- Thread Author
- #1
அத்தியாயம் 2
ஜெயராம், தன்னுடைய வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமைகளை செய்து கொண்டிருந்தார்!!... இன்ஸ்பெக்டர் கதிரை அழைத்து, அந்தப் பையனோட அம்மா, அப்பாவுக்கு தகவல் கொடுத்துட்டீங்களா?... பாடி இதுக்கு மேல தாங்காது!!... கிட்டத்தட்ட உயிர் போயி பனிரெண்டு மணி நேரம் ஆயிருக்கும்!!... அவங்க பேரன்ட்ஸ் வந்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட உடல்கூறாய்வுக்கு பர்மிஷன் வாங்கிருங்க??... வாங்கிட்டு என்ன பண்ணனுமோ?.. அதை பண்ணிட்டு பாடிய அவங்க கிட்ட ஹேண்டவர் பண்ணனும்!!.... என சொல்லிக் கொண்டிருக்க , அந்த இடம் முழுவதும் அழுகை ஒலியும் கேவல் ஒலியும் ஒன்றாக ஒலித்தது!!... மனோவின் அம்மா மீனாவும், மனோவின் அப்பா சுந்தரும், கூடவே கலங்கிய கண்களுடன் சந்துருவும் நுழைந்தனர்!!.... ஜெயராமமும் சுந்தரும் நெருங்கிய நண்பர்கள்... ஜெயராமை பார்த்த மீனாவோ, அண்ணா என்ன ஆச்சு??... மனோவுக்கு ஒன்னும் ஆகலையே!!... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்துச்சு??... சந்துருவும் இவரும் என்னென்னமோ சொல்றாங்க!!... எனக்குத் தெரியும் மனோவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது!!... நீங்களே ஒரு தடவை உங்க வாயால இவங்களுக்கு சொல்லுங்க!!... மனோவுக்கு ஒன்னும் ஆகலைல, என மீனா கேட்க , கண் கலங்கினார் ஜெயராம்!!... நண்பனின் முகத்தை பார்த்த சுந்தரோ அதிர்ச்சியில் உறைந்தனர்!!.... சுந்தரம் மீனாவும் உள்ளே நுழையும் வரை மனோவுக்கு எதுவும் ஆகி இருக்காது..... என்ற எண்ணத்தோடு மட்டுமே நுழைந்தனர்... ஜெயராம், சுந்தரிடம் பார்த்து கண்ணசைவிலேயே அந்த அறையில் என கண்காட்ட, தன்னுடைய தடுமாறிய கால்கள் இரண்டையும் கொஞ்சமேனும் திடப்படுத்திக் கொண்டு சுந்தர் நடக்க அவரின் பின்னால் சந்துருவும், ஜெயராமும் நடக்க , இவர்கள் மூவரையும் முந்திக்கொண்டு உள்ளே நுழைந்தார் மீனா.
தன்னுடைய மகனின் கோர நிலையை பார்த்து மனோ.... என கத்தி விட்டு மயங்கி சரிந்தார் மீனா.!!,... ஆசை ஆசையாக பாலூட்டி, சீராட்டி வளர்த்த மகன் இன்று கோரமாக காட்சி அளிப்பதை தாங்கும் தாய் யாரும் உண்டோ இவ்வுலகில்!!... சுந்தரும் தன் மகனின் நிலையை பார்த்துவிட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டார்!!... அவர்கள் இருவரையும் பார்த்து ஜெயம்ராமிற்கும் சந்துருவிற்கும் கண்ணீர் வழிந்தோடியது!!... இதையெல்லாம் அங்கிருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்!!... ஜெயராம் சுந்தரை சமாளிக்க முடியாது திணறினார்!!... மீனா மயங்கி விழுந்ததை பார்த்து சந்துரு பக்கத்தில் இருந்த தண்ணியை எடுத்து ஓடி வந்து மீனாவின் முகத்தில் தெளித்து, " அம்மா எந்திரிங்??.. என சொல்ல, எந்த அசைவும் இல்லாமல் இருந்தது மீனாவிடம் !!.. உடனே ஜெயராம் பதறி கொண்டு அங்கிருந்த காவலர்களுக்கு ஆம்புலன்ஸை வரை வைக்க உத்தரவிட சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸும் வந்துவிட்டது!!.... சுந்தரோ மனைவியின் நிலையையும் அறியாது பித்து பிடித்தவர் போல, மகனையே பார்த்துக் கொண்டிருக்க சுந்தரை உலுக்கி , " டேய் இங்க பாரு??... மீனா மயங்கி விழுந்துட்டா??... அவள முதல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்!!... எனச் சொல்ல அப்பொழுதுதான் சுந்தர் இயல்பு நிலமைக்கு திரும்பினார்!!.... தன்னுடைய மகன் இனி தனக்கு இல்லை என்று அவர் புத்தியில் உரைக்க தனக்கு சொந்தமான தன் மனையாளையாவது காப்பாற்ற வேண்டும் என்று தோன்ற, தன் கண்களை துடைத்துக் கொண்டு தன் மனையாளை தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸில் ஏற ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தது!!...
அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தனர் சந்துருவும் ஜெயராமும்!!.. சந்துரு ஜெயராமின் எதிரே இருக்க , சந்துருவின் பக்கத்தில் சந்துருவை முறைத்துக் கொண்டே ஒரு கருப்பு உருவம் நின்று கொண்டிருந்தது!!... ஜெயராமின் கண்களுக்கு மட்டும் அந்த உருவம் தெரிய ஜெயராம் பதட்டத்தை மறைத்துக் கொண்டு பெரிதாக மூச்சை இழுத்து விட்டு மீண்டும் பார்க்க அந்த கருப்பு உருவம் தன் கைகளை நீட்டி சந்துருவின் கழுத்தை நெரிக்க முற்பட, ஜெயராமோ பக்கத்தில் இருந்த கதிரை உரத்த சத்தத்துடன் அழைக்க, வேகமாக அந்த உருவம் அங்கிருந்தும் மறைந்தது!!... ஜெயராம் மீண்டும் அந்த உருவம் நின்று கொண்டிருந்த இடத்தில் பார்க்க, எதுவும் இல்லாமல் இருக்க நம்முடைய கற்பனையாக இருக்குமோ!!... என்று நினைத்து கொண்டார்!!.. தன் கண்களுக்கு மட்டும் தெரிந்ததை யாருக்கும் சொல்லாமல் , மேற்கொண்டு பேச ஆரம்பித்தார் ஜெயராம்.
" சந்துரு நான் உங்களை எல்லாம் கவனமா தானே இருக்க சொன்னேன்!!... உங்க நாலு பேரோட உயிருக்கு த்ரெட்டனிங் இருக்கு அதனால கவனமா இருக்கணும்னு சொன்னேன்ல??... ஒரு வாரத்துக்கு முன்னாடி மனோ உயிருக்கு ஆபத்து இருக்குன்னு ஸ்டேஷனுக்கு கால் வந்துருச்சு??... அது உண்மையோ பொய்யோ உங்கள பாதுகாப்பா இருக்க சொல்லி சொன்னேன்ல?.... அப்படி இருக்கும்போது மனோ எப்படி இங்க வந்தான்??... என ஜெயராம் கேட்க, தெரியலப்பா நீங்க சொன்னதுல இருந்து நாங்க வெளியில எங்கேயும் போறதில்ல!!... அவனுக்கு துணையா நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேரு கூடவே தான் இருந்தோம்!!... ஒரு வாரமா அவனோட போன் எல்லாத்தையும் வாங்கி வச்சுட்டோம்!!... அவனுக்கு வெளி உலக தொடர்பு எதுவுமே இல்லாம தான் இருந்துச்சு..... ஒரு வாரமா உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க தான் இருந்தாங்க, எங்க பாதுகாப்புக்கு!!.. வேணும்னா, அவங்க கிட்ட கேட்டு பாருங்கப்பா நாங்க எங்கேயும் வெளில போகல??...இது எப்படி நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியல!!... என சந்துரு கண்கள் கலங்கிக்கொண்டே அங்கு நடந்ததைச் சொல்ல, " சரி நேத்து என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லு!!... நீ சொல்றத வச்சு தான் நான்..... விசாரிக்க முடியும் என சந்துருவிடம் ஜெயராம் சொல்ல, " அப்பா ஒரு வாரமா நாங்க கதவை வெளியில லாக் போட்டுட்டு தான் தூங்கிக்கிட்டு இருக்கோம்.... நாங்க தங்கி இருந்த ரூமோட கதவ வெளியில இருந்து யாராவது திறந்தாதான் நாங்க ரூமுக்குள்ள இருந்து வெளியிலேயே போக முடியும்!!. நேத்து சாப்டுட்டு சீக்கிரமாவே மனோ தூங்கிட்டான்!!... அவன் தூங்கினதுக்கு அப்புறம் தான் நானும் என் பிரண்ட்ஸும் தூங்குனோம்!!... அப்புறம் என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியலப்பா??... ஸ்டேஷனிலிருந்து
