New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
கவிதை 2
பார்த்தீபன் மற்றும் சுஜிதாவின் துயரை தள்ளி நின்று ஆசைத் தீர பார்த்து ரசித்த ராகவன் அடுத்து சென்றது என்னவோ ஸ்ரீயின் வீட்டிற்கு தான்.
அங்கும் அவன் எதிர்பார்த்த போல தான் நடந்தது.
வீட்டு வாசலில் ஸ்ரீ கண்ணீர் ததும்ப ஒரு கையால் தனது இடது பக்க கன்னத்தைப் பொத்திக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவள் முன் அவளது தந்தை அவளை ஏகத்துக்கும் திட்டி இன்னுமே அவளை அடிக்க பாய அவளது தாய் தான் குறுக்கே விழுந்து அவளுக்கு விழ வேண்டிய அடிகளைத் தான் வாங்கிக் கொண்டார். அந்த தெருக்காரர்கள் எல்லாம் சுற்றி நின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ப்பா... இப்போ எதுக்குப்பா என்னைய போட்டு அடிக்குறீங்க அதுவும் எல்லார் முன்னாடியும்... அசிங்கமா இருக்குப்பா" என்றவள் ஏங்கிக் கொண்டே சொல்ல...
"அந்த அசிங்கம் ப்ரண்டுக்கு கல்யாணம்னு வீட்டுல பொய் சொல்லிட்டு கண்டவனோட கல்யாணத்தை முடிச்சிட்டு எதுவுமே தெரியாத குழந்தை போல என்கிட்ட நாடகம் ஆடும் போது வரலையோ" என்றார் அனலாக.
"எனக்கு கல்யாணமா? என்னப்பா சொல்ற? இன்னைக்கு சுஜிக்கும் பார்த்தீ அண்ணாக்கும் தானே கல்யாணம்... இங்க நாங்க செல்பி எல்லாம் எடுத்தோம்" என்றவள் தனது போனை அவரிடம் காட்ட முயல.
"சென்னியைப் பேத்துருவேன் நாயே... மறுபடி மறுபடி பொய் சொன்னீன்னா" என்றவர் கோபமாக சொல்ல.
"நான் எங்க பொய் சொல்றேன்... இரு வேணும்னா நான் இவ்வளவு நேரம் எங்க இருந்தேன்னு பார்த்தீ அண்ணாக்கு கால் பண்ணி தாரேன் நீங்களே கேளுங்க" என்றவள் சொல்ல.
அவளை ஓங்கி அறைந்தவர் "படவா... சொல்லிக்கிட்டேன் இருக்கேன். பொய் பேசுற?... நான் எதுக்கு அவன்கிட்ட கேட்கனும். அது தான் உன் கழுத்துல கிடக்குற தாலி சொல்லுதே எல்லாத்தையும்" என்றவர் அவள் கழுத்தில் கிடந்த தாலியைக் கண்களால் காட்டியவர் "சொல்லு எவன் அது?" என்று கேட்க.
தன் கழுத்தில் கிடந்த தாலியையும் தன் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தவள் "ப்பா... அது..." என்றவள் பேச வார்த்தைகள் இல்லாத அதிர்ந்து போய் அவரைப் பார்க்க.
"சொல்லு எவன் உன் கழுத்துல தாலி கட்டுனது. சொல்றியா இல்லையா?" என்றவர் அவள் கழுத்தைப் பிடித்து நெறிக்க...
"எனக்கு.. தெரியாது.. வலிக்குதுப்பா... விடுப்பா" என்றவள் பேச முடியாது திணற...
"ச்சீ நாயே... இவ்வளவு சொல்லியும் இன்னும் நாடகம் தானே ஆடுற... உன்னை என்னப் பண்ணா தகும். என் கண்ணுலையே முழிக்காத இனி" என்றவர் அவள் பேசும் எந்த வார்த்தையும் காதுக் கொடுத்துக் கேட்காது அவளை வெளியேத் தள்ளி மகளை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியிடம் "உனக்கு மக வேணுமா புருஷன் வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ" என்க.
அவரோ ஓர் நொடி கண் மூடித் திறந்தவர் "என்கிட்டையாவது உண்மையை சொல்லேன்" என்று இறைஞ்சுதலாகக் கேட்க.
