KMC கவின் காதலியும் நானே!!காலனும் நானே!!

New member
Joined
Aug 21, 2025
Messages
16
அதிகபட்ச வேகத்தில் காரை மிக வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் கவின். " மச்சான் எதுக்கு இவ்வளவு வேகமா போற?... கொஞ்சம் மெதுவா போ... என சந்துரு உரைக்க, எந்த பதிலும் உரைக்காமல் மிக வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கவின். அவன் மனமெல்லாம் அவளின் காதல் காரிகை ஆராவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
சந்துருவிற்கோ, கவினின் படபடப்பு மனக்கவலை புரிந்ததால் , அவனும் அமைதியாக வந்தான்!!..

இருவரும் ஒரு வழியாக ஆராவின் வீட்டு வாசலில் வர,... அவள் வீடு முழுவதும் ஆட்கள் நிரம்பி இருக்க கவினுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. இவ்வளவு தூரம் ஆராவை பார்க்க வேண்டும் என்று அதிவேகமாக காரை ஓட்டி வந்தவன், காரில் அவள் வீட்டில் அனைவரும் கூடி இருப்பதை பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க மறுத்தான். அவனின் எண்ணத்தை உணர்ந்த சந்துருவோ, " மச்சான் கீழ இறங்கு!!... கடைசியா ஒரு தடவை ஆராவ பாத்துரு,... நீ நெனச்சா கூட அப்புறம் அவ முகத்தை பார்க்க முடியாது!!.. என சொல்ல, கண்கள் கலங்கினான் கவின்.

தன்னுடைய பட படப்பை எல்லாம் மறைத்துக் கொண்டு, ஆராவை பார்க்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்குள் வர , நண்பனின் தோலை பிடித்தவாறு காரில் இருந்து இறங்கி அங்கிருந்த கூட்டத்தை சற்று நகர்த்தி உள்ளே செல்ல, அங்கிருந்த காவலர்கள் " வாங்க தம்பி??.. நீங்க எதுக்கு இங்க வந்தீங்க!!.. உங்கள பாத்தா?.. ஆராவோட மாமன் உங்க கிட்ட சண்டை போடுவான் "... என எச்சரிக்கை செய்ய பதில் சொல்லாமல் பித்து பிடித்தவன் போல நின்றான் கவின்!!.. "ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்துட்டு போயிடுறோம்.... என சந்துரு பதில் சொல்ல , முன்னேறினான் கவின். அவன் வந்ததிலிருந்து யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.... மெல்லமாய் நகர்ந்து அந்த வீட்டின் வாசலில் கால் வைக்க,... நெஞ்சை அடைத்துக் கொண்டு வயிற்றை பிசைவது போல்,.. கால்கள் தள்ளாடியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மெல்லமாய் உள்ளே நுழைய அங்கிருந்த பேன் ஒன்றில் சேலையில் தூக்கில் தொங்கி நாக்கு வெளியில் தள்ளியபடி தொங்கிக் கொண்டிருந்தாள் கவினின் காதல் காரிகை ஆரா. அழகுப் பதுமையாக பார்த்தவளை இன்று அகோரமாக உயிர் இல்லா பிணமாக இருந்தவளை கண்டு, தாங்க முடியாத துயரத்தில்" ஏண்டி என்னை விட்டுட்டு போன??.. நீ இல்லாம எப்படி நான் வாழ்வேன்!!... என கதற அவன் அறைக்குள் ஓடி வந்தார் அவனுடைய அம்மா வாணி!!.

கண் திறக்காமலே கதறியவனை கட்டி அணைத்து, " ஒண்ணுமில்ல கவின் , ஆராவுக்கு ஒன்னும் ஆகல??.. நீ தூங்கு என சொல்லிக்கொண்டு கவினின் முதுகை தடவி கொடுத்தார்!! கவின் கண்ணை திறக்காமலே ஆரா எங்கம்மா இருக்கா??.. என கேட்க உன்னைய பாக்குறதுக்கு தான் வந்துகிட்டு இருக்கா!!.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா??.. நீ தூங்கு!!... எனச் சொல்லி கவினின் தலை தேசத்தை வருட, சிறு குழந்தையாக கண்ணை திறவாமலே சரிமா என கூறினான் கவின்!!.. கவினின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த சந்துருவும் கவினின் அறைக்கு வந்து, " என்னாச்சும்மா எனக் கேட்க?... எப்பவும் போல தான் சந்துரு!!... என கண்கள் கலங்கினார் வாணி. சிறிது நேரத்தில் அன்னையின்
அணைப்பில் கவின் ஆசவாசப்பட்டு சிறிது கண் மூடிட , அவன் மீது ஒரு பெட்ஷீட்டை போர்த்தி விட்டு வெளியில் வந்தனர் வாணியும் சந்துருவும்.

