- Thread Author
- #1
அது ஒரு பரபரப்பான காலை பொழுது, சென்னையின் பிரதானமான பகுதியில் ஒரு காபி ஷாப்பில் தான் இருந்தான் ஆர்வி (ரானவ் ரகுவன்ஷி).
தன்னுடைய எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அவர்கள் கண்ணில் தெரியும் பயத்தை உள்வாங்கி ரசிப்பதே அவனுக்கு மிகவும் பெரிய போதையாக இருக்கும்.
இப்பொழுதும் கூட அவனுடைய கடத்தல் பொருட்களை கைப்பற்றி அரசிடம் ஒப்படைத்த கஷ்டம் ஆபிஸர் ஆன வினோத்தை ,நேருக்கு நேராக சந்தித்து பேசி முடிக்கலாம் என்று தன் ,அதாவது முடித்துவிட்டு பேசலாம் என்று நினைத்துதான் இங்கே வந்து இருக்கிறான்.
ஆர்வி குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் என்பது தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஒரு தொழில் நிறுவனம் ஆகும். கன்ஸ்டிரக்ஷன் என்பது அவர்களது பிரதான தொழில் ஆகும் மேலும் ஸ்கூல், காலேஜ் ,ஹோட்டல் மால் என்று பலவிதமான தொழில்களும் அதில் அடங்கும்.
வாரத்துக்கு ஒருமுறை செய்தி தாள்களிலும் பிரபல பத்திரிக்கைகளிலும் மிகவும் ஆர்வமாக பேசப்படும் ஒரு விடயம் என்றால் அது ஆர்வி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் உடைய பிரதானமான வளர்ச்சியே ஆகும். அப்படிப்பட்ட மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் வாரிசு தான் நமது வில்லன் ஆர்வி(RV). அவனது தந்தை ராகவ் ரகுவன்ஷியின் முகம் மட்டுமே அனைவருக்கும் பரிசயப்பட்டது.
ஆனால் மாஃபியா உலகில் நமது ஆர்விக்கு வேறொரு பெயர் உண்டு. சீட்டா(cheetah). எதையும் துல்லியமாக செயல்படுத்தும் கூர்மையான புத்தியை உடையவன். மேலும் அவனை எதிர்க்க நினைத்தால் அவர்களுக்கு மரணம் என்பதே ஆறுதல் பரிசாக இருக்கும். ஏனென்றால் அவனுக்கு தன்னை எதிர்ப்பவர்களை கொள்வதில் எந்த விதமான சந்தோஷமும் கிடைப்பதில்லை அவர்களது வாழ்வை நிமிடத்திற்கு நிமிடம் நரகமாக மாற்றுவதே அவனுக்கு மிகவும் பிடித்தமான ஹாபி என்றே கூறலாம்.
இதோ இப்பொழுது கூட கஷ்டம் ஆபிஸர் ஆன வினோத்தின் கண்ணில் தெரியும் பயத்தை கொடூரமாக ரசித்து கொண்டிருந்தான். வினோத் கழிவறை சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பின் அங்கே வந்து அமர்ந்தால் நம்முடைய நாயகி ஜெனி.
ஜெனி ஒரு சாதாரண 21 வயது மங்கை ஆவாள். பிரபலமான கல்லூரி ஒன்றில் ஆர்க்கிடெக்சர் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் இந்த காபி ஷாப்பில் வந்து தனது தோழிக்காக காத்திருந்து அவளுடன் கல்லூரிக்கு சென்று விடுவாள். இன்றும் அவ்வாறு கிளம்பி வந்தவள் வழியில் இருவர் அவளை பின்தொடர்ந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் ஆர்வி இருக்கும் காபி ஷாப்னுள் நுழைந்தாள்.
நேராகச் சென்று அவன் அருகே அமர்ந்தவள், அப்பொழுதுதான் அவனத கண்களை பார்த்தாலே போதும். பார்ப்பவர் அனைவரையும் ஆணழகன் என்று கூற வைக்கும் அத்தனை அம்சங்களும் அவனுடைய வதனத்தில் இருந்தது உண்மைதான்.
