போட்டியின் அறிவிப்பு!

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
WhatsApp Image 2025-08-11 at 17.55.00.jpeg

கதைமழை போட்டி

இதயங்களை நனைக்கும் ரகசியக் காதல் கதைகள்
மழைத் துளிகள் விழும் பொழுதெல்லாம் மனதில் எழும் கதைச் சுரங்கங்களை, வார்த்தைகளால் மலரச் செய்யும் நேரம் இது.

வாசகர்களின் மனதை மயக்கும் காதல், மனக்கசப்பு, வெறுப்பு, வெற்றி, தியாகம்… எல்லாவற்றையும் காகிதத்தில் மழையாக பொழியவைக்கிறோம்.
ஆனால், இந்த மழைத்துளிகளுக்கு பின்னால் இருக்கும் எழுத்துக் கலைஞர் யார்?

அந்த மர்மம், போட்டி முடியும் வரை யாருக்கும் தெரியாது.

இது ஒரு கொண்டாட்டமாக என் வாசகர்களுக்கு அமையும் என்று நம்புகிறேன். என்னால் முடிந்த ஆற்றலை இதில் முழுமையாக போட போகிறேன்.
தவறுகள் செய்தால் சுட்டிக் காட்டுங்கள் என்னிடம். சொல்லியும் கொடுங்கள்.
புது புது கதைகள் புது எழுத்தாளர்கள் என புது விருந்து உங்களுக்காக காத்திருக்கிறது.
ஆரம்பிக்கலாமா!!!


போட்டி தீம்
இது கட்டாயமல்ல. வாசகர்களுக்கு எந்த தீமில் எழுத விருப்பமோ தடையில்லாமல் தாராளமாக எழுதலாம்.
• காதல், ஆண்டி ஹீரோவின் எதிர்மறை ஈர்ப்பு, ஆல்பா மேல்(Alpha male), கட்டாய கல்யாணத்திற்கு பின் தோன்றும் காதல் சடுகுடு, பழிவாங்கும் நோக்கம் இவைகள் எதுவாகவும் நீங்கள் எழுதலாம். ஆனால் அதீத வன்முறை, சங்கடமான காட்சிகளை கதையில் தவிர்க்கவும்.
• ஒவ்வொரு அத்தியாயமும் வாசகர்களின் நெஞ்சில் புயலை கிளப்பும்.
• கதை முடிவடையும் தருணத்தில் மட்டுமே, எழுத்தாளர் முகமூடி அகலும்.

போட்டியின் விதிமுறைகள்
1. 25 அத்தியாயங்கள் மற்றும் 25,000 வார்த்தைகள் கொண்ட குறுநாவல், ஒரே எழுத்தாளரால் எழுதப்பட வேண்டும். அதற்கு மேலும் எழுதலாம். அது எழுத்தாளரின் விருப்பம். ஆனால் கதையின் இறுதி அத்தியாயம் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கவேண்டும் என்பது கட்டாயம்.
2. கதையில் எழுத்தாளர் அடையாளம் வெளிப்படக்கூடாது. எழுத்தாளர்கள் அவர்களின் அடையாளத்தை மறைத்து கதையை எழுத வேண்டும். எனவே உங்களுக்கென ஒரு அடியாளத்தை முக நூலில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.
3. ஒவ்வொரு அத்தியாயமும் குறைந்தது 1000 வார்த்தைகள் இருக்க வேண்டும். அதிகபட்சம் வரம்புகள் இல்லை.
4. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் முழுமையான கதை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
5. போட்டி முடிவுகளும், வெற்றிபெற்றவர்களின் அடையாளமும் தளமே தெரிவிக்கும்.
6. இதுவரை எங்கும் பதிப்பிக்காத கதைகளையே இங்கு நீங்கள் எழுத வேண்டும். போட்டியின் கதைகள் இதற்கு முன்பு எந்த ஒரு தளத்திலோ, செயலிலோ வெளியிடப்பட்டதாக இருக்ககூடாது.
7. கதையின் தலைப்பு போட்டி ஆரம்பிக்கும் நாளிற்கு முன்பே தேர்ந்தெடுத்து தெரிவிக்க வேண்டும்.
8. பதிவு செய்யும் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் தனித்துவமான ஐடி கொடுக்கப்படும். கதையின் பெயரை முடிவு செய்த பின், மேலும் அவர்களுக்கு திரிகள் உருவாக்கி தரப்படும்.


பரிசுகள்
• முதல் பரிசு: ₹3000
• இரண்டாம் பரிசு: ₹2000
• மூன்றாம் பரிசு: ₹1000
• நான்காம் பரிசு: ₹500
• நான்காம் பரிசு: ₹500
• ஒருவர் அதிகபட்ச கதைகளை எழுதி கொடுத்த தேதிக்குள் முடிப்பவருக்கு - ₹500 மற்றும் சான்றிதழ்
• மேலும் எழுத்தாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று வாசகர்களுக்கும் பரிசுகள் உண்டு.
• கதைகளை நன்முறையில் முடித்த அனைவருக்கும் இணைவழி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்
• பதிவு துவக்கம்: 30/08/2025
• பதிவு முடிவு: 30/11/2025
• எழுத்தாளர் அறிவிப்பு மற்றும் பரிசளிப்பு: 15/12/2025

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்கள்:
பெயர் :
புனைபெயர் (PEN NAME):
வாட்சப் எண்:
கதையின் தீம்:

ஆகிய தகவல்களை thanimaikadhalinovels@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

பின்னர், தகவலை எனக்கு அனுப்பிய பின்பு thanimaikadhalinovel.com என்ற இணையத்தில் உங்கள் பதிவை செய்து கொள்ளுங்கள். தளத்தில் பதிவு செய்யும் பொழுது நிக் நேம் (Nick name) ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள் அவை உங்கள் பெயராகவோ உங்கள் அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாகவோ இல்லாமல் இருப்பது முக்கியம்.

இப்போதே உங்க எழுத்து பயணத்தை தொடங்குங்கள். யாருக்கு தெரியும் இதில் வெற்றியாளர் நீங்களாக கூட இருக்குலாம்.
இது நட்பையும் எழுத்து உறவையும் மேம்படுத்தும் நோக்கம் மட்டுமே. ஏதேனும் முரண்பாடுகள் தோன்றினால் தயங்காமல் என்னிடம் தெரிவிக்குலாம்.
போட்டியில் சந்திப்போம்!!!
 

Attachments

  • WhatsApp Image 2025-08-11 at 17.54.21.jpeg
    WhatsApp Image 2025-08-11 at 17.54.21.jpeg
    136.3 KB · Views: 5
  • WhatsApp Image 2025-08-11 at 17.54.21.jpeg
    WhatsApp Image 2025-08-11 at 17.54.21.jpeg
    136.3 KB · Views: 4
Last edited:
Top