New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
நயன மனோகரியின் குடும்பம் சமூகத்தில் பின்தங்கிய வர்க்கத்தினர்.
சிறு வயதிலேயே பிழைப்பிற்காக சேலத்தில் இருந்து கோயம்புத்தூர் வந்திருந்தார் அவளின் தந்தை கஜேந்திரன்.
கிடைத்த வேலையை செய்து, கொஞ்சம் கையூண்டி நின்ற போது நயனியோடு அவளின் தங்கை, பவதாரிணியும் வளர துவங்கியிருந்தாள்.
வயிற்றை இறுக்கும் வறுமை இல்லை என்றாலும் சற்று கஷ்ட ஜீவனம் தான்.
வீட்டோடு இட்லி தோசை மாவு அரைத்து கொடுக்கும் நயனியின் அம்மா மஞ்சுவின் கிடுக்குப் பிடியின் பயனாக நயனி பெரிய மனிதி ஆன போது சொந்தமாய் லோடு ஆட்டோ வாங்கி, காய்கறி மார்கெட் சரக்கு ஏற்றிக்கொள்ளும் வியாபாரத்தைப் பெற்றுக்கொண்டார், கஜேந்திரன்.
இதோ, வருடம் செல்ல சொந்தமாய் ஒரு வீடு என்று சொல்லிக்கொள்ளும் படி ஒரு நடுதர அளவில் வீடும் இரண்டு லோடு ஆட்டோவும் சொந்தமாய் இருக்கிறது.
படிப்பின் பிடிப்பை விடாது அரசு கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற நயனி, கிடைக்கும் வேலை செய்வாளன்றி சுயமாய் எதையும் செய்யும் முனைப்பில்லை.
மஞ்சுவின், “நா மாவு வித்த காசுல புள்ளைகளுக்கு நகை சேர்த்து வைக்கிறேன். உங்க பணத்தை கட்டு செட்டா கொண்டு போய் பேங்க் லோனை அடைங்க. இன்னும் எத்தனை நாளுக்கு தான் கவரிங்க போட்டுகிட்டு புள்ளைங்க அலையும்” என்று கடியின் வேலை தான் கஜேந்திரனை இன்னும் ஓட வைத்துக்கொண்டிருக்கிறது.
கடுமையின் கனிவை கைமேல் பெற்றுக்கொண்ட கஜேந்திரன், மகள்களிடம் எப்போதும் இளகின பாகு தான்.
மகள்கள் மீது அத்தனை பாசமிருந்தாலும் கேட்டவுடன் எதுவும் கிடைக்காது.
“ஒரு பொருள் உனக்கு வேணும்னுட்டா ஏன் எதுக்கு, அத வெச்சு நீ என்ன செய்ய போற, செஞ்சு முடிச்ச பின்ன அந்த பொருளோட அவசியம் என்னாகும்னு நைனாகிட்ட சொன்னியினா நைனா வாங்கி தருவேன்” என்று சின்னது முதல் மகள்களின் தேவையை, அவர்களின் பிரித்தறியும் தன்மையை பக்குவமாய் வளர்த்து வைத்திருந்தார் கஜேந்திரன்.
அதை தொட்டு, சகோதரிகள் இருவரிடத்திலும் நல்ல பக்குவ எண்ணம் உதயமாகி தேர்ந்து தங்கள் தேவைகளை மேற்கொள்வர்.
ஆனால், நயனி தகப்பனிடம் தயங்கி தயங்கிக் உறுதியாய் கேட்ட ஒன்று, சந்தனக்குமரன்!
போராட வேண்டும், அனுமதி கிடைப்பது கடினம் என்று பலவாறு அவள் போட்டு வைத்திருந்த கணக்கை எல்லாம் சுக்கலாக்கி சம்மதம் சொல்லியிருந்தார், கஜேந்திரன்.
அப்படிபட்ட மனிதர் தான் இப்போது கொதித்துப் போய் அமர்ந்திருந்தார்.
நடந்ததை நயனி சொல்லச் சொல்ல, “தம்பி மேல கை வைச்ச உடனேவே நீ நைனாவுக்கு கூப்டா என்ன கண்ணு?” என்று அத்தனை ஆதங்க கோபம்.
“அந்தாளு என் கைய கெட்டியா பிடிச்சுட்டு நின்னுட்டான் நைனா. அதுவும் அவருக்கு (குமரன்) கோபம் வந்து கத்தப்போய், ரொம்ப அடிச்சுட்டாங்க” என்றாள் அழுகையுடன்.
அவனுக்காய் அவள் சிந்தும் கண்ணீர். அதையெல்லாம் பார்க்க சகியாத கோபத்துடன் அவளைப் பெற்றவர் இறுகிப் போயிருந்தார்.
