- Thread Author
- #1
அத்தியாயம் 1
வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்க சமையலறையில் இருந்து வெளியே வந்து பார்த்தார் வாணி!!... இத்தனை நேரம் வானியின் தவிப்புக்கு சொந்தக்காரரான ஜெயராம் தான் காரில் இருந்து இறங்கினார். காரில் இருந்து ஜெயராம் இறங்கி வீட்டுக்குள் வர, " என்னங்க போன்ல நேத்தே வரதா சொன்னீங்க!!... நேத்து முழுவதும் உங்களை எதிர்பார்த்தேன் ஆளையே காணோம்", எந்த தகவலும் இல்லை!..... என்னாச்சுன்னு தெரியாம நேத்துல இருந்து ரொம்ப தவிச்சு போயிட்டேன்" என சொல்ல, ஜெயராமோ, கோபமாய், " வந்ததும் வராததுமா கேள்வி கேட்டு உசுர வாங்குற"... என சீற சட்டென்று அமைதியாகினார். வாணியின் முகம் வாடியது!!... மனைவியின் வாடிய முகத்தை ஜெயராம் கண்டாலும் எங்கு அன்பாக பேசிவிட்டால் மனைவியிடம் உண்மையை உளறி விடுவோம்!!... என்ற பயந்து கொண்டு முகத்தை
கடுத்தமாக்கி கொண்டார்.
ஜெயராமின் பேச்சில்
வாணியின் முகம் வாடி விட, அவரின் சிந்தனை பின்னோக்கி நகர்ந்தது கடந்த 30 வருடத்தில் ஒருமுறை கூட தன் மனம் காயப்படுமாறு பேசாதவர், இன்று இவ்வளவு கோபப்படுவதற்கான காரணம் என்னவாக இருக்கும்!!.... என சிந்திக்க தொடங்கிவிட்டது. அவளின் சிந்தனையை தொடர விடக்கூடாது என்று நினைத்த ஜெயராமோ, " என்ன மசமசனும் நின்னுகிட்டு இருக்க??... கேட்டிருக்க!!.... தலைவலிக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா??... நான் குளிக்க போறேன்!!... என சொல்லிவிட்டு மிக வேகமாக மாடி ஏறி தன்னறைக்குச் சென்றார்.
மாடியேறி செல்லும் ஜெயராமின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டே இருந்தார் வாணி!!.... " எவ்வளவோ வேலையாக இருந்தாலும், வீட்டுக்கு வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழையும் பொழுது மகன் எங்கே??... என்று கேட்டு விசாரிப்பவர் அவன் உடல்நிலை சரியில்லாமல் ஆனா இந்த இரண்டு வருடங்களில் அவன் அறைக்குச் சென்று மகனை பார்த்துவிட்டு அவனிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அவன் துயில் கொண்டிருந்தால் அவன் அருகிலேயே அமர்ந்து விட்டு தன்னறைக்குச் செல்பவர், இன்று மகனைப் பற்றி எதுவும் கேட்காமல் பேசாமல் செல்வது வாணிக்கு வியப்பாக இருந்தது!!... ஜெயராமின் நடவடிக்கைகளை பார்க்கும் போது, "ஏதோ ஒரு பெரிய பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது வாணிக்கு.