"ம்மா... நீயாவது நம்பேன்... இது எப்படி என் கழுத்துக்கு வந்துச்சுனு சத்தியமா தெரியாதும்மா... யார் போட்டானு கூட தெரியாதும்மா" என்று சொல்ல.
"ஒருத்தன் உன் கழுத்துல தாலிக் கட்டுறது கூட தெரியாத அளவுக்கு என்ன பண்ணிட்டு இருந்த ஸ்ரீ... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு நீயே சொல்லேன்" என்றார் அவர் கண்ணீர் குரலில்.
"இன்னுமா இந்த நாடகக்காரியை நம்புற?" என்றவளது தந்தை நக்கலாகக் கேட்க.
இல்லையென தலையசைத்தவர் "இனி உனக்கு அப்பாவும் கிடையாது அம்மாவும் கிடையாது. அது தான் உனக்கு தேவையான வாழ்க்கையை நீயே அமைச்சிக்கிட்டியே... இனி உனக்கு எங்க தேவையும் இருக்காது" என்றவர் கதவை அடித்து சாற்ற மொத்தமாக உடைந்தே போனாள்.
தன் கழுத்தில் கிடந்த தாலியை ஓர் பார்வை பார்த்தவள் தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
"இந்த பொண்ணுக்கு இருக்க திண்ணக்கத்தை பாரேன்... திருட்டு கல்யாணமும் பண்ணிட்டு தாலியையும் நல்ல பவுசா முன்னாடி தூக்கிப் போட்டுக் கிட்டு எதுவுமே தெரியாது போல நடிக்குறதை" என்று ஒருவர் சொல்ல...
"யாருக்கு தெரியும் ஊருக்கு தெரியாம கல்யாணம் மட்டும் தான் நடந்துச்சா இல்லை குடுத்தனமும் நடந்துச்சானு" என்றார் ஒருவர்.
"இந்த வாயாடியை எந்த இளிச்சவாயன் கட்டுனானோ... அவன் பாடு இனி திண்டாட்டம் தான்" என்றாள் இன்னொரு பெண் நக்கலாக.
"க்கும் அவ தான் தாலி எப்படி கழுத்துக்கு வந்துச்சுனே தெரியலைனு நடிச்சிட்டுல்ல இருக்கா. இதுல தாலி கட்டுன இளிச்சவாயனை எங்க கொண்டு தேட" என்று ஒரு பெண் உதட்டைக் கோண.
"பண்ணுறதையும் பண்ணிட்டு அமுக்கினியாட்டம் நிக்குறதைப் பாரேன்... இதே என் புள்ளையா இருந்திருந்தா குடும்பத்தோட நாண்டுகிட்டு நின்னுருப்போம். நாங்கலாம் கௌரவம் பாக்குற ஆட்கள். இவங்களைப் போலவா எங்கேடும் கெட்டுப் போனு அவங்க பாட்ட பார்க்க போயாச்சி, வளர்ப்பு அப்படி நம்ப ஒன்னும் பண்ண முடியாது" என்றாள் இன்னொருத்தி.
அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீக்கு கோபமும் அழுகையும் சேர்ந்தே வந்தது.
என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த தாலி கழுத்தில் கட்டியது யார்? அடுத்து என்ன செய்வது? எங்கே போவது ஒன்றும் விளங்கவில்லை. பார்த்தீபனிடம் உதவிக் கேட்கலாமா என்று ஓர் நொடி யோசித்தவள் அந்த யோசனையை கை விட்டாள்.
ஏற்கனவே அவன் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. இதில் இப்பொழுது தான் திருமணமும் ஆகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவனை தொந்தரவு செய்வது அவ்வளவு நன்றாகவும் இருக்காது என்று நினைத்தவள் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்.
'சரி எதுக்கும் வேற ப்ரண்ட்ஸ்கிட்ட கெல்ப் கேட்டு பார்க்கலாமா?' என்று யோசித்தவள் தனது மொபைலில் யாருக்கு அழைக்க என்று தேட அவசரத்துக்கு யாருக்கு அழைக்க என்று கூட தெரியாது தடுமாறித் தான் போனாள்.