லேண்ட்லைன்ல போன் வந்துச்சு!!... அந்த சத்தம் கேட்டு தான் நாங்க எந்திரிச்சோம்!!.. நான்தான் முதல்ல எந்திரிச்சேன்.... அப்பத்தான் மனோ இருக்கானானு... பார்க்க அவனை காணோம்??... சரி ரெஸ்ட் ரூம் போயிருப்பான்னு நெனச்சிட்டு லேண்ட்லைன் ரிசீவரை எடுத்து என்னன்னு கேட்க, " மனோ இறந்துட்டான்னு தகவல் வந்துச்சு!!... அதுக்கப்புறம் தான்பா, பதறி அடிச்சுட்டு சுந்தர் அப்பாவையும் மீனா அம்மாவையும் கூட்டிட்டு இங்க வந்தேன்!!... எனச் சொல்லி முடித்தான் சந்துரு!!...
வெளியில் இருந்து தான் திறக்க முடியும்.... என்று சந்துரு சொல்லியதே ஜெயராமின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.... சரி ஏன் நேத்து இவ்வளவு நேரம் கழிச்சு எந்திரிச்சீங்க??.. எதுவும் ஆல்கஹால் எடுத்தீங்களா??...என கேட்க , மன்னிச்சிருங்கபா என சந்துரு சொல்ல, " இடியட் அறிவு இல்ல!!.. ஏற்கனவே நீங்க குடிச்சு கும்மாளம் போட்டதனால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை!!... உங்கள குடிக்க கூடாதுன்னு எவ்வளவு சொல்லியும் அறிவில்லாமல் நடந்து இருக்கீங்க??... என திட்ட அமைதியாக நின்றான் சந்துரு. ஜெயராமோ, சந்துருவை முறைத்துக் கொண்டு, " இங்க பாரு சந்துரு!!... மனோவத்தான் காப்பாத்த முடியல??... மீதம் இருக்கிற நீங்க மூணு பேரும் இன்னும் கவனமா இருக்கணும்!!... இந்தக் கொலையெல்லாம் யார்
செய்றானு நாங்க கண்டுபிடிக்கிற வரை , நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்..... அந்த கொலைகார ஆசாமி யாரா இருக்கும்!!... என ஜெயராம் சந்துருவை பார்த்து கேட்க சந்துரு எச்சில் விழுங்கினான்!!. சந்துருவின் முகத்தை நோட்டமிட்ட படியே, ஜெயராம் எனக்கு தெரிஞ்சு அடுத்தது சேதுவாத்தான் இருக்கும்!!.... அவன ரொம்ப கவனமா இருக்க சொல்லணும்!!... என ஜெயராம் சொல்ல, அப்பா அந்த பிரச்சனை நடந்ததுல அவன் ரொம்ப பயந்துட்டான்.!!... இங்கே இருந்தா எதையாவது உளறி விடுவான்னு நாங்க தான் அவன ஃபாரின் அனுப்பி வச்சோம்!!... நேத்து கூட அவன் கிட்ட பேசினேன் அவனுக்கு இந்தியாவுக்கு வர்ற ஐடியா இல்ல!!.... கவினுக்கு இப்படி ஆனத நெனச்சே பயந்துகிட்டு இருக்கான்??... இப்போதைக்கு மனோவுக்கு இப்படி ஆச்சுன்னு சொன்னா ரொம்ப பயந்துருவான்!!... அவனுக்கு பயந்தாலே அவனுக்கு மூச்சு திணறல் வந்துரும் .... அதனால அவங்கிட்ட இத பத்தி பேச வேண்டாம்பா என சொல்ல, " அப்புறம் எப்படி அவன பாதுகாப்பா