அவ இறந்து ரெண்டு வருஷம் ஆகுது,... இன்னும் அவளோட நினைவுல இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறான்!!... "பாக்காத வைத்தியம் இல்ல போகாத கோயில் குளம் இல்லை?.. இன்னும் சரியாகவே இல்லை, என் புள்ளைக்கு ஏன் இந்த நிலமை??.. நாங்க யாருக்கு என்ன துரோகம் பண்ணினோம்!!... என கண்கலங்க , " அழுகாதீங்கம்மா சீக்கிரத்துல கவின் பழையபடி மாறிடுவான்!!.. என சமாதானம் செய்தான் சந்துரு.

இங்கு,... காற்று வேகமாக அடிக்க ஜன்னலில் மீது போடப்பட்டிருந்த திரைச்சீலை எல்லாம் காற்றில் அலைபாய திறந்திருந்த ஜன்னலில் ஒரு பெண்ணின் நிழல் அடர் கருப்பாய் தெரிந்தது.

ஆம்.... அவள் ஆராவே தான்.

துயில் கொள்ளும் தன்னுடைய காதலனை பார்த்து சிரித்து விட்டு மெல்ல காற்றில் மறைந்து போனாள்!!..
 
Author: புன்யா
Article Title: KMC கவின் காதலியும் நானே!!காலனும் நானே!!
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Aug 21, 2025
Messages
11
சூப்பர் 👌👌 திரில்லர் story ah கொஞ்சம் பயமாக இருக்கே 😳😳
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
இங்கு,... காற்று வேகமாக அடிக்க ஜன்னலில் மீது போடப்பட்டிருந்த திரைச்சீலை எல்லாம் காற்றில் அலைபாய திறந்திருந்த ஜன்னலில் ஒரு பெண்ணின் நிழல் அடர் கருப்பாய் தெரிந்தது.
இது காதலா கதையா? ஹாரர் கதையா? ஆனா இதுல எனக்கு காதல் தவிப்பும் பிரிவின் வலியும் தான் தெரியுது 🥹 ஏன் ஆரா அப்படி பண்ணா? இனி கவின் என்ன பண்ணுவான்? ஏன் இப்படி ஒருத்தனை விட்டு போக நினைச்சா 🥹 கண்டிப்பா கதை ஒரு தாக்கம் கொடுக்க போவது உறுதி. ஆமா தானே ரைட்டரே🫣
 
Member
Joined
Aug 17, 2025
Messages
34
அதிகபட்ச வேகத்தில் காரை மிக வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் கவின். " மச்சான் எதுக்கு இவ்வளவு வேகமா போற?... கொஞ்சம் மெதுவா போ... என சந்துரு உரைக்க, எந்த பதிலும் உரைக்காமல் மிக வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கவின். அவன் மனமெல்லாம் அவளின் காதல் காரிகை ஆராவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
சந்துருவிற்கோ, கவினின் படபடப்பு மனக்கவலை புரிந்ததால் , அவனும் அமைதியாக வந்தான்!!..

இருவரும் ஒரு வழியாக ஆராவின் வீட்டு வாசலில் வர,... அவள் வீடு முழுவதும் ஆட்கள் நிரம்பி இருக்க கவினுக்கு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. இவ்வளவு தூரம் ஆராவை பார்க்க வேண்டும் என்று அதிவேகமாக காரை ஓட்டி வந்தவன், காரில் அவள் வீட்டில் அனைவரும் கூடி இருப்பதை பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்க மறுத்தான். அவனின் எண்ணத்தை உணர்ந்த சந்துருவோ, " மச்சான் கீழ இறங்கு!!... கடைசியா ஒரு தடவை ஆராவ பாத்துரு,... நீ நெனச்சா கூட அப்புறம் அவ முகத்தை பார்க்க முடியாது!!.. என சொல்ல, கண்கள் கலங்கினான் கவின்.