சட்டென ஏதோ யோசனை வந்தவளாக மீண்டும் சுஜிதா பார்தீபன் திருமணம் நடந்த மண்டபம் நோக்கி விரைந்தாள்.
கையில் நூறு ரூபாய் தான் காசு இருந்தது. மாத சம்பளம் மொத்தமும் வீட்டிற்கு கொடுத்து விட்டு தினமும் பஸ் செலவுக்கு மட்டும் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொள்வாள் வீட்டில். அதற்கு அதிகம் அவளது தந்தையும் கொடுத்ததில்லை. கேட்டால் "உனக்கு காசை செலவு பண்ண தெரியாது வீண் பண்ணிடுவ" என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவார். இதில் வரன் தேடுவதாக சொல்லி போன மாதமே வேலையையும் விட வைத்து விட்டார் அவளது தந்தை.
இன்று கையில் வெறும் நூறு ரூபாயை வைத்துக் கொண்டு வேலையும் இல்லை தங்க இடமும் இல்லை. உதவி கேட்க நாதியும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக மண்டபம் நோக்கி விரைந்தாள்.
அவளது பின்னால் சற்று இடைவெளி விட்டு அவனும் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தான்.
ஸ்ரீயின் அழுகையும் கண்ணீரும் தவிப்பும் அவனிற்கு பார்க்க அத்தனை இன்பமாக இருந்தது. அவளது அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்று பார்க்க ரொம்பவே ஆர்வமாக இருந்தது அவனிற்கு.
ஸ்ரீயோ மண்டபத்தில் தனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க. கூட்டம் மொத்தமும் கலைந்து இப்பொழுது மண்டபத்தை நாலு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அங்கிருந்த ஒரு பெண்ணிடம் "அம்மா... இந்த மண்டபத்தோட ஓனரை இப்போ பார்க்க முடியுமா? எங்க இருப்பாருனு தெரியுமா? ரொம்ப அவசரம் ஒரு முக்கியமான விஷயமா அவர்கிட்ட பேசனும்" என்று கேட்க.
"கொஞ்ச முன்னாடி வந்துருக்க கூடாதா இப்போ தான் போனாரு... இனி அவரு வீட்டுக்கு எல்லாம் போய்ட்டு எப்படியும் ஆறு மணி ஆகிடும்மா" என்றார் அவர்.
"ஆறு மணியா?" என்று தயங்கியவள் "அவர் வீடு தெரியுமா?" என்று கேட்க.
"இல்லையேம்மா" என்றார் அவர். "இங்க ஆபிஸ்ல வேற யாரும் இருக்காங்களா?" என்றவள் கேட்க. அதற்கும் இல்லையென்ற பதில் தான். மற்ற மூவரிடம் கேட்க. அவர்களிடமும் அதே பதில் தான். சோர்ந்து போனவளாக மண்டப வாசலில் அதன் ஓனருக்காக காத்திருந்தாள் அவள்.
அவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள் என்று அறியாதவனா அவன். அவளை ஒரு கேலி சிரிப்புடன் கடந்து சென்றான். அடுத்த அவள் எங்கு வருவாள் என்று அவனிற்கு தான் தெரியுமே.
அந்த பெண்மணி சொன்னது போல மாலை ஆறு மணி போல அந்த மண்டபத்தின் ஓனர் வர...
அவரிடம் நடந்ததை சுருக்கமாக சொன்னவள் "ப்ளீஸ்ங்க மணமேடை புட்டேஜ் மட்டும் கொஞ்ச காட்ட முடியுமா... என் வாழ்க்கையே இதுல தான் இருக்கு" என்றவள் சொல்ல.
"நீ சொல்றது எல்லாம் நம்புற மாதிரியாம்மா இருக்கு. ஒருத்தன் உன் கழுத்துல தாலி கட்டுற வரை என்னம்மா பண்ணிட்டு இருந்த?" என்றவர் கேட்க.
"அய்யோ சார்... ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க" என்றவள் இறைஞ்சுதலாக கேட்க.