ஆனால் இப்பொழுது அவனது அழகை ரசிக்கும் நிலையில் தான் ஜெனி இல்லையே. தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென்று ஆர்வியை நெருங்கி அமர்ந்து...
"சாரி பேபி, இன்னைக்கு கொஞ்சம் வர, லேட் ஆயிடுச்சு, கோச்சுக்காத.. இனிமே லேட்டா வரமாட்டேன்"என்று தனது காதுகளை பற்றி ஆர்வியிடம் மன்னிப்பு கூறினாள்.
ஆனால் அங்கு இருந்த அவனது காட்ஸ்கள் அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக இருந்தது. திடீரென்று கும்பலாக பெரிய உருவங்களோடு ஆட்கள் உள்ளே நுழைந்த உடன் அங்கிருந்து அனைவரும் சென்றுவிட்டனர். இப்பொழுது காட்ஸ்களும் ஆர்வியும் மட்டும் தான் உள்ளே இருக்கிறான்.
இவளுக்கு அதை அனைத்தையும் கவனிக்கும் நேரமில்லையே அதனால்தான் தெரியாமல் உள்ளே வந்து ஆர்வி இடம் மாட்டிக்கொண்டாள்.
மற்றவர்களைப் போன்று என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க ஆர்வி சாதாரண ஆள் இல்லையே .அத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே தனது ஒற்றை கண்ணசைவால் கண்காணித்து வருபவன் மேலும் மாஃபியா உலகில் தனக்கென தனி பாதையை அமைத்து, எதிர்வரும் தடைகளை தகர்த்து எறிந்து வலம் வரும் அவன், அவளது விழிகளின் தெரியும் உணர்வுகளை வைத்து என்ன நடக்கிறது என்பதை வெகு விரைவாகவே உணர்ந்து கொண்டான்.
ஜெனியின் அலைபாயும் விழிகள், தன்னைப் பின் தொடர்ந்து வந்தவர்களும், ஷாபினுள் நுழைவதை பார்த்து திகைத்து விழித்தன. அவளது விழிகளை பார்த்து என்ன நடக்கிறது என்று கனித்தவன், அவளுடன் இணைந்து அவளது நாடகத்தை மேலும் சிறப்பாக அரங்கேற்றினான்.
ஜெனியின் இடை வளைத்து பெண்ணவளை தன்னோடு மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்...
"நோ நோ பேபி, நீ எப்பவும் இப்படித்தான் லேட்டா வர .அதனால, இன்னைக்கு உனக்கு பனிஷ்மென்ட் தந்தே ஆகணும்... சரி இவ்ளோ பாவமா முகத்தை வச்சுட்டு என்கிட்ட பேசுறதுனால உனக்கு ஒரு சலுகை தரேன்... நீ எனக்கு ஒரு கிஸ் கொடுக்கணும். அப்படி கொடுத்தா நான் உன்னை மன்னிக்கிறதா வேணாமான்னு முடிவு செய்யரேன்"என்று அதிர்ச்சியில் அகன்று விரிந்த ஜெனியின் விழிகளை பார்த்து கண்களை சிமிட்டினான் ஆர்வி.
அதேசமயம் RV யின் அசிஸ்டன்ட் ஜெய்,ஆர்வி இடம் வினோத் கைபற்றி கூட்ஸ்கள் அனைத்தும் அவர்கள் இடத்திற்க்கே மாற்றிவிட்டோம் என்பதையும்...மேலும் அந்த அரசாங்க கிடங்கை தீக்கு இரை ஆக்கியதையும், ஆர்வியிடம் கூற வந்தவன்....அங்கு நடக்கும் விடயங்களை பார்த்து அதிர்ச்சியிள் உறைந்தேவிட்டான்.
