அத்தியாயம் - 1

New member
Joined
Aug 14, 2025
Messages
5
இந்திய தேச எல்லை

எங்கும் ரத்தம் , வலியில் முனகும் படைவீரர்கள்.

தீவிரவாத இயக்கத்தை சண்டையிட்டு தோல்வி அடைய செய்த சந்தோஷம் இருந்தாலும்,

அதைவிட தங்கள் படை வீரர்கள் உடலில் அதிக காயங்களும் தங்கள் உடன் இருந்தவர்கள் சில பேர் இறந்திருக்க,

அதையெல்லாம் காலில் ஏற்பட்ட வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது கதையின் நாயகன் சாகித்திய தேவன்.

தன்னை நம்பி வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்க தன் வலிகளை விட அவர்கள் வழிகண்டு துவண்டு போனான் பட்டாளத்துக்காரன்.


ஆம்புலன்ஸில் காயப்பட்டவர்களை முதலுதவி செய்து ஏற்றிக் கொண்டிருக்க

சாகித்தியன் அருகில் வந்த மிலன் இந்தியன் ஆர்மியில் லெப்டினன் ஜெனரல் அவனை விட மேல் அதிகாரி. அவன் மேஜர் ஜெனரலாக பணிபுரிகிறான்.

"சாகித்யா ஆர் யூ ஓகே மை பாய்!" என்று மிலன் குரல் கேட்க கஷ்டப்பட்டு கண்களை விரித்து பார்த்தவன்

" சார் " என்று உரைத்தவன் நம்ம பசங்க என்று சொன்னவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வறுமையாகி போக


"கவலைப்படாதடா எல்லாரும் சரியாயிடுவாங்க போர் என்றால் இதெல்லாம் சகஜம் தானே!" என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே

அங்கே வந்த மருத்துவர் "சார் அவருக்கு ரொம்ப ஹெவியா ரத்தம் போயிட்டு இருக்கு. பேசறதுக்கு நேரமில்லை! கால்ல குண்டு வேற பட்டு இருக்கு சீக்கிரம் ரிமூவ் பண்ணனும்" என்று பணிவாக கூறினார்.

"ஓகே அவரை கூட்டிட்டு போங்க நல்லா ட்ரீட்மென்ட் பண்ணுங்க!" என்று மட்டும் கூறியவர் அங்கிருந்து செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மூன்று நாட்கள் கழித்த நிலையில் தன்னுடைய காலில் இருந்த கட்டையே வெறுமையான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சாகித்யா.

அவன் காலில் இருந்த குண்டு நீக்கப்பட்டு இருக்க அதன் வலி இருந்தும் வெறுமையான மனதுடன் அமர்ந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கே வந்தார் அவனது தாய் வசுந்தரா.

"தேவ்" தாயின் தவிப்பான குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன் அழுது கொண்டே தன்னை நோக்கி ஓடி வரும் அன்னையைக் கண்டு அதிர்வுற்றான்.

இவன்தான் கூற வேண்டாம் என்று கூறினானே அதையும் மீறி யார் சொன்னது என்ற கோபம்,

அவன் மனதிற்குள் எழுந்தாலும் தனது தாயை அமைதிப்படுத்தும் வழியினை மேற்கொண்டான்.

"அம்மா அழாதீங்க எனக்கு ஒன்னும் இல்ல. உங்களை யாரு இங்க எல்லாம் வர சொன்னா?" என்று கேட்ட மகனை பார்த்து முறைத்தவர்

"இதுக்கு தான் நான் இந்த வேலையே வேண்டாம்னு சொன்னேன். கேட்டயா நீ ? உங்க அப்பா மாதிரி நீயும் இங்க வந்து உயிரை விட்டு இந்த அம்மாவை அனாதையாக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா அப்படியே போறதா இருந்தா என்னையும் கூட கூட்டிட்டு போயிடு ஏற்கனவே அவர் இல்லாமல் நான் நீயும் கூட அருகில் இல்லாமல் தவிச்சிட்டு இருக்கேன்! இப்ப ரெண்டு பேரும் என்ன விட்டு போய்ட்டீங்கண்ணா நான் மட்டும் எதுக்காக இந்த உலகத்துல தனியா இருக்கணும் என்று அழுபவரை கண்டு அவரை அணைத்துக் கொண்டவன்

"அம்மா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லம்மா இங்க பாருங்க. நான் நல்லா இருக்கேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, வலி கூட இல்ல!" கூறிய மகனை நம்பாத பார்வை பார்த்தவர்