“அவர (குமரன்) ரொம்ப தப்பா வேற பேசிட்டான் நைனா. நேத்து நடந்ததை சொல்லப் போயி, அந்த நாயோட கூட்டு சேர்ந்துதான் அந்தாள் (காமராஜ்) இவர போட்டு அடிச்சிருக்கான்” உதடுகள் துடிக்க கோபம் ஏறியிருந்தது நயனியின் கண்களில்.
கேட்ட வரை போதும் என்று நினைத்தாரோ, “கெளம்பு கண்ணு. தம்பிய போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்தலாம்” என்றவர் வேஷ்டியை மடித்துக்கட்டி அவரின் தோஸ்தை இயக்கினார்.
நேரம் மாலை ஐந்தைத் தாண்டியிருக்க, காலையில் உண்ட பன்னும் டீயோடு படுத்தவன் தான் குமரன்.
தூங்கவில்லை. ஆனால், அவனை போட்டரிக்கும் கொதிப்பிற்கான தீணியினை எப்படி அடையலாம் என்று மௌன யூகத்தை வகுத்துக்கொண்டிருந்தான்.
கார்த்தி, “ஒரு மணிக்கே குள்ளன் எஸ்ஸாகிட்டானாம். பரதேசி, குப்ப லாரியில தான் அடிப்பட்டு சாகும்” என்று திட்டியபடி குமரன் அருகில் வந்தமர, நயனியிடமிருந்து அழைப்பு.
விஷயத்தை அவள் சொல்லவும், எழுந்தமர்ந்தவன் முகம் கழுவி, நன்றாக இருக்கும் சண்டையை போட்டுக்கொண்டு கார்த்தியோடு கிளம்பினான்.
ஹாஸ்டல் பக்கத்தில் இருந்த ஒரு அரோமாவில் சந்தித்துகொண்டனர்.
காலை பார்த்ததைவிட இப்போது முகமும் கையும் நல்ல வீக்கத்துடன் காலைத் தாங்கித்தான் நடந்து வந்திருந்தான், குமரன்.
ஆதங்கம் எல்லாம் போய் மெல்ல அதிர்ந்த கஜேந்திரன், “என்ன தம்பி” என்று குமரனிடம் ஓடியிருந்தார்.
அவருக்கு மனது அடித்துக்கொண்டு ஒப்பவே இல்லை. பதறி பறிதவித்து போய்விட்டார் மனிதர்.
பத்து மாதங்கள் முன்பு, “நானும் நயனியும் விரும்பறோம். ஊருல கடை வெச்சு நடத்தறது தான் என்னோட ஆசை. உடம்பு சுத்தமா இருந்தா தான் தொழில் தங்கும். அதைவிட என்னோட பேச்சும் உழைப்பும் சரிப்படும்னு நம்புறவன்.
வீட்டுல விவசாய குடும்பம் தான். ஐயாவும் தம்பியும் பார்த்துக்கறாங்க. அம்மா, சின்னதா பூந்தோட்டத்தோட பூக்கடை வெச்சிருக்காங்க. இவ்வளவுதான் நாங்க. என்ன பத்தி கேட்டு தெரிஞ்சுக்கனும்னா யாரவேணாலும் நீங்க கேட்டு தெளிவு படுத்திக்கலாம்” என்று நேருக்கு நேர் தாட்சண்யமாய் நிமிர்வுடன் சொன்னவனோடு இப்போது இருப்பவனைப் பொருத்திப் பார்க்கவே முடியாது உதைத்து எடுத்திருந்தனர்.
கஜேந்திரன், “எந்த எலவெடுத்தவன் இப்டி போட்டு அடிச்சிருக்கான். எதுக்கு ஒத்த அடி அடிக்காம விட்டு வந்திருக்கீங்க” என்று இருவரிடமும் சண்டைக்கு நின்றார்.
குமரன், “இல்ல மாமா, யோசிக்க முன்னவே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. என்ன செய்ய? நயனி வேற இருக்கவும்” என்றவன் அவளை பார்க்க,
உடைவின் விளிம்பில் இருந்தால் பெண்.
முடியவில்லை அவளால். அவனை அந்த கோலத்தில், காமராஜ் வீசிய வார்த்தை அமிலங்களின் தகிப்பு எல்லாம் சேர்ந்து அவளை சோர்வடைய வைத்துவிட்டது.
“நைனா, நீங்க பேசுங்க, நா பக்கத்துல போயிட்டு வரேன்” என்றவள் குமரன் கூப்பிடக் கூப்பிட வெளியேறிவிட்டாள்.
“என்ன பண்ணலாம்னு இருக்கீங்க தம்பி” கஜேந்திரன் பேச்சைத் துவங்க,
“வேலைப் பத்தி கேட்கறீங்களா மாமா?” என்றான் புருவ சுழிப்புடன்.