இருக்க சொல்றது, என ஜெயராம் கேட்க , அவன் தான் இந்தியாலயே இல்லையேப்பா, அவன் இப்ப இந்தியாவுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இல்லப்பா!!... அதனால ஒன்னும் பிரச்சனை இல்லப்பா என சந்துரு சொல்ல..... வராமல் இருக்கிற வர அவனுக்கு எந்த பிரச்சனையும் வராது!!... கண்டிப்பா இங்க வர்றதுக்கு வாய்ப்பு இல்லைல.. என ஜெயராம் கேட்க, " இல்லப்பா இப்போதைக்கு அவன் இந்தியாவுக்கு வரமாட்டான்!!... என சந்துரு சொல்ல, எதையோ யோசித்தவாறு , "சரி உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருந்தா, எனக்கு சொல்லு!!.. வீட்டுக்கு வா!!...அத பத்தி பின்னாடி பேசுவோம்!!.... மனோவோட பாடிய உடற்கூறாய்வு செய்யணும்!!..
என் டிபார்ட்மெண்ட் ஆளுங்க உன் கூட வருவாங்க நீயும் அவங்க கூட போ.... இப்போதைக்கு சுந்தர தொந்தரவு பண்ண முடியாது!!... எல்லாத்தையும் நம்ம தான் பாக்கணும்!!... கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்க??... நான் கொஞ்சம் விசாரிக்க வேண்டியது இருக்கு விசாரிச்சுட்டு ஹாஸ்பிடல் வந்துருவேன்!!... எனச் சொல்ல சரிப்பா.... என தலையசைத்து விட்டு அவ்விடத்திலிருந்து சென்றான் சந்துரு.
இங்கு
அழகான மாலை பொழுதில், ஒரு காபி ஷாப் ஒன்றில் கேஷுவல் உடை அணிந்து, கண்ணில் கூலர்ஸ் மாட்டிக்கொண்டு, பாலிவுட் ஹீரோ போன்று தன்னுடைய நண்பர்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான் கவின்!!... பிறக்கும்போதே வசதியான வீட்டில் பிறந்ததால் , செல்வ செழிப்பு அவன் உடையிலும் நடையிலும் தெரிய,. அவன் அழகில் மயங்கி அங்கிருந்த பெண்கள் எல்லாம் அவனைப் பார்த்து ஜொல்லு வடித்துக் கொண்டிருக்க , அதை எல்லாம் பார்த்து அலட்சியமாய் புன்னகைத்துக் கொண்டு தன்னுடைய மொபைலை பார்த்தவாறு
அமர்ந்திருக்க, வெள்ளை நிற சல்வாரில் , தன்னுடைய அடர்ந்த கூந்தலை ஒரு சின்ன கிளட்ச்சில் அடக்கி விட்டிருக்க, நான் அடங்குவேனா என்பதைப்போல் காற்றினில் அவளின் விரித்துவிட்ட கேசம் அலைபாய்ந்து கொண்டிருக்க , வெள்ளை நிற சுடிதாரில் இருந்த சிவப்பு நிறத்திலேயே ஜிம்கா ஒன்றை அணிந்தபடி , வானில் இருந்து இறங்கி வந்த அப்சரஸ் போன்று கவினை நோக்கி வந்து கொண்டிருந்தால் ஆரா!!... எத்தனையோ அழகிகளை எல்லாம் பார்த்து கடந்திருக்க ஆராவின் அழகில் மட்டும் அசந்து வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நம் நாயகன் கவின்!!.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள்.

Author: புன்யா
Article Title: KMC25 கவினின் காதலியும் நானே!காலனும் நானே!!
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.