ஆர்வியை பற்றி தான் அவனுக்கு தெரியுமே,பெண்கள் மீது துளியும் ஈர்பில்லாதவன்.போதை மருந்துகளை கடத்தல் செய்பவனாக இருந்தாலும் ,எந்த விதமான போதைக்கும் தன்னை அடிமைபடுத்திக்கொள்ள மாட்டான் ஆர்வி.அதில் பெண்களும் அடங்குவர்.தன் மீது ஆசை படும் பெண்களை ,ஏன் அவ்வாறு நினைத்தோம் என ஆயுள் வரை நினைக்க வைக்க கூடியவன்.
ஆனால்,இப்போது அவன் ஒரு பெண்ணை இருக்கி அனைத்து இருப்பது அதிசயம் தான்.
ஆர்வியின் அசிஸ்டன்ட் ஜெய், அருகில் இருந்த காட்ஸ்களிள் ஒருவனிடம்...
"டேய் மலை மாடு ,இங்க வா"அந்த நபர் முறைத்த முனைப்பில் சற்று பம்மியவாறு...
"ஐயோ,முறைக்குறானே...ம்ம்ம் சமாளிப்போம்"என் மனதினுள் நினைத்தவன்...
"என்ன மேன் முறைக்குற"உள்ளுக்குள் பயத்தை ஒழித்து வைத்து கேட்டான் ஜெய்...
"இல்ல சார், நான் முறைக்கவே இல்லை"அந்த காட்ஸ் இன் உருவத்திற்க்கும் குரலுக்கும் சம்மந்தமே இல்லாமல் பதில் வர தனது சிரிப்பை அடக்கிய ஜெய்...
"அது இருக்கட்டும்,எனக்கு ஏன் நம்ம பாஸ் ,ஒரு பொண்ண கட்டி பிடிச்சிட்டு இருக்குற மாதிரி தோணுது?ஒரு வேலை என்னோட மைன்ட் விஸ்கியோ"
"சார்,அது மன பிராந்தி"
"நீ முதல்ல , நான் கேட்டதிற்க்கு பதில் சொல்லு,நான் பாக்குறது உன்மை தான் ...இல்ல கண்ணு எதும் கோளாறா?"
"உண்மை தான் சார்,நம்ம பாஸ் தான் அந்த பொண்ண கட்டிபிடிச்சிட்டு இருக்காரு.."என்று அவன் கூற ஜெய் க்கு அந்த ஏசி ஷாப்பிலும் உடல் வியர்க்க ஆரம்பித்தது.
அங்கிருந்த காட்ஸ்களை ஒரே டேபிலுக்கு வரும் படி கண்ணை காட்டிய ஜெய்...
"அடேய் அறிவுகெட்ட அப்ரசன்டுகளா,அந்த பொண்ணு எப்படி உள்ள வந்தா...சரி வந்துட்டாங்க.பாஸ் பக்கத்துல உட்காருற வரைக்கும் என்ன பண்ணிங்க?"என்று கிசுகிசுப்பான குறளில் கத்த.
"சார் ,பாஸ் தான் எங்கள எதுவும் செய்ய வேண்டாம்ன்னு கை காட்டினாரு"என்று ஒருவன் ஜெய்க்கு பதில் குடுக்க ...அதே நேரம் ...அவர்கள் மேஜைக்கு சற்று தள்ளி இருந்த ஆர்வி...
அனைவரையும் பார்த்து,"ப்ச்"என்று கூற அவர்களது உரையாடல் நின்றது.
*இந்த மனுஸன்,இதற்க்கும் என்னை தான கட்டி வச்சி அடிப்பாரு"என்று மனதினுள் மருகினான் ஜெய்.
இங்கோ,ஆர்வி முத்தம் கேட்ட உடன்,ஜெனிக்கு மூச்சே நின்றது போல முகம் எல்லம் வெளிரியது.
அவளது கெட்ட நேரம்,அவளை பின் தொடர்ந்த ஆட்கள் ,ஷாபினுள் நடப்பதை பார்த்தும்.அங்கேயே நின்றனர்.அதை கவனித்தவள் ஆர்வியை விலக்க இயலாது..அவனை பாவமாக பார்க்க...