கார்த்தி, “ம்ஹூம், அந்த குள்ளன என்ன செய்யறதுன்னு கேட்கறார். சரிங்களா?” என்று நாடியைப் பிடித்தான்.
குமரன், “அந்தாளோட எனக்கு ஒரு முடிக்காத கணக்கு இருக்கு. கை வைக்க ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா இப்போ வெச்சா அது தப்பாகிடும். என் மேல தப்பு இல்லைன்னு சொன்னாலும், அத்தனை பேர் வந்து நிப்பாங்க. இப்போ அதெல்லாம் தேவையில்லைன்னு நெனக்கறேன்” என்றான் மிகத் தெளிவாக.
அவன் யோசனையின் அளவு கொடுத்த பதில். இருந்தாலும், கோபத்திற்கான விடை இன்னும் அவன் வகுத்து முடித்திருக்கவில்லை.
“சூட்டோட சூடா எதுவானாலும் பண்ணணும்டா கட்டெறும்பு” ன்று கார்த்தி மெல்ல அவனை நெம்ப,
“என்ன முன் விரோதமா இருந்தாலும் பொம்பளைங்கள வெச்சு இழுக்கறவனெல்லாம் தரங்கெட்ட ***” என்று கஜேந்திரன் பொங்க,
“இல்ல மாமா, நீங்க அமைதியா இருங்க. நயனிக்கு இதுனால எதுவும் வராது. அந்த நாய நா கவனிச்சுக்கறேன். இந்தாள்.. ம்ம்.. விடுங்க, அடுத்தது என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம்” என்றவன் அமைதியாய் கூற, கார்த்திக்கு அவன் பேச்சிலும் போக்கிலும் கோபம்.
கஜேந்திரனும் கார்த்தியும் மாறி மாறி வழக்காட, குமரனின் பிடி இலகுவாவதாக இல்லை.
அவன் கணித்து போட்டு வைத்த கணக்கின் புரிதல் அவனை நிதானப் படுத்தியிருந்தது.
பொறுமையாய், “நேரம் வரட்டும் மாமா, மொத்தமா செஞ்சு விட்டுடலாம். அந்தாளும் ரொம்ப துள்ளுறான் வேற, ஒரு ஆட்டம் கட்டங்கட்டி ஆடினாத்தான் அடங்கி ஒடுங்குவான்” என்க, கஜேந்திரனும் அதை ஆமோதித்தார்.
கார்த்தி, “நீங்க மட்டும் தனியா போவாதீங்க. எங்க எப்போன்னு எல்லாம் தெளிவா தான் முடிவு பண்ணணும். அந்த குள்ளனுக்கு அரசியல் அதிகாரத்தை விட காக்கிங்களோட உறவு அதிகம். பாத்து, பதமா தான் எறங்கனும்” என்றான் டீயை குடித்தபடி.
நயனி வர, அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
கோவிலுக்கு சென்று வந்திருப்பாள் போல, வேகவேகமாக குமரனின் நெற்றியில் விபூதி குங்குமத்தை பூசிய கையுடன், “பெருமாளோட துளசி. நைட் தூங்கும் போது ரெண்டு கிள்ளி வாயில போட்டுட்டு படுங்க” என்றவள் முகம் அத்தனை கசங்கியிருந்தது.
அவளை பார்க்காது, “ம்ப்ச்.. ரெண்டு நாள்ல சரியாகிடும். நீ மூஞ்ச தொங்க போடாம கெளம்பு” என்றவன்,
“எப்போ வேணா கூப்டு, நயனி. யோசிக்காத” என்றபடி அவள் கையை அழுத்திக்கொடுத்து விடைபெற்றான்.
அன்றைய இரவு என்னவோ தூங்கா இரவாகியிருந்தது நயன மனோகரிக்கு.
ஏதேதோ யோசனைகள். இனி அடுத்தது என்ன செய்ய என்று தெரியா நிலை.
வேலைக்கு அவள் செல்ல வேண்டிய கட்டாயமில்லை தான். இருந்தாலும் அவளுக்கு பணத்தேவை இருந்தது.
சேமிப்பிற்காக ஓடிக்கொண்டிருக்கிறாள்.
இனி சத்யமில் வேலை சாத்தியமா என்று தெரியாது. பொருத்திருந்தது பார்க்கவும் இருப்பில்லை. குமரனோ கஜேந்திரனோ என்ன சொல்லுவார்கள் என்று கணிக்க முடியவில்லை.
அதையெல்லாம் தாண்டிய இன்றைய குமரனின் நிலை கண்முன் வந்து நின்று பயமுறுத்தியது.
“சாமி, என் குமரனை நல்லா பாத்துக்க. ஆளு பாக்க தான் தோரனையா இருப்பாரு, பூஞ்ச உடம்புக்காரரு. அந்த கட்டேல போறவனை ஏதாவது செஞ்சு விடு” என்ற வேண்டுதலுடன் அவள் உறக்கும் போது நேரம் மூன்றரை.
