட்டும் இருந்தது... அவ்வளவு தான்...

அந்த அறையில் இருந்த ஜன்னல் கதவை திறந்து விட்டாள்.. வெளியே இருந்து வந்த சூரிய ஒளியால் அந்த அறையே பிரகாசம் அடைந்தது..

ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு வெளி உலகை வேடிக்கை பார்த்தாள்... சுற்றிலும் தெரிந்த வாழைத்தோட்டம் தென்னந்தோப்பு.. மாமரம் என்று அனைத்தும் கண்ணுக்கு பச்சை பசேல் என்று குளிர்ச்சியாக காட்சி அளித்தது !!

தன்னிலையை மறந்து.. ஏன்,தன்னையே மறந்து ஒரு நிமிடம் அந்த இயற்கையோடு ஒன்றி போய் அந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள் தேவா ..

அந்நேரம் வெளியில் இருந்து யாரோ மெல்ல கதவில் உள்ள பூட்டை திறப்பது போன்ற ஒலி அவளுக்கு கேட்டது...........!!

- தொடரும்...
 

Author: praba novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 20, 2025
Messages
37
Edho panni irukka intha deva aana vikram oda nalladhukkunnu solra misunderstanding ah irukkumo
Poga poga தெரிந்து விடும்.. மிக்க நன்றி 💐💐💐💐💐💐
 
Top