நயனவாசினி - 08(i)

Member
Joined
Aug 20, 2025
Messages
36
த்தனை ஆழ்ந்த அமைதியை அசாதாரணமாய் போர்த்திக்கொண்டு குழல் விளக்குகளின் ஒளியை உமிழ்ந்தபடி இருந்தது கஜேந்திரனின் வீடு.

இறும்பு சோபா செட் சுவரோரமாய் போடப் பட்டிருக்க அதன் ஒற்றை இறுக்கையில் கஜேந்திரன் அமர்ந்திருந்தார்.

அவருக்கு நேர் எதிரில் மூவர் அமரும் இருக்கையில் கார்த்தியும் குமரனும்.

மணி இரவு ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஒருவரும் இன்னும் உணவுன்டிருக்கவில்லை. குமரன் இன்னும் நயனியைப் பார்த்திருக்கவில்லை.

மாத்திரையின் விளைவால் அவள் வெறும் வய்ரோடு உறங்கியிருக்க, மற்றவர்களுக்கு குமரனின் வரவும் அதிர்வு.

மாலை பாண்டி தகவல் கொடுத்த அடுத்த நிமிடம் கார்த்தி குமரனிடம் விரைந்தவன் செய்தியை கூறவே, அதுவரை அசைவில்லாது இருந்தவன் உச்சகட்ட பதற்றம் தோற்றிக்கொண்டு நயனிக்கு அழைத்தபடி அவளைப் பார்க்க கிளம்பினான்.

அந்த அழைப்பை ஏற்றது என்னவோ மஞ்சு தான்.

“தம்பி” என்று அழுகுரலில் அரம்பித்தவர் அவனை பேச விடாது மொத்தத்தையும் கொட்டி தீர்த்திருந்தார்.

நெஞ்சம் அதிர்ந்து துடித்தது குமரனுக்கு. அவன் சற்றும் எதிர்பாரா நிகழ்விது. அதுவும் கஜேந்திரனிடமிருந்து அவனை அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

“அத்த, நயனி எப்டி இருக்கா இப்போ? எங்க இருக்கீங்க எல்லாம்” என்க, அவர்கள் அப்போதுதான் ஹாஸ்பிடலில் இருந்தது வந்ததை பகிர்ந்தார்.

“இவ ஒடம்புல சத்து இல்லையாம். அதான் ஒரு பாட்டல் குளுகோஸ் ஏத்துவிட்டு அனுப்பியிருக்காங்க” என்க, குமரன் விரைவாக ஒரு ஆட்டோவை பிடித்து நயனியின் இல்லம் நோக்கி பயணித்திருந்தான்.

இடையில் கார்த்தியின் கேள்விகளுக்கும் அவன் பதில் கொடுக்க, காமராஜால் நயனிக்கு ஆபத்தில்லை என்பது தான் அந்த ஆண்கள் இருவருக்கும் அப்போதைய ஆசுவாசம்.

அவர்கள் வருவார்கள் என்று நினைக்காத மஞ்சு, கஜேந்திரனைத் தான் பயத்தோடு பார்த்து நின்றிருந்தார்.

வந்தவர்களை யாரும் ‘வா’ என்று கூட அழைக்காது, ஒரு தலையசைப்பை கொடுத்து அமர வைத்திருந்தனர்.

அப்போது ஆரம்பித்தது இந்த மௌன நாடகம்(!)

திரையை எடுத்திருந்தும் யாரும் இன்னும் அவர்களின் பேச்சை ஆரம்பிக்கவில்லை.

ஆனால் ஒன்று, நாடகத்தைப் போன்ற பேச்சோ நடிப்போ அங்கில்லை. நிஜ மனிதர்களின் உணர்வு கூட்டாய்; அன்பெனும் தூய நூலால் கட்டப்பட்டவர்களின் பொம்மலாட்டம் தான் இனி நடக்க இருந்தது.

குமரன் தான் அந்த மௌனத்தை, முதன்மை நாயகன் நான் தான் என்பதை உணர்ந்து கலைத்திருந்தான்.