"ஏய்,ரிலாக்ஸ் பேபி கேர்ள்...ஏன் இப்போ டென்ஷன் ஆகுற... பிரித் இன்...பிரித் அவுட்"
அவன் கூறுவதை ஏன் செய்கிறோம் என்று கூட அறியாமல் ...அவன் கட்டளைக்கு எல்லாம் அடிபனிந்தாள் காரிகை.
ஆனாலும் ஆர்வி அவளை விடுவதாக இல்லை...
"இவங்க எல்லோரும் நம்மையே பர்க்குறதுனால உனக்கு சங்கடமா இருக்கோ"
ஜெனி யின் இதயத்துடிப்பை அவனால் உணர முடிந்தது.
ஆர்வி ஜெய்க்கு கண்ணை காட்ட,அடுத்த நிமிடம் அங்கிருந்த அனைவரும்,ஷாப் ஊழியர்கள் உட்பட தலையை கீழே கவுத்தி கொண்டனர்.
"இப்போ எந்த பிரச்சனையும் இல்லை"என்று கூறியவாறு ஜெனியின் இதழ் நோக்கி குனிந்தான்.
அடுத்த கணம்,ஜெனியின் விழிகள் நீரை துளிர்க செய்ய...சட்டென அவளை விடுவித்தான் ஆர்வி. விட்டால் போதும் என ஷாப்பில் உள்ள கழிவறைக்குள் சென்றாள் ஜெனி.
அதே சமயம் கழிப்பறையை விட்டு வெளியில் வந்தார் வினோத்.மீண்டும் வன்ஷிக்கு எதிரில் அமர்ந்தவர் உடல் தன்னிச்சையாக நடுக்கம் கண்டது.
"என்ன சார், நீங்க பாதுகாப்ப வச்சிருந்த எங்களோட சரக்கை கைபற்றியது தெரிஞ்சு இத்தனை மிரட்சியா,இல்லை அந்த வேர் ஹவுஸ் எரிச்சதால இத்தனை
கலக்கமா?"
இரண்டும் என்பதை போல ஆர்வியை நேரிட்டார் அவர்.
"உங்களுக்கு இன்னோரு சர்ப்ரைஸ் சொல்லவா?"
கேள்வியாக பார்த்தார் வினோத்.
"நீங்க கைப்பற்றியது சும்மா செம்பில், நீங்க இதுல பிஸியா இருந்தப் போ ...நாங்க டன்ஸ் ல கை மாத்திட்டோம்"
எத்தனை அதிர்ச்சிதான் அவரும் தாங்குவார்...
"இதெல்லாம் உங்களுக்கு ஏன் சொல்லுரேன்னு பாக்குறிங்கலா..இதை நீங்கள் வெளியே சொல்ல மாட்டிங்க..."ஆர்வி யின் குரல் வன்மையை தத்தெடுத்து கொண்டது.
ஜெய் க்கு கண்ணை காட்ட அவன் வினோத்தை அழைத்துச் சென்று விட்டான்.
அப்பேதுதான் வெளியில் வந்தாள் ஜெனி,அவளை பின் தொடர்ந்தவர்கள் இருக்கிறார்களா என்று சந்தேகத்துடன் வெளியே வந்வளுக்கு ...
ஷாப்பில் யாரும் அன்று காலியாக இருக்க...இப்போது தான் மனம் அமைதி அடைந்தது.
ஆர்வி இருந்த டேபிலில் ,தனது பர்ஸையும்,கல்லுரி பேக்கையும் விட்டுச் சென்றவள்...அதை எடுக்க முற்படும் போது.
அவளுக்கு பின்புறமாக நூள் அளவு இடைவெளியில் நின்ற ஆர்வி...
"ஆர் யூ லாஸ்ட்,பேபி கேர்ள்"என்று கூற...அவனுடைய சூடான மூச்சுக்காற்று பட்டு பெண்ணவளோ திகைத்து திம்பி பார்க் தடுமாறினாள்...
தொடரும்...
ஆர்வி❤️🔥ஜெனி
உங்களது கருத்துக்களை கூறவும்.

Attachments
Author: gomathi.C
Article Title: காதல் தீ ❤️🔥-1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.