சமையலறை சென்று ஜெயராமிற்கு பிடித்த மாதிரி ஸ்ட்ராங்காக ஒரு காபியை கலந்து விட்டு மாடி ஏறி சென்றார்!!... அதற்குள் அறைக்குள் வேகமாக நுழைந்த ஜெயராம் தன் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் கோபத்தியை அணைக்க குளியலறையில் புகுந்து சவரின் அடியில் நின்றார்!!... குளிர்ந்த நீரே சவரில் இருந்து விழுந்தாலும் அவரின் உள்ளமோ, ..... உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது!!.. கோபமோ, வருத்தமோ, ஆற்றாமையோ,பயமோ, எதுவோ ஒன்று அவர் மனதை ரணமாக்கி கொண்டிருந்தது!!... அவரின் இயலாமை கண்ணீராக வெளியேறி தண்ணீரோடு தண்ணீராக வெளியேறியது!!... சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக அலைபாய்ந்த தன் மனதை அடக்கிவிட்டு கொஞ்சம் சமாதானமாகி குளித்து முடித்து துவட்டிக் கொண்டே வெளியில் வர, காபி கப்போடு நின்று கொண்டிருந்தார் வாணி
வாணி தனது கையில் வைத்திருந்த காபி டம்ளரை கொடுக்க, ஜெயராமும் அதை வாங்கி குடித்துக்கொண்டே வாணியின் முகத்தை பார்க்க அவரின் முகம் வாட்டமாய் இருந்தது. அதைப் பார்த்து உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும் எதுவும் சொல்லாமல் அவரைக் கடக்க முயற்சி செய்ய,"என்னங்க மன்னிச்சிடுங்க!!... நீங்க வந்ததும் வராததும், நீங்க என்ன மைண்ட்ல இருக்கீங்கன்னு தெரியாம பேசிட்டேன்"..... என வாணி சொல்ல ஜெயராமின் மனம் உடைந்தது!!... உடனே தன் மனைவியை மெல்ல அழைத்து இங்கே வா?... என அவரின் கைப்பிடித்து மெத்தையில் அமர வைத்து, " என்னையும் மன்னிச்சிருடி!!....இரண்டு நாளும் செம வேலை!!... மேலிடத்தில் இருந்து அக்யூஸ்ட் யாருனு சீக்கிரமா கண்டுபிடிக்கணும்னு, பிரசர் மேல பிரஷர்....ரெண்டு நாளா தூக்கம் இல்ல"... அந்த டென்ஷனில் தான் உன்கிட்ட கத்திட்டேன், சாரி டி!!.... என சொல்ல தன் கணவனின் முகத்தை ஆராய்ந்த படி , "ம்ம்ம்ம்ம் என தலையசைத்தார். ஆனாலும் வாணியின் முகம் ஜெயராமை எடை போட,
வாணியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்," என்னடி ஒரு மாதிரியா பாக்குற!!... ஏதாவது சொல்லனுமா என்கிட்ட என ஜெயராம் கேட்க "ஒன்னும் இல்ல வீட்டை விட்டு வெளியே போயிட்டு உள்ளே நுழையும் போதே, கவின் எங்கன்னு கேட்டு தான் நுழைவீங்க!!.... அவன் உடம்பு சரியில்லாம போனதுக்கு பிறகு சொல்லவே வேண்டாம்!!.. அவன் தூங்கிக்கிட்டு இருக்கான் அவனை தொல்லை பண்ணாதீங்கன்னு நானே சொன்னாலும்!!... , அமைதியா அவன போய் பாத்துட்டு பத்து நிமிஷமாவது அவன் கூட இருந்துட்டு தான் வெளியில வருவீங்க??... இப்போ என்ன ஆச்சு!!....வந்ததுல இருந்து உங்க நடவடிக்கையே சரியில்ல!!... என வாணி கேட்க ஜெயராமின் முகத்தில் குப் என்று வியர்வை பூத்தது.... அது வந்து என ஜெயராம் சொல்ல வர ஜெயராமின் மொபைல் அலறியது!!.... ஜெயராமோ அதை அலட்சியம் செய்து விட்டு, வாணி என ஏதோ சொல்ல வர மீண்டும் செல்போன் அலற, வாணியே பக்கத்தில் இருந்த டேபிளின் மீது இருந்த ஜெயராமின் செல்போனை எடுத்து ஜெயராமின் கையில் கொடுக்க தொடுதுறையில் தெரிந்த இன்ஸ்பெக்டர் கதிரின் எண்ணை பார்க்கவும் நெஞ்சம் படபடத்தது ஜெயராமிற்கு!!.. "என்னாச்சுன்னு தெரியல!!... கதிர் கால் பண்ணி இருக்கான்??... எதுவும் எமர்ஜென்சியா இருக்குமோ!!... என தன் மனதிலே நினைத்து விட்டு , கதிருக்கு அழைப்பை விடுக்க, முதல் ரிங்கிலே அலைபேசியின் அழைப்பை ஏற்றார் கதிர். ஹலோ என ஜெயராம் கேட்க," கதிர் சொல்லிய செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் ஜெயராம்.