கஜேந்திரனை நோக்கி, “என்னவா இருந்தாலும் நீங்க செய்தது தப்பு” என்றான் அழுத்தத்திலும் அழுத்தமாய்.

“உங்க பொண்ணாவே இருந்தாலும் எப்டி இந்தளவுக்கு அடிக்க உங்களுக்கு மனசு வந்துச்சு? அந்தளவுக்கு கல் நெஞ்சுக்காரரா நீங்க?” என்க, மஞ்சு அழுதுவிட்டார்.

குமரன் நயனியை பார்த்திருக்கவில்லை. செவி வழி செய்தியிலேயே கொதித்திருந்தவன் பார்த்திருந்தால் இத்தனை நிதான கோபம் வெளிப்பட்டிருக்குமா, என்ன?

ஆனால், குமரனின் பேச்சு பவதாரணிக்கு சுள்ளென்று ஆக, “மாமா” என்று சப்தமாய் குரலுயர்த்தியிருந்தாள் அவன் பேச்சை கண்டித்து.

குமரனைக் கடுமையாய் முறைத்தவண்ணம், “எங்க அப்பா கல் நெஞ்சக்காரரா இருந்தா உங்க காதலுக்கு அவர் சரின்னு சொல்லியே இருக்கமாட்டார்” என்றிருந்தால் கோபத்துடன்.

ஒரு நக்கலான சிரிப்பு உதிர்ந்தது கார்த்தியிடம். அதற்கு குமரன், “எங்க காதல் வரை ஏன் போற தாரணி. இத்தன வருஷம் வளர்த்த பிள்ளை மேல இருக்கற அன்பு கிட்ட போகலாமே” என்க, வாயடைத்து போய்விட்டாள் பவதாரணி.

குமரன் மட்டும் இருந்தாலாவது ஏதேனும் பேசியோ அல்ல தன் மனதை வெளிப்படுத்தி இருந்திருப்பார் கஜேந்திரன்.

கார்த்தியும் உடன் இருக்க, ஒன்றும் பேச முடியாது இறுகிப் போய் தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

மௌனமாய் அழும் மஞ்சுவை பார்க்க குமரனுக்கு சங்கடமாகிவிட்டது.

“அத்த, இவர் நயனிய அடிச்சதுனால தான் நா பேசுறேன். குறை சொல்லனும்னு எதுவும் இல்ல” என்றவன் அவரிடம் தன்னை புரியவைக்கும் நோக்குடன்.

மஞ்சு சரி என்பதாக தலையசைத்தவர், “அவ அதிர்ந்து கூட பேசமாட்டா தம்பி. ஆளு தான் வளர்ந்திருக்கா, மனசு பேச்சு எல்லாம் ரொம்ப இலகினது; பூஞ்ச மனசுக்காரி. இத்தன வருசத்துல இல்லாத வழக்கமா பிள்ளைய போட்டு இவர் இப்டி அடிப்பாருன்னு நானே நெனக்கல சாமி” என்றவர் வார்த்தை மொத்தமும் கஜேந்திரன் செய்ததை நினைத்தான ஆதங்கம் தான் விரவிக்கிடந்தது‌.

“அது, காலேல எங்க அம்மா எனக்கு பொண்ணு பார்த்திருக்கேன் சொல்லவும்…” என்றவன் அன்று நடந்தது மொத்தமும் சொல்லவும் மனதில் பாரமேறியது கஜேந்திரன் தம்பதிக்கு.

குமரன் சொல்லாமல் விட்ட அந்த ‘சாதி’ புள்ளையை கஜேந்திரனால் நன்றாக கணித்திருக்க முடிந்தது. ஏன் மட்சுவும் கூட, “நாங்க வேற ஆளுங்கனாலையா?” என்றுவிட்டார்.

குமரனின் கணத்த மௌனம் அவருக்கான விடையை விருந்தாக்கியது.

பெற்றவராய் மகளின் வாழ்க்கை குறித்து பயம் வந்தது மஞ்சுவிற்கு.

