New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 10
- Thread Author
- #1
#கதைமழை_குறுநாவல்_போட்டி
#kmc_competition
#KMC_14
" நோ.. நெவர் எவர்... எப்பவும் உன் கிட்ட தோற்க மாட்டான் இந்த ஈஸ்வர்... அதும் கேவலம் என் உடம்புக்காக காதலிச்சு, துரோகம் செஞ்சு என் தொழிலை முடக்கி, என் உயிரை கொடுத்து உழைச்ச மூணு படங்களை தோல்வி அடைய வச்ச உன் கிட்ட எப்பவும் நான் தோற்கமாட்டேன் லிகிதா... யூ டாமிட் பிளடி @##**.. என அவ்விடமே அதிர கத்தியவன்,
லெட்ஸ் கவுண்ட் மை ஹாரிபில் டேஸ் லிகிதா.. உன் பணக்கார திமிரை அடக்க எவ்வளவு ஆழமான நீ எனக்கு ஒரு துரோகத்தையும் தோல்வியையும் கொடுத்தியோ அதை விட நூறு மடங்கு வேகமா எழுந்து என் வெற்றியையும் என் வாழ்க்கையையும் உன் கண்ணு முன்னாடி சந்தோஷமா அனுபவிப்பேன்..." என கர்ஜித்துக் கொண்டவன் எதிரே சுவற்றில் இருந்த ஒரு பெண்ணின் விழிகளை குத்திக் கிழித்துக் கொண்டிருந்தான்..
மது, மாது, சூது, போதை என எவ்விதத்திலும் தன்னை துன்புறுத்திக் கொள்ளாமல் தான் உயிராய் காதலித்து ஏமாற்றி விட்டு போன தன் முன்னால் காதலியான பிரபல நாயகி லிகிதா தன்ராஜ் கொடுத்த வலிகளை எண்ணி,
தான் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கான கதையை சிந்தித்துக் கொண்டு, எரிக்கும் எரிமலை பார்வையை கண்களில் ஏற்றிக் கொண்டு, கால் மேல் கால் போட்டு, நின்று வேட்டையாட காத்திருக்கும் சிங்கத்தின் பிடரி சிலிர்ப்பது போல, தன் கழுத்து வரை நீண்ட கேசம் காற்றில் பறக்க, நடமாடும் அரிமாவாய் அமர்ந்திருந்தான் ஈஸ்வர் எனும் சிவருத்ரேஸ்வரன்....
ஆறு மாதங்களாக அவன் கதைக்கு ஏற்றார் போல நவரசத்தையும் பொழியும் விழிகளை தேடி தேடி தொலைந்து போனவன், எதேச்சையாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் தரிசனத்திற்கு செல்ல,
அங்கோ அவன் கற்பனையில் எண்ணிய அனைத்து பொருத்தங்களும் கொண்டு, பிரம்மன் மோகத்தின் உச்சத்தில் நின்று செதுக்கியது போல பெண் சிலை ஒன்று அவன் எதிரே நின்று கண்கள் திறந்த படியே இதழ்கள் முணுமுணுக்க, கண்ணீரில் நனைந்த விழிகளோடு கடவுளை மனதார வேண்டி கொண்டிருந்தது...
விழி திறந்தவள் எதிரே இரும்பை விழுங்கிய இறுகி முகத்தோடு நின்றிருந்த ஈஸ்வரனை பார்த்து ஒரு நொடி கண்கள் அகல விரித்து பயந்தவள், உடல் திடுக்கிட்டு குலுங்கி கால் இடறி கீழே சாயப் போக,
இடையோடு அவளை வளைத்துப் பிடித்து தாங்கியவன் அவளை தன் லேசர் விழிகளால் அணுவணுவாக அளவிட்டு கொண்டிருந்தான்...
நொடியில் தன்னை சமன் செய்து கொண்டு எழுந்தவள், விழிகள் அவனை எரிக்கும் பார்வையில் கோபத்தை கக்கிட,
அவனோ அந்த விழிகளை தான் விழி சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
அவளை பற்றிய விவரங்கள் அறிய அவள் கைபிடித்து நிற்க கூற,
அவளோ அவனை வெகுவாய் முறைத்து, " தெண்டி.. போய்க்கோ டா.. திரிச்சி நின்னை ஈ ஸ்தலத்தில் கண்டெங்கில் ஞான் நின்னை சவட்டி கழியும்..." என விரல் நீட்டி மிரட்டி தன் செப்பு இதழ்கள் முணுமுணுக்க திட்டிக் கொண்டே, அவனை தள்ளி விட்டு சென்றாள் ரிதி சம்ருதா..."
அவள் நினைவிலேயே ஈஸ்வர் ஆலயத்தில் இருந்து வெளியே வர, அங்கு வாயிலின் எதிரே அமர்ந்து பூக்களை தொடுத்து ஓர் மூதாட்டியோடு சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் ..
அவள் விழிகளின் அசைவுகள் மட்டும் அவன் எரிமலை விழிகளில் இருந்து தப்பவில்லை... அந்த நொடி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான் ருத்ரேஷ்வரன்..
சிங்கத்தின் விழிகளில் விழுந்த அழகான மான்குட்டியின் நிலை என்ன?
காதலை வெறுக்கும் நாயகனும், காதலை வெறுக்கும் நாயகியும் மொழியாலும் விழியாலும் மோகமும் காதலும் கொண்டு சதிராடப் போகும் அவர்களின் வாழ்வு என்னவாகும்??

Author: நீல தூரிகை
Article Title: Teaser
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.