" நீயும் மனுஷன் தாண்டா உனக்கும் வலிக்கும் அது ஒரு அம்மாவை எனக்கு தெரியாம இருக்குமா? நீ என்னதான் மிலிட்டரி காரண வெறப்பா இருந்தாலும் உனக்குள்ளேயும் எனக்குள்ள ஓடற மாதிரி ரத்தம் சதை தான் இருக்கு! வலி என்பது உனக்கும் உண்டு அதை என்கிட்ட மறைக்கணும்னு அவசியம் இல்ல ப்ளீஸ் டா கண்ணா இனிமேலாவது அம்மாவ தவிக்க விடாமல் என் கூடயே வந்துடுடா!" என்று பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே மயங்கி சரிந்தார்..

டாக்டர் டாக்டர் என்று அழைத்தவன் குரலில் ஓடி வந்த செவிலியர் அடுத்து வசுந்தராவை அவனுக்கு பக்கத்திலேயே ஒரு பெட்டில் கிடத்தி

அவருக்கு சிகிச்சை பார்க்க" ஒன்றும் இல்லை அதிர்ச்சியில் மயங்கிட்டாங்க கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க!" என்று கூறியவர் சலையினை ஏற்றிவிட்டு சென்றார்.

அப்பொழுது அந்த அறைக்குள் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தார் மிலன்.

அவரை முறைத்துப் பார்த்தவன் "இதெல்லாம் உங்க வேலையா ஜெனரல்!" என்று கேட்டவனை அவரும் தன் பங்குக்கு முறைத்தார்.

"எதுக்காக சார் அவங்க கிட்ட உண்மைய சொன்னீங்க அவங்க தாங்க மாட்டாங்க தானே நானே அமைதியா இருக்கேன்!" என்று கடிந்து கொள்ள

"போதும்டா இதுக்கு மேல என்னால மறைக்க முடியல! நான் சொல்லாம கூட உங்க அம்மா இங்க கிளம்பி வந்து இருப்பாங்க! நான் சொன்னதுனால அவங்க வந்துட்டு இருக்காங்க நீ நினைக்காத!" என்று சொன்னவரை புரியாமல் பார்த்தான்.

அதை உணர்ந்து கொண்டவர் "ஆமா இரண்டு நாளுக்கு முன்னாடியே எனக்கு போன் செஞ்சு உன்ன பத்தி விசாரிச்சாங்க! ஏதோ அவங்க மனசு உறுத்திட்டே இருக்கிற மாதிரியும் உனக்கு ஏதோ ஆபத்து அப்படின்னு கனவு கண்டிருக்காங்க. அதான் நீ நல்லா இருக்கியா உன்கிட்ட இரண்டு வார்த்தை பேச முடியுமா? அப்படின்னு என்கிட்ட கேட்டாங்க அப்பதான் சார் மயக்கத்தில் ஐ சி யூ ல இருந்தீங்களே? எப்படி பேச முடியும் அதனால நான்தான் வேலையா வெளிய போயிருக்க வந்த உடனே பேச சொல்றேன்னு அப்போதைக்கு அவங்கள அமைதி படுத்தினேன்".

அதுக்கு அப்புறமும் அவங்க விடாம போன் பண்ணதுனால எனக்கு வேற வழி தெரியல அவங்க இங்க நான் சொல்லலனாலும் வந்து இருப்பாங்க ஒரு அம்மா டா அவங்க உள் உணர்வு தன்னோட மகனுக்கு ஏதோ ஆபத்துன்னு தோணி இருக்கு! போதும் உங்க அப்பா இருந்தாவாவது பரவால்ல தனியா இருக்கிற அந்த மனுஷியோட நிலைமையை புரிந்து நடந்து போ உன்னாலயும் இப்ப கொஞ்ச நாளைக்கு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது அதனால இந்த நேரத்தை நல்லா உங்க அம்மா கூட செலவழி அவங்க மனசு நோகுற மாதிரி நடந்துக்காத தேவ் !" என்று சொன்னவரை கண்டவன்

அவரிடம் "மத்தவங்க எல்லாம் எப்படி சார் இருக்காங்க?" என்று கேட்டான்.

அதைப்பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் மிலன் அங்கிருந்து கிளம்பி சென்று விட

அடுத்த நான்கு நாளும் தனது மகனை அருகில் இருந்தே பார்த்துக் கொண்டார் வசுந்தரா.