தன்னுடைய பட படப்பை எல்லாம் மறைத்துக் கொண்டு, ஆராவை பார்க்க வேண்டும் என்று எண்ணம் அவனுக்குள் வர , நண்பனின் தோலை பிடித்தவாறு காரில் இருந்து இறங்கி அங்கிருந்த கூட்டத்தை சற்று நகர்த்தி உள்ளே செல்ல, அங்கிருந்த காவலர்கள் " வாங்க தம்பி??.. நீங்க எதுக்கு இங்க வந்தீங்க!!.. உங்கள பாத்தா?.. ஆராவோட மாமன் உங்க கிட்ட சண்டை போடுவான் "... என எச்சரிக்கை செய்ய பதில் சொல்லாமல் பித்து பிடித்தவன் போல நின்றான் கவின்!!.. "ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்துட்டு போயிடுறோம்.... என சந்துரு பதில் சொல்ல , முன்னேறினான் கவின். அவன் வந்ததிலிருந்து யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை.... மெல்லமாய் நகர்ந்து அந்த வீட்டின் வாசலில் கால் வைக்க,... நெஞ்சை அடைத்துக் கொண்டு வயிற்றை பிசைவது போல்,.. கால்கள் தள்ளாடியது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மெல்லமாய் உள்ளே நுழைய அங்கிருந்த பேன் ஒன்றில் சேலையில் தூக்கில் தொங்கி நாக்கு வெளியில் தள்ளியபடி தொங்கிக் கொண்டிருந்தாள் கவினின் காதல் காரிகை ஆரா. அழகுப் பதுமையாக பார்த்தவளை இன்று அகோரமாக உயிர் இல்லா பிணமாக இருந்தவளை கண்டு, தாங்க முடியாத துயரத்தில்" ஏண்டி என்னை விட்டுட்டு போன??.. நீ இல்லாம எப்படி நான் வாழ்வேன்!!... என கதற அவன் அறைக்குள் ஓடி வந்தார் அவனுடைய அம்மா வாணி!!.

கண் திறக்காமலே கதறியவனை கட்டி அணைத்து, " ஒண்ணுமில்ல கவின் , ஆராவுக்கு ஒன்னும் ஆகல??.. நீ தூங்கு என சொல்லிக்கொண்டு கவினின் முதுகை தடவி கொடுத்தார்!! கவின் கண்ணை திறக்காமலே ஆரா எங்கம்மா இருக்கா??.. என கேட்க உன்னைய பாக்குறதுக்கு தான் வந்துகிட்டு இருக்கா!!.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா??.. நீ தூங்கு!!... எனச் சொல்லி கவினின் தலை தேசத்தை வருட, சிறு குழந்தையாக கண்ணை திறவாமலே சரிமா என கூறினான் கவின்!!.. கவினின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த சந்துருவும் கவினின் அறைக்கு வந்து, " என்னாச்சும்மா எனக் கேட்க?... எப்பவும் போல தான் சந்துரு!!... என கண்கள் கலங்கினார் வாணி. சிறிது நேரத்தில் அன்னையின்
அணைப்பில் கவின் ஆசவாசப்பட்டு சிறிது கண் மூடிட , அவன் மீது ஒரு பெட்ஷீட்டை போர்த்தி விட்டு வெளியில் வந்தனர் வாணியும் சந்துருவும்.

அவ இறந்து ரெண்டு வருஷம் ஆகுது,... இன்னும் அவளோட நினைவுல இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறான்!!... "பாக்காத வைத்தியம் இல்ல போகாத கோயில் குளம் இல்லை?.. இன்னும் சரியாகவே இல்லை, என் புள்ளைக்கு ஏன் இந்த நிலமை??.. நாங்க யாருக்கு என்ன துரோகம் பண்ணினோம்!!... என கண்கலங்க , " அழுகாதீங்கம்மா சீக்கிரத்துல கவின் பழையபடி மாறிடுவான்!!.. என சமாதானம் செய்தான் சந்துரு.

இங்கு,... காற்று வேகமாக அடிக்க ஜன்னலில் மீது போடப்பட்டிருந்த திரைச்சீலை எல்லாம் காற்றில் அலைபாய திறந்திருந்த ஜன்னலில் ஒரு பெண்ணின் நிழல் அடர் கருப்பாய் தெரிந்தது.

ஆம்.... அவள் ஆராவே தான்.

துயில் கொள்ளும் தன்னுடைய காதலனை பார்த்து சிரித்து விட்டு மெல்ல காற்றில் மறைந்து போனாள்!!..
Aiyo pei 😶‍🌫️😶‍🌫️😶‍🌫️
 
New member
Joined
Aug 16, 2025
Messages
18
செமையா இருந்தது,கவின் ஓட மன நிலை ஆராவுக்கு தெரிஞ்சிருந்தா இந்த முடிவு எடுத்திருக்க மாட்டா,மரணம் சுலபமானது தான்-வாழ்றது தான் கஸ்டம்....வெய்டிங் பா
 
Thank you frd 😊
 
New member
Joined
Aug 21, 2025
Messages
16
இது காதலா கதையா? ஹாரர் கதையா? ஆனா இதுல எனக்கு காதல் தவிப்பும் பிரிவின் வலியும் தான் தெரியுது 🥹 ஏன் ஆரா அப்படி பண்ணா? இனி கவின் என்ன பண்ணுவான்? ஏன் இப்படி ஒருத்தனை விட்டு போக நினைச்சா 🥹 கண்டிப்பா கதை ஒரு தாக்கம் கொடுக்க போவது உறுதி. ஆமா தானே ரைட்டரே🫣
ஆமா..... கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவுக்கு சுவாரசியமா சொல்லுவேன்னு நினைக்கிறேன்.. கண்டிப்பாக உங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். 😊
 
Top