“நாங்க வேணா உங்க வீட்டுல பேசி பார்க்கட்டுங்கலா” என்றார் படபடப்பாக.

அவர் பேச்சில் இருந்த அபத்தம் அவருக்கேத் தெரியும். இருந்தாலும் மகளுக்காய் அதை அவர் கேட்டுவிட்டார்.

“ம்ஹ்ம், வேண்டாம்’த்த. எங்க ஐயா, அம்மா என்ன நெனப்பாங்க, என்ன செய்வாங்கன்னு எனக்கு ஒரு அனுமானமும் இல்ல. அதுவும் இல்லாம நா நயனி விஷயத்துல எதையும் சுலபமா எடுத்துங்க விரும்பல” என்று நிறுத்தியவனிடம் ஒரு நீண்ட மூச்சு வெளிப்பட்டது.

அவன் நினைத்த விஷயத்தை பகிரும் முன்னர், ‘மீனாட்சி’ என்று மனதில் அவனை ஆட்டுவிக்கும் பெண்ணரசியை வேண்டியவனாய்,

“நீங்களே ஒரு நல்ல நாள் பாருங்க’த்த. முடிச்சளவுக்கு இந்த மாசத்துக்குள்ள பாருங்க, நானும் நயனியும் கல்யாணம் பண்ணிக்க” என்க, அதை யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லை.

“தம்பி” என்று அப்போதுதான் வாய் திறந்தார், கஜேந்திரன்.

“மறுத்து எதுவும் பேசிறாதீங்க. என்னை பத்தி முழுசா உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச பின்ன தான் நா நயனியோட நல்லா பழக ஆரம்பிச்சேன். ஏன், நீங்க எங்க காதலுக்கு சம்மதம் சொன்ன பின்தான் நயனியும் என் கூட பேச ஆரம்பிச்சா. இப்போ அந்த காதல் மட்டும் தான் என் கையில் இருக்கு.

என் குடும்பம், சொத்து, பணம்னு‌ எதுவுமே என்கிட்ட இப்போ இல்லை. இல்ல ஒருவேளை அதெல்லாம் இருந்தா தான் நீங்க நயனிய எனக்கு கொடுப்பிங்களா?” என்றவன் வேகமாய் கேட்டுவிட, விக்கித்து நின்றிருந்தார், மஞ்சு.

கஜேந்திரன், “அப்படி இல்ல தம்பி. என்ன பேசுனாலும் பெத்தவங்க தான எல்லாம்?”

விரக்தியாய் ஒரு சிரிப்பு குமரனிடம்.

அவனுக்கா அவன் பெற்றவர்களைப் பற்றித் தெரியாது!?

தெரிந்ததனால் தானே அவனே அவன் திருமணத்திற்கான இப்போதைய சம்மதத்தையும் தீவிரத்தையும் காட்டிக்கொண்டிருப்பது.

“பெத்தவங்க தான், நா இல்லைங்கள. ஆனா அவங்களுக்கு நா செத்துப்போன தலை பிள்ளையாகிட்டேன்” என்ற சொல்ல, “டேய்” என்று அவன் தோளில் ஒரு அடியைப் போட்டான், கார்த்தி.

மஞ்சு, “என்ன தம்பி? அப்படியெல்லாம் பேசாதீங்க” லேசாய் குரலுயர்த்தி பேச,

முகத்தை தாழ்த்திக்கொண்டவன், “நா எங்க ஐயாவோட வார்த்தையைத் தான் சொன்னேன் அத்த. இதுக்கு மேலையும் உங்களுக்கு என்னோட சூழ்நிலைய புரிய வைக்கனும்னா, நா அவங்களுக்கு இனி வேண்டாமாம். என்னைய தூக்கி எறிஞ்சுட்டாங்க” என்க, அவன் குரலுடைந்துவிட்டது.

கஜேந்திரன், “மஞ்சு, நாளைக்கு காலேல நம்ம சாரதாம்பாள் கோவில் ஐயர்கிட்ட நல்ல நாள் குறிச்சிட்டு வா. அடுத்துடுத்து ஆக வேண்டியத பார்ப்போம்” என்றுவிட்டார்.