இவன் மருத்தும் கேட்காமல் , தனது மகனை கையோடு அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து இறங்கினார்.

அதற்கு முன்பு தன்னுடன் அடிபட்டவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறி முடித்தவன் சக தோழர்கள் இறந்து இருக்க அவர்களுக்கும் இறுதி மரியாதை தனது தாயுடன் நின்று செலுத்தி விட்டு தான் கிளம்பினான்.

மிலன் ஜென்ரலும் அவன் உடல்நிலை சரியான பின்பு தான் பிட்னஸ் டெஸ்ட் செய்துவிட்டு தான் மில்டரிக்குள் உள்ளே வர முடியும் அதுவரை உன்னால் பணியை தொடர முடியாது என்று ஒரு லெட்டரையும் கொடுத்து விட

அதைப் பார்த்து விரக்தியான சிரிப்பொன்றை உதிர்த்தவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனது தாயுடன் வந்தவன் அப்பாவுடன் இருந்த அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தான்.

முட்டிக்கு மிகவும் அருகில் அவனுக்கு இரண்டு புல்லட்டுகள் பாய்ந்ததால் அது சரியாகும் வரை அவன் கண்டிப்பாக ரெஸ்ட் எடுக்க வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் அந்த இடத்தில் புல்லட்டுகள் அகற்றி விட்டாலும் அவனால் ஆறு மாதத்திற்கு இன்னும் நடக்க முடியாது என்ற நிலையில் வீல்சேரில் அமர்ந்த வண்ணம் தங்கள் வீட்டை பார்த்துக் கொண்டு வந்தான்.


💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மறுபுறம் அந்த முதியோர் இல்லத்தில் தாத்தா பாட்டிகள் தங்கள் பணிகளை பார்த்துக் கொண்டிருக்க

காலை உணவை சாப்பிட்டுவிட்டு மிச்சமிருந்த வேலைகளை பார்த்துக் தங்கள் அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டே செய்து கொண்டிருந்தனர்.

அவர்களுடன் தனது தோழிகளையும் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு உதவி கொண்டே அவர்களின் மனக்குறையை போக்கி சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தாள் கதையின் நாயகி ஆராதனா.

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கேயோ அல்லது குழந்தைகள் காப்பகத்திற்கோ சென்று தன்னுடைய சேவையை தோழிகளுடன் செய்து வருவாள்.

ஏனென்றால் அவளும் ஒரு அனாதை தானே..

ஆம் நமது ஹீரோயின் ஒரு அனாதை தான்.

மூன்றாவது வருடம் பிஎஸ்சி நர்சிங் படித்துக் கொண்டு வருகிறாள். அவள் இந்தத் துறை தேர்ந்தெடுத்ததே முதல் காரணம் எம்பிபிஎஸ் படிக்க அவளுக்கு ஸ்பான்சரும் கிடைக்கவில்லை.

காசும் இல்லை இன்னொன்று தன்னால் முடிந்த அளவு அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் உதவி புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் இந்த கோர்ஸ் எடுத்து வெற்றிகரமாக இதுவரை படித்துக் கொண்டிருக்கிறாள்.

வகுப்பில் முதல் ஐந்து மதிப்பெண்களுக்குள் வரும் டாப் 5 மாணவிகளின் அவளும் ஒருத்தி.

ஆராதனா அங்கே இருக்கும் ஒரு பாட்டிக்கு காலில் என்னை தடவி நீவிகொண்டே பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருக்க

அங்கே வந்த அமர்ந்த அந்தப் பாட்டியின் கணவர்" இப்படி எங்கள வாராவாரம் வந்து பார்த்துக்கிறியே உனக்கு கஷ்டமா இல்லையா எங்க பெத்த பசங்களே எங்கள கண்டுக்கல!" என்று கேட்க

"அதுக்குதான் நான் இருக்கேன் பாட்டி கண்டுக்காதவங்களை விட்ருங்க கண்டுக்கற என்ன நீங்க கண்டுக்கோங்க!" என்று அவர்களை தன் பேச்சினால் சிரிக்க வைத்தாள்.

இவளுடைய பேச்சாலும் குறும்புத்தனத்தாலும் அங்கே இருக்கும் பெரியவர்கள் முகத்தில் அலாதி சிரிப்பு எப்பொழுதும் வரவைத்து விட்டு தான் கிளம்புவாள்.