என்ன நினைத்தாரோ "சரிம்மா இரு உனக்கு போட்டு காட்டுறேன்" என்றவர் சிசிடிவி காட்சிகளை ஓட விட. அவள் கண்கள் அதை விட்டு நகரவில்லை. அவளது கேலி கிண்டல் விளையாட்டுத்தனம் அத்தனையும் இந்த இடைபட்ட நேரத்தில் எங்கு சென்றது தெரியவில்லை...
மனம் முழுவதும் அடுத்து அடுத்து என்று தான் ஓடிக் கொண்டிருந்தது. எப்படியாவது தன் தாய் தந்தையிடம் தன்னை நிரூபித்து விட வேண்டும் என்று அவள் மனம் அடித்துக் கொண்டது.
அந்த மண்டபத்தின் ஓனரோ தலையை சொறிந்த படி "அய்யோ சாரிம்மா... மணவறை டெக்கரேஷன்ல புட்டேஜ் எல்லாம் தெளிவா தெரியலை... வியூ கிடைக்கலை" என்றவர் சொல்ல...
அவளது மொத்த நம்பிக்கையும் உடைந்து போனது.
"சார் கொஞ்சம் இன்னொரு தரம் செக் பண்ணுங்களேன்" என்றவள் கண்ணீருடன் இறைஞ்சுதலாக கேட்க.
"என்னம்மா நான் வேணும்னு காட்டாத போல பேசுற... நீயே பாரேன்... இதுல உனக்கு எதாவது தெரியுதானு" என்றவர் திரையை அவள் புறம் திருப்ப... எதுவும் தெளிவாக தெரியவில்லை. பூக்கள் மறைத்திருந்தது.
ஒரு பெருமூச்சுடன் "எனக்கு கெல்ப் பண்ணனும்னு நினைச்சதுக்கு ரொம்ப நன்றி... நான் வரேன் சார்" என்றவள் சோர்ந்த நடையுடன் அங்கிருந்து கிளம்பினாள்.
எதுவுமே அவளால் யோசிக்க முடியவில்லை. அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டவள் மனமோ நிலையில்லாது சுழன்றது.
'ஏன் மீண்டும் தன் தந்தையிடம் பேசக் கூடாது' என்று நினைத்தவள் வேகமாக வீட்டிற்கு நடந்தாள். அவள் கண்ணீர் அவளை மற்றவர்களுக்கு காட்சி பொருளாக மாற்றி விடக் கூடாது என்று மழையும் தான் நினைத்தது போல... கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வீட்டு கதவை தட்ட... வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லை. வாசலில் லைட் கூட போடமால் இருக்க.
பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்க. "ஹான் நீ பண்ண காரியத்தால ஊர்ல தலை காட்ட முடியலைனு அப்போவே அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போயாச்சி... எங்க போறாங்கனு கூட சொல்லலை" என்றார் அவர்.
'அந்த அளவுக்கா நம்பிக்கை அற்றவள் ஆகிப்போனேன்' என்று நினைக்கும் போதே மனம் ஏதோ செய்தது.
ஒரு பெருமூச்சுடன் தனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தன் நிலை சொல்லி அழைக்க "அய்யோ என் அப்பா எதாவது சொல்லுவாங்கடி" இல்லையா "என் புருஷனோ மாமியாரோ ஒத்துக்க மாட்டாங்கடி" என்ற ஒற்றை வரி பதில் வந்தது.
ஆண் நண்பர்களும் அவளுக்கு பெரிதாக கிடையாது.
என்ன செய்வது என்று தெரியாது கால் போன போக்கில் அவள் நடக்க அவளது நடையை தடை செய்தது அந்த விலை உயர்ந்த கார்.... அவளுக்காக கார் கதவு தானாக திறக்கப்பட்டது.
புருவம் சுருக்கியவள் அந்த காரின் உள்ளே எட்டி பார்க்க அங்கே கால் மேல் கால் போட்டபடி அவளைப் பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தான் அவன் ராகவன்... ஆர்கே குரூப் ஆப் கம்பெனியின் ஒற்றை வாரிசு. சுண்டு விரலால் தொழில் சாம்ராஜ்யத்தை ஆட்டிப் படைக்கும் ஆசகாய சூரன்... இனி அவளை ஆட்டுவிக்க காத்திருந்தான்.

Author: காதல் கவிதை
Article Title: கவிதை 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.