Member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 36
- Thread Author
- #1
ஒரு வாரம் கடந்திருக்க, ஹேமாவின் விபத்து பற்றிய தகவல் அறிக்கை சரபேஷ்வரனின் கைகளை எட்டியது.
விபத்து நடந்த விதத்தை நிரஞ்சன் அவனிடம் சொன்ன போது தோன்றாத ஒன்று, அவன் மனைவி அவ்னி சொல்லால் உந்தப் பட்டு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அனுகியிருந்தார், சரபேஷ்வரன்.
தற்செயல் என்று நினைத்த ஒன்று அப்படி அல்ல என்று அவர் பொட்டில் அடித்து சுட்டிக்கட்டப்பட்டிருந்தது அவர்கள் கொடுக்க அறிக்கையில்.
‘சுத்த கொலை முயற்சி
காரணம்: காமராஜ் - சத்யம் சில்க்ஸ் ஜெனரல் மேனேஜர்’
சினந்து சிவந்துவிட்டார், சரபேஷ்வரன்.
ஹேமா அவரின் நல்ல தோழி என்பதை தாண்டிய ஒரு அற்புதமான பெண்மணி.
தட்டிக்கொடுத்து, தடவிக்கொடுத்து, மிரட்டி; கோபமிட்டு வேலை வாங்கக் கூடிய ஆள். அதை தாண்டி, பலருக்கும் அவர் ஒரு நல்ல வழிகாட்டி!
அப்படிப்பட்டவரை மொத்தமாய் அழிக்க நினைப்பவனை எல்லாம் சும்மாவா விட்டுவிட முடியும்?!
ஹேமாவை கவனிக்க என்று மருத்துவ விடுப்பில் வந்திருந்த சைலேந்திரனிடம் இந்த செய்தியைப் பகிர்ந்த சரபேஷ்வரன்,
“கொல்லுற அளவுக்கு அந்தாள் போயிருக்கான்’னா கண்டிப்பா அவனை சும்மா விடக்கூடாது ஸார்”
“அந்தாளோட பேக் கிரவுண்ட் வேணுமே சரண். நீங்க இப்போ பாக்கற டிடெக்டிவ் டிடேய்ல்ஸ் தர முடியுமா?” என்க, அவரும் உடனே பகிர்ந்தவர் கையோடு இன்னொரு எண்ணையும் பகிர்ந்தார்.
அதில், ‘ஆல்பர்ட் மேக்கானிக்’ என்று பதிவாகியிருக்கவும், சைலேந்திரன் கேள்வியிட்டார்.
சரபேஷ்வரன், “எங்களோட அண்டர் கிரவுண்ட் வேலைக்கு யூஸ் பண்ணுற ஆள்” என்க, சைலேந்திரனுக்குப் புரிந்தது.
சைலேந்திரனிடம் ஒரு ஆழ்ந்த மௌனம். அது கலைந்த போது, “சரண் இனி நீங்க இதுல வராதீங்க. நா மூவ் பண்ணிக்கறேன்” என்ற சைலேந்திரனின் பேச்சில் அத்தனை அடர்த்தி.
அவரின் மறுக்க முடியாத பேச்சால் சரபேஷ்வரன் ஒதுங்கிக்கொள்ள, சைலேந்திரன் கையில் கைப்பாவையானான், காமராஜ்.
காமராஜை ஆட்டிப்படைத்துவிட்டார் சைலேந்திரன்.
கிஞ்சிற்றும் அவனால் அடுத்து என்ன வரும் என்பதை யோசிக்க முடியாது அடுத்தடுத்த நிகழ்வுகளை காமராஜிற்கே தெரியாது நடக்க வைத்த, அவனை கதறடித்தார், சைலேந்திரன்.
காமராஜ் அதுவரை செய்த, செய்யவிருந்த, அதனால் கெட்ட, கெட போகும் மக்களை அவனாளேயே சரி செய்ய ஆரம்பித்திருந்தார், சைலேந்திரன்.
எல்லாவற்றிற்கும் கத்தியும் ரத்தமும் தான் வழியில்லை.
புத்தியும் சித்தமும் (மனம்) போதும், எளிதாய் பலதை நடத்திக்கொள்ள.
இதோ நாட்கள் மெல்ல மெல்ல கடந்து ஊர்ந்திருக்க, குமரன் மட்டும் சத்யமில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.
நயன மனோகரியுடனான அவன் திருமணம் கூட வெகு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஒருமுறை திருபுவனம் சென்று வர எண்ணிக்கொண்டிருக்கிறான், சந்தனக்குமரன்.
அதை அவன் நயனிடம் பகிர, “நீங்க போறத நா தடுக்கல. ஆனா இப்போ வேண்டாங்க” என்றாள் மெல்லினமாய்.
குமரனிடம் சத்தமில்லை.
“நீங்க ஏ போக போறீங்கன்னு எனக்கு தெரியும். உங்க ஐயா அத்தன பேசின பின்ன நீங்க மட்டும் போறது எனக்கு சரியா படல குமரா. நம்ம கல்யாண முடிஞ்ச பின்ன தாராளமா நாம ரெண்டு பேருமே போகலாம். அதுக்கு முன்ன வேண்டாம்.
என் குமரன யாரும் இனி ஒரு சொல் என்னைய கைக்காட்டிச் சொல்லக் கூடாது. என்னத்தானே சொல்லுறாங்க? அதை நானே வந்து வாங்கிக்கறேன். நடுவுல நீங்க எதுக்கு? என் புருஷனாவே இருந்தாலும் உங்க மரியாதை போகுற மாதிரி யார் பேசினாலும், ஏன் உங்க அம்மாவோ ஐயாவோ, யாரா இருந்தாலும், நா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.
நீங்க என்ன வேணாலும் நெனச்சுக்கோங்க. ஆனா இப்போ நீங்க தஞ்சாவூர் போகக் கூடாது, உங்க நயனிக்கண்ணு மேல இது சத்யம்” என்றிருக்க, அவள் கடைசி வார்த்தையில் அவன் நெஞ்சம் உண்மைக்கும் விம்மித்தவித்திருந்தது.
••••

Last edited:
Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 08(ii)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.