தாய் தந்தை தாத்தா பாட்டி என்று உறவுகள் இல்லாத அவளுக்கு இவர்களே உறவாகி போயினர் இத்தனை ஆண்டுகளில்.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தனது தோழிகளுடன் ஹாஸ்டல் வந்து சேர்ந்தால்.

அப்பொழுது அங்கே அமர்ந்திருந்த வார்டன் சௌந்தர்யாவை பார்த்தவள் அவரிடமும் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு அறைக்கு சென்று குளித்து முடித்துவிட்டு படிக்க ஆரம்பித்தால்.

இதுதான் இவளுடைய தினமும் ரொட்டீன்.

மறுநாள் கல்லூரிக்கு கிளம்பி சென்றவள் வகுப்புகள் நடந்து கொண்டிருக்க இடைவேளை போது அவளை பின்தொடர்ந்த இளைஞனிடம் பேசிக் கொண்டே முன் நடந்தவள் நடை அப்படியே நிற்க திரும்பி நின்று தனக்கு முன்னால் நிற்பவனை பார்த்தவள் துளியும் யோசிக்காமல் அவனது கன்னத்தை அறைந்தாள்.

அவளின் செயலை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் முகத்தின் முன்பு தனது ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவள் பேசுறப்ப வாய் மட்டும்தான் பேசணும் மேல கை வைக்கிற வேலை வெச்சுக்கிட்ட தொடுற கையை அப்படியே வெட்டிடுவேன் ஞாபகம் வச்சுக்கோ என்று சொன்னவள் தோழிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

இவள் கேங்கில் மொத்தம் இவளுடன் சேர்த்து 3 தோழிகள். இவர்களுக்கு ஜோடி இருக்கா இல்லையா என்று கதையின் போக்கில் பார்க்கலாம் அது எனக்கே தெரியவில்லை.

ரம்யா மற்றும் லாவண்யா என்ற இரு பெண்களுக்கும் ஆராதனா என்றால் மிகவும் இஷ்டம். அவளுக்கும் அப்படித்தான். சிறுவயதிலிருந்தே மூவரும் இணை பிரியா தோழிகள்..

"என்னடி ஆச்சு எதுக்குடி பேசிக்கிட்டே இருக்கிறப்ப அவன அரஞ்ச அவன் வேற உன்னை அவ்வளவு கோவமா பாத்துட்டு இருக்கான் !"என்று கேட்ட ரம்யாவை கண்ட ஆராதனா

"என் இடுப்புல கைய வச்சா அதான் அறைஞ்சேன் பொண்ணுங்க மேல கை வச்சு பேசுற பழக்கம் என்ன நல்ல பழக்கம்! அதுவும் என்னுடைய உத்தரவு இல்லாம? நான் என்ன அவன் பொண்டாட்டியா உரிமையா என் மேல கைய வைக்க கைய அப்படியே முறித்து போட்டு இருக்கணும் இது முதல் தடவை நல்ல இதோட நிறுத்திட்டேன்!" என்று கூறியவளை கண்ட லாவண்யா

இத முன்னாடியே ஏண்டி சொல்லல. அந்த நாயை அங்கேயே என்னோட ஹில்ஸ கழட்டி அடிச்சிருப்பேனா என்று கேட்ட தோழியை கண்டு புன்னகைத்தவள் நம்மளே பிஞ்ச செருப்பு போட்டு இருக்கோம் அத நீ ஹீல்ஸ்னு வேற பெருமை பேசிக்கிற என்று சொல்லிக் கொண்டே தனது தோழியின் தலையில் செல்லமாக கொட்டியவள்

அவன் எல்லாம் அந்த அளவுக்கு வொர்த் இல்லடி பாத்துக்கலாம் வா என்று பேசிக்கொண்டே தோழிகள் மூவரும் வகுப்பிற்கு சென்றனர்....

செல்லும் இவர்களையே வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் இவளிடம் அடி வாங்கிய அந்த இளைஞன் பிரகாஷ்....



ஹீரோ ஹீரோயின் இவர்களுடைய இன்ட்ரொடக்ஷன் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.



மிலிட்டரி பேஸ்டு கதை இப்பதான் புதுசா ட்ரை பண்றேன். ஃபுல்லாவே மிலிட்டரியா வராது கதைக்குத் தேவை உபயோகப்படுத்தப்படும்
. உங்கள் பொன்னான கருத்துக்களையும் விமர்சனங்களையும் கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
 

Author: kadhaa
Article Title: அத்தியாயம் - 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
47
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top