குமரனுக்கு அது போதும், அந்த வார்த்தை கொடுத்த இளக்கம் அவனை பெரியதாய் ஆசுவாசம் கொள்ள வைத்திருந்தது.

மேற்கொண்டு செய்ய வேண்டியதை நாளை பார்ப்போம் என்ற மஞ்சு, “மொத ரெண்டு பேரும் கையக் கழுவீட்டு வாங்க, சாப்டலாம். மதியமும் சாப்டிருக்க மாட்டீங்க, மணி என்னாச்சு?” என்றபடி வேக வேகமாய் தோசை , இட்லியை வைத்து மதியம் வைத்த மட்டன் குழம்பையும் சிக்கன் வறுவலையும் சூடு படுத்தியவர் இருவரையும் சாப்ட வைத்து தான் வழியனுப்பினார்.

நயனி வீட்டிலிருந்து அவர்கள் ஹாஸ்டல் வர அரைமணி ஆகியிருந்தது.

ஒரு நாள், அந்த ஒரு நாள் சந்தனக்குமரன் என்பவனுடைய வாழ்க்கையை எப்படி அவன் தலைவிதி மாற்றியிருக்கிறது என்பதை நினைக்க மலைப்பாய் இருந்தது!

தூரத்தித் தூரத்தில் அடித்து, அவனைப் பணிய வைத்து, துடிக்க வைத்து, கதறடித்து, சீனமூட்டி பெருங்காதலோடும் பேரன்பாலும் கடைசியில் அவனை நிறைத்து, நிறைவடைந்திருந்தது அன்றைய நாள்.

இருந்தாலும், காதலும் அன்பும் ரத்த பிணைப்புகளோடு இல்லாததை நினைத்தவன் மனது தவிக்கத் தான் செய்தது.

இருப்பதை விடுத்து பறந்து போனதைப் பற்றித் தானே இந்த பொல்லா மனது நினைத்தடித்துக்கொள்ளும்!

உண்ட உணவை செரிக்க வைக்க கார்த்தி ஹாஸ்டல் மாடியில் நடையில் ஊர்ந்தபடி இருக்க, குமரனின் எண்ணங்கள் பலவாறாக சிதறிப்போய் கிடந்தது.

அவனருகில் வந்த கார்த்தி, “டேய் கட்டெறும்பு, நா ஒன்னு கேட்டா கோவிக்க மாட்டியே?” என்று பீடிகையுடனே ஆரம்பித்தான்.

குமரன் புருவஞ்சுருங்க அவனைப் பார்க்கவும், “இல்ல, மனசுல பட்டுச்சு அதான் கேக்கேன். கொஞச் நாள் போகட்டுமே. ஏன் அதுக்குள்ள கல்யாணம் வர?” என்க, ஒரு பெருமூச்சு குமரனிடம்.

கீழே தரையில் அமர்ந்தவன், “இல்ல மாப்ள, எனக்கு மனசுக்க கெடந்து என்னவோ பெசையுது. தப்பா எதுவும் நடக்கப் போகுதுன்னு முன்ன இருந்தே தோனிகிட்டே இருந்துச்சு. பாத்தா இப்போ நடக்கற எல்லாம் எனக்கு எதிரா தான இருக்கு” எனறவன் முகம் அத்தனை கசங்கிப்போய் இருந்தது.

விழியோரம் சட்டென்று கசிந்துவிட, “ம்ப்ச்” என்றவன் அழுந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு நட்சத்திரங்கள் இல்லா வானை வெறித்தான்.

கார்த்தி, “விடுடா, விடுடா. எல்லாம் சரியாகும்” அவன் தோள் தட்ட, குமரனின் தொண்டைக் குழி ஏறியிறங்கியது.

இனி, அவன் மீனாட்சி காட்டும் வழியில் தான் அவன் வாழ்க்கை பயணம் என்பது மட்டும் அறுதியிட்டுக் கூறலாம்.

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 08(i)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
96

🥺🥺🥺🥺🥺
 
Top