இங்கு மருந்து உட்கொண்டிருந்ததால் நன்றாக தூங்கியிருந்தான், சந்தனக் குமரன்.
இரவு அவனை குசலம் விசாரிக்கவென வந்த சக ஊழியர்களிடம் பேசிப் பேசியே தூக்கத்தைப் பறிகொடுத்திருந்தான், கார்த்தி.
அதிகாலையில் விடாது குமரனின் கைப்பேசி அழைக்க, அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
ஒரு கட்டத்தில் கடுப்பான கார்த்தி, “இன்னிக்கு நீ செதரு தேங்கா தாண்டீ” என்று கத்திக்கொண்டு குமரனின் கைப்பேசியை எடுக்க, ‘அம்மா’ என்ற பெயர் தாங்கிய அழைப்பு.
மண்டைக்கு ஏறிய கோபம் துளியூண்டு குறையவும், “ம்மா, சொல்லுங்க ம்மா, குமரன் தூங்கறான்” என்றான் சப்தமாய்.
குமரனின் தாயார் மோகனாவிற்கு காது தெளிவாகக் கேட்காது.
“யாருய்யா பேசுறது? குமரேன் எழும்பீட்டானா சாமி?” என்று கொஞ்சம் சப்தமாகவே தான் கேட்டார்.
கார்த்திக்கு அது பழக்கம் தான்.
“ஆமா’ம்மா. கார்த்தி பேசுறேன். சொல்லுங்க” என்க,
“குமரனுக்கு உடம்பு சொகமா இருக்காய்யா சாமி. கருக்கல்ல கெட்ட கனா கண்டுச்சு சாமி. மனசுக்கு சுருக்குன்னுட்டு இருக்கவும்தேன் விடிஞ்சும் விடியாம கூப்புட்டேய்யா” என்று சற்று விசும்பினார்.
தலைமகனை பிரிந்திருக்கும் வேதனை. அத்தோடு கண்ட கனவின் தாக்கம் சேர்ந்து நன்றாகவே அந்த தாயை நெகிழ்த்தியிருந்தது.
தூங்கும் குமரனைப் பார்த்தவன், “நல்லா இருக்கான்’ம்மா. ஒரு ப்ரச்சினையும் இல்லை. அப்பா, வேலு எல்லாம் சௌரியமா இருக்காங்கலா?” என்று அவரை இயல்பாக்க கேட்க, அவரும் பதில் சொல்லிக்கொண்டே குமரனின் நலனை ஒரு ஒரு வாக்கியம் முடியும் போதும் கேட்டுக் கொண்டார்.
என்ன இருந்தாலும், பெத்த மனம் பித்து தானே?!
“குமரனுக்கு இங்கன எங்கூர் பக்கம் ஒரு ஜாதகம் தகையறாப்புல இருக்கு. அதேன் அத்தையும் புள்ளகிட்ட சொல்லலாம்னுதேன்” என்க, கார்த்தி கண்ணை விரித்தான்.
‘இவன் இன்னும் வீட்டுல சொல்லலையா’ என்றவன் குமரனை எட்டி ஒரு உதை விட்டபடி, “அவன் எழுந்தோன உங்களுக்கு கூப்ட சொல்லுறேன்’ம்மா. எதுவா இருந்தாலும் அவசரம் வேண்டாம்” என்றிருந்தான் அவசரமாய்.
“எல்லாம் கண்ணாலம் கட்டிக்கற வயசு தானே’ய்யா. நல்ல எடம், நஞ்சு புஞ்சையோட நம்ம வூரு பக்கம் வேற. இவனும் சரினுட்டா வர வைகாசியிலேயே கட்டி முடிச்சிடலாம். என்ன சொல்லுற நீயி?” என்று அவனிடமே அவர் யோசனை கேட்க, குமரன் அசைந்து கொடுத்தான்.
அவன் காதருகே கைப்பேசியை ஒலிபெருக்கியில் போட்டவன், “கல்யாணம் தானே’ம்மா. குமரனுக்கு அந்த யோகம் வந்தா செஞ்சுறலாம். பொண்ணு பேரு என்ன’ம்மா சொன்னீங்க? சுகுமாரியா? மனோகரியா?” என்க, அவன் தூக்கம் மொத்தமும் பறந்திருந்தது.
சரியாக, ஹாஸ்டலுக்குள் ஹேமாவும் சரபேஷ்வரனும் வர, “யாரக் கேட்டும்மா எனக்கு பொண்ணு பார்த்த?” என்ற உரத்த குரல் அவர்களை குமரன் இருந்த அறை நோக்கி நகர்த்தியது.
••••

Last edited:
Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 03
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.