எப்படி நடக்கும்??.. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடையும் மீறி எப்படி நடந்துச்சு!!... அவன் எப்படி அங்க போனான்!!... அவங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி அந்த பக்கம் போகாதன்னு சொன்னேனே??... அப்படி இருக்க ஏன் அவன் அந்த பக்கம் போனான்.... உங்களை எல்லாம் அவனுக்கு காவல் வச்சுட்டு தானே வந்தேன்!!... நீங்க எல்லாரும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க... என கோபத்தில் கொந்தளிக்க எதிர் முனையில் அமைதி!!.. கதிர் வாய தொறந்து பதில் சொல்லு, என ஜெயராம் சொல்ல,' சாரி சார்!!... நாங்க பாதுகாப்பா தான் இருந்தோம்... எப்படி இப்படி ஆச்சுன்னு எங்களுக்கே தெரியல??... என கதிர் கூறினார். உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல!!... ஒரு வேலையை கூட உங்களால ஒழுங்கா பண்ண முடியல??... முதல்ல பாரன்சிக் டிபார்ட்மெண்டுக்கு தகவல் கொடுங்க!!...நீங்க யாரும் பாடி பக்கத்துல போயிடாதீங்க??... முக்கியமா ரிப்போர்ட்டர்ஸ உள்ள விட்றாதீங்க??...இன்னும் பத்து நிமிஷத்துல நான் ஸ்பாட்ல இருப்பேன்!!... என சொல்லிவிட்டு அங்கு இருந்த தனது காவல்துறை உடையை அணிந்து கொண்டு, " சரி வாணி ஒரு எமர்ஜென்சி வந்து பேசுறேன்!!... என சொல்லிவிட்டு அவசர அவசரமாக கீழே சென்று தன் டிரைவருக்கு காரை எடுக்க சொல்லி கட்டளை இட, கார் டிரைவரும் ஜெயராமின் அவசரத்தை புரிந்து கொண்டு காரை மிக வேகமாக ஓட்டினார்!!... மின்னல் வேகத்தில் பறந்தது கதிர் சொன்ன ஸ்பாட்டை நோக்கி!!
ஜெயராமின் அவசரத்தை புரிந்து கொண்டு அந்த கார் டிரைவர் அரைமணி நேரத்திற்கு வரவேண்டிய இடத்திற்கு பத்து நிமிஷத்தில் வந்து சேர்ந்தார்!!.. "தடக் தடக்....என்ற பூட்ஸ் கால்களோடு டி எஸ் பிகே உரித்தான கம்பீர நடையுடன் ஜெயராம் நுழைய அங்கிருந்த காவலர்கள் எல்லாம், இவருக்கு வணக்கம் வைக்க எதையும் கண்டு கொள்ளாது, உள்ளே செல்ல கதிர் "சார் வாங்க என கூறிக்கொண்டு கதிர்முன்னே செல்ல கதிர் காட்டிய வழியில் பின்னே சென்றார் ஜெயராம்!!... அந்த வீட்டில் ஒரு அறைக்குள் இருவரும் நுழைய , அந்த வீட்டில் இருந்த பேனில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான் மனோ, மனோவின் நாக்கு வெளியில் தள்ளி அவனின் கண்கள் இரண்டும் சற்று வெளியே வந்து விடுவது போல் படும் பயங்கரமாய் காட்சியளித்தது!!.... இளகிய மனம் படைத்தவர்கள் யாரேனும் அதைப் பார்த்தால் உடனே பயந்து மரணத்தை தழுவ கூட வாய்ப்பிருக்கிறது!!... அந்த அளவுக்கு கொடூரமாக இருந்தது மனோவின் உயிரற்ற பிரேதம்!!
ஜெயராமின் கண்ணில் கண்ணீர் தானாக வழிந்தது!!... இதுவரை இதைவிட கொடூரமான எத்தனையோ மரணங்களை அவர் பார்த்திருந்தாலும் இந்த மரணம் அவரை நிலைகுலைய வைத்தது காரணம் அப்பா அப்பா என தன்னை வாய் நிறைய அழைத்தவன்.... தன்னுடைய மகன் கவின் நண்பரில் அவனும் ஒருத்தன்.... அதனால் நிலை குலைந்து விட்டார்!!.... ஒரு பக்கம் வலித்தாலும் ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமையை நிறைவேற்ற , " கதிர் இந்த பையனோட பேரண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டீங்களா??... பாரன்சிக் டிபார்ட்மென்ட் ஆளுங்க எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டாங்களா??.... பர்தரா என்ன பண்ணுவோமோ??.. அதை பண்ணுங்க.... என கலங்கிய கண்களோடு கட்டளையை இட்டுக் கொண்டிருக்க , இங்கு நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்த்து சிரித்து விட்டு அவ்விடத்திலிருந்து மறைந்தால் கவினின் காதல் காரிகை ஆரா
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள் நண்பர்களே!!

Author: புன்யா
Article Title: KMC 25 கவினின் காதலியும் நானே!! காலனும